News
ஞானசாரவுக்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம்
பிக்குகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையை ஞானசார தேரர் நிறைவேற்றியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம் சூட்டியுள்ளார். நேற்று (27) காலை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம அத்தததஸ்ஸி மகாநாயக்க தேரரையும் அவர் சந்தித்திருந்தார். இதன் போது கருத்து வெளியிட்டிருந்த அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அத்ததஸ்ஸி தேரர், வரலாற்றுக் காலம் தொட்டு நாட்டில் எழுந்த பல்வேறு பிரச்சினைகளின்…
சேனக டி சில்வா ஐ.தே.கவுடன் இணைவு
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக டி சில்வா தலைமை வகிக்கும் ‘அபே ஜாதிக பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேனக டி சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியதுடன், 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், இவர்கள் இருவரும் கடந்த அரசாங்கத்தினால் சிறைபிடிக்கப்பட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது. சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும், இன்னும் சில நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியுடன்…
சிங்களவர்களிடமே மத்திய அரசின் பலம்: வாசு
இலங்கையில் “மத்திய அரசின்” பலம் சிங்களவர்களான பெரும்பான்மை இனத்திடம் உள்ளது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை நிராகரிக்க முடியாது என மஹிந்த அணி ஆதரவு எம்.பி.யான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஒற்றையாட்சிக்குள் நாடு பிளவுபடும் என்ற கூட்டமைப்பின் “வாதத்தை” ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண் பொலிஸாரின் தங்குமிடத்துக்குள் புகுந்த கான்ஸ்டபிள் குறித்து விசாரணை
பெண் பொலிஸார் தங்கும் தங்குமிடத்துக்குள் களாவாக நுழைந்ததாக கூறப்படும் அம்பாறை பொலிஸ் பிரிவின் பொலிஸ் நிலையம் ஒன்றின் பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் ஊடாக விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல்.ரணவீரவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்காளர்களின் எண்ணிக்கை அதிப்பு
கடந்த வருடத்தை விட வாக்காளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த வருடம் வாக்காளர்களின் எண்ணிக்கை 15,421,201 ஆக காணப்பட்டதோடு 2014 ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 15,047,490 ஆக காணப்பட்டதாகவும் தேர்தல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த வாக்காளர் எண்ணிக்கையில் இந்த வருடம் பாரிய அதிகரிப்பு காணப்படுவதோடு இதன் எண்ணிக்கை 373,712 ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பட்டியல் மூலம் இந்த நாட்டில் அதிகமாக…
இரண்டு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
– Abdul Wahid Mohamed Mahroof – எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லா விட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டில் பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்களின் சனத் தொகை குறைவாகவும் காணப்படுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை 4 மில்லியன்களாகும். 1998-2000 ம் ஆண்டு வரையான…
மைத்திரிக்கு ஆதரவு தெரிவிக்கும் சமல்!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றியடையச் செய்ய எனது முழு ஆதரவினையும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு வழங்குவேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (26) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தக் கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக குழு ஒன்றை நியமிக்குமாறும் சமல் ராஜபக்ஸ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் நிலவும் உட்பூசல்களைத் தடுக்க ஜனாதிபதியின் தலையீட்டின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்….
மெகசின் சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு!
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெளிக்கடை சிறைச்சாலைகளுக்கான பிரதான வாயில் முற்றாக மூடப்பட்டுள்ளதோடு எந்தவொரு வாகனமும் அதனூடாக பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். சில நாசகார கும்பல்கள் சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்து குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதே பாதுகாப்பு…
வெலிமடை விபத்தில் ஒருவர் பலி
– க.கிஷாந்தன் – வெலிமடை, பொரலந்தை, என்ட்ருகொல்ல பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதான 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி நபர், பொரலந்தை தபால் நிலையத்தில் சேவையாற்றி வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். என்ட்ருகொல்ல பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்செல்ல வந்த லொறியொன்று, வீதியில் சென்றுக்கொண்டிருந்த மேற்படி நபரின் மீது மோதியுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின்…
நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம் – அமைச்சர் றிஷாத்
தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மர்ஹூம் அஷ்ரப் எழுதிய எழுச்சிப் பாடல்களை தெருக்களிலும் மேடைகளிலும் ஒலிபரப்பி உணர்வுகளைத் தூண்டி முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்கும் தந்திரோபாயங்களுக்கு இனியும் அவர்கள் ஏமாறத் தயாரில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உட்பட…
கடந்த ஆண்டு அரசுக்கு 47.5 மில்லியன் வருவாய்
யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் கடந்த ஆண்டு அரசிற்கு கிடைத்த வருமானம் 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் மட்டும் கடந்த ஆண்டில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறல், புதுப்பித்தல் நடவடிக்கைகள் மூலம் அரசிற்கு கிடைத்த வருமானத்தின் தொகை 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம் மாதம் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 35…
மெகா பொலிஸ் திட்டத்தில் எந்தவொரு கொம்பனும் தலையிட முடியாது – சம்பிக்க
மெகா பொலிஸ் அபிவிருத்தி செயற்திட்ட முன்னெடுப்புகளின் போது எந்தவொரு கொம்பனும் தலையிட முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மெகா பொலிஸ் அபிவிருத்தித் திட்டமானது நாட்டின் எதிர்கால நலனை உத்தேசித்து முன்னெடுக்கப்படும் ஒரு முக்கிய செயற்திட்டமாகும். இதன்போது ஒருசிலருக்கு சிற்சிறு பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. எனினும் அமைச்சுப் பதவிகள், பணபலம், ஊடகப் பின்புலம் என்பவற்றைக் கொண்டு யாரேனும் இச்செயற்திட்டத்திற்கு தடை போட முயன்றால் அவர்கள் தோற்றுப் போய்விடுவார்கள்….
