News
மகப்பேற்றின் போது சிசுவின் தந்தைக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை
மகப்பேற்றின் போது சிசுவின் தந்தைக்கு மூன்று நாள் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனைவியின் பிரசவத்தின் போது கணவருக்கும் குறைந்தபட்சம் மூன்று நாள் விடுமுறை வழங்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி நட்டாசா பாலேந்திரா தெரிவித்துள்ளார். மகப்பேற்றின் போது தந்தையாருக்கும் விடுமுறை வழங்கும் இந்த நடைமுறைக்கான சட்ட அங்கீகாரத்தை வழங்கும் வரைவுத்திட்டமொன்றை அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது. பிள்ளை பிறந்ததன் பின்னர் தாயின் பொறுப்பிற்கு நிகராக தந்தைக்கும்…
இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வாழ்த்து
இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில், இந்தியா ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளனர். இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள் பலரும்…
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்
– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி வரை (10.2.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார். கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று…
500 ஆசிரியர் ஆலோசகர்கள் ஆர்ப்பாட்டம்
மொனராகலை மாவட்டத்தில் 500 ஆசிரியர் ஆலோசகர்கள் தங்களை பணியில் அமர்த்துமாறு கோரி ஊவா மாகாணச் சபையின் முன் தற்போது கவணயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஆட்சியாளர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளர் – மங்கள
வெளிநாட்டு தூதுவராலயங்களின் பிரதானிகளாக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் ஆட்சியாளர்களது முதன்மைக் குடும்பத்து உறவினர்கள் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். தூதுவராலயங்களுக்கு சொந்தமான கட்டடங்களை விற்பனை செய்து அந்தப் பணத்தை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி. யினால் முன்வைக்கப்பட்ட வெளிநாட்டு உடன்படிக்கைகளுடன் தொடர்புபட்ட பத்து நாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…
பேனாவால் குத்திய ஆசிரியர் : வைத்தியசாலையில் மாணவன்
– கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01 முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் மாணவன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக மாணவனின் பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவன் ஒருவனே லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலிய…
பெண்ணின் வயிற்றிலிருந்த எட்டுக்கிலோ கட்டி அகற்றப்பட்டது
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் நேற்று மேற்கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நான்கு மணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் மூலம் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக டிக்கோயா கிளங்கன் வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தனக்கு வயிற்று வலி என நீண்ட காலமாக அவதியுற்று வந்த இப்பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைக்கென சென்றுள்ளார். இவரை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதாக…
டொனால்ட் டிரம்ப்’பிற்கு ஹிலாரி கிளிண்டன் செருப்படி பதில்..!
வாஷின்டன் நகரில் ‘CNN’ தொலைகாட்சி நேர்காணலில் கலந்துக் கொண்ட ஹிலாரி கிளின்டனிடம், ‘ஏர்ரம் தாரிக் முனீர்’ என்ற இஸ்லாமிய பெண்மணி, சமீப காலமாக அமெரிக்காவில் அதிகரித்துவரும் ‘இஸ்லாமோபோபியா’ குறித்து கேள்வி எழுப்பினார். தாரிக் முனீரின் வார்த்தைகளுக்கு ஒட்டுமொத்த அரங்கமே கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தது. ஹிலாரியும், தன் பங்குக்கு கைதட்டி, இஸ்லாமிய பெண்ணுக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொண்டதுடன், டொனால்ட் டிரம்ப்’பின் முஸ்லிம் விரோத போக்கு வெட்கக் கேடானது; அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்றார்.
பெளத்தன் என்ற வகையில் வெட்கமாக உள்ளது – ரணில்
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தேரர்கள் சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் வளாகத்துக்குள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் சட்டத்துக்கு முரணானது என்றும், இதனால், பௌத்தனாக தான் வெட்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் மல்வத்தை பீடாதிபதி மற்றும் கோட்டையின் பிடாதிபதி ஆகியோருக்கு அறிக்கை…
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளால் விசனமடையும் பாதைசாரிகள்!
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரம் A34பிரதான வீதியில் பாதைசாரிகள் மஞ்சள் கோட்டு கடவையால் கடந்து செல்வதற்கு சில வாகனபோக்குவரத்து சாரதிகள் இடையூரு ஏற்பட்டுத்துவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சில சாரதிகள் வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்றத் தவருகின்றனர் கடந்த ஆண்டில் வாகன விபத்ததுகள் காரணமாக பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. இந்த வருடமும் அவ்வாறு எற்பட்டு விடுமோ என்று அச்சத்துடனே பயணத்தை தொடர வேண்டியுள்ளதாகவும் பாதைசாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடைகளில் கொள்ளை
– ஜவ்பர்கான் – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் இன்று (26) அதிகாலை இரண்டு பலசரக்கு விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி மத்திய வீதியிலுள்ள பலசரக்கு விற்பனை நிலையமும் காத்தான்குடி அரபிக்கலாசாலை வீதியிலுள்ள பலசரக்கு விற்பணை நிலையமும் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து, காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார்…
முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு வாழமுடியாது – ஒபாமா!
‘டொனால்ட் டிரம்ப்’ போன்றவர்களின் முஸ்லிம் விரோத விஷமப் பிரச்சாரங்களுக்கு இரையாகிவிடாதீர்கள், முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு நாம் நிம்மதியாக வாழமுடியாது என்று, அமெரிக்கர்களை அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.
