News
முல்லைத்தீவு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் உருக்கம்
– ஊடகப்பிரிவு – தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாதெனவும், பெரும்பான்மை இனத்தின் சூழ்ச்சிகளுக்குள் அகப்படக் கூடாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (25) காலை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஷாத் பதியுதீன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், மஸ்தான் எம்.பி. ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் தமது ஆதங்கங்களையும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தினார். இதன்போது அமைச்சர்…
புதிய சட்டமூலத்தின் நோக்கம் பௌத்த தேரர்களின் குரலை ஒடுக்குவதே!
பௌத்த தேரர்களின் குரலை ஒடுக்குவதற்காகவே அரசாங்கத்தினால் புதிய ஒழுக்க விதிகளை உள்ளடக்கி, சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எஹெலியகொட பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பௌத்த பிக்குகளின் நடத்தை குறித்து ஒழுக்க விதிகள் உள்ளடக்கிய சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் தயாராக இருகிறது.அது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். அவ்வாறு இல்லாவிட்டால், தேரர்களுக்கிடையிலும் பொதுமக்களுக்கிடையிலும் பாரிய எதிர்ப்பு உருவெடுக்குமென அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை,பௌத்த…
தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடையோர் இம் மாத இறுதிக்குள் கைது
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த மாத இறுதிக்குள் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய உள்ளனர். இதேவேளை,தாஜூதீனை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, லெப்டினன்…
அரச மருத்துவரின் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் – ராஜித
தமக்கெதிராக அரச மருத்துவ சம்மேளனத்தினர் வழக்குத் தாக்கல் செய்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் அமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக முன்னதாக அரச மருத்துவர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறித்த பல்கலைக்கழக மாணவர்களின் உள்ளக பயிற்சிகளுக்கு அரச மருத்துவமனைகளில் அனுமதி வழங்கியமைக்கு எதிராகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, தமது தரப்பு நியாயத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் சேனாரட்ன, நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு ஏற்பவே மாலபே…
ஒற்றையாட்சி மாறாது; பிரதமர்
புதிய அரசியலமைப்பினை 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றால் போல் தயாரிக்க உள்ளோம். இதன்போது மக்களின் கருத்துக்களுக்கே பெரும் முக்கியத்துவம் அளித்து செயற்படுவோம். நான் ஒரு இலங்கையன். இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு எனக்கு இடமளியுங்கள். ஒற்றையாட்சிக்கு முரணான அரசியலமைப்பை உருவாக்கமாட்டோம். மக்களை குழப் பும் வகையில் வீணான எதிர்ப்புகளை உடனடியாக கைவிடுமாறு கோருகின்றேன். உலக வரலாற் றில் முதல்…
மைத்திரி –மஹிந்தவை இணைக்க முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அடிப்படை செயற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க முன்னெடுத்து வருகின்றார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறவேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பணியாற்றவேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பிளர்கள் தெரிவித்துவருவதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் தலைமையில் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்…
இன்று முதல் யோசனைகளை வழங்கலாம்..!
தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்டவுள்ள புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க எதிர்பார்க்கும் இச்செயற்றிட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கைகள் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. அரசியல் அமைப்பு சாசனத்தில் பல்வேறு மாற்றங்களை உள்வாங்கும் நோக்குடன் தேசிய அரசாங்கத்தினால்…
வகுப்பறைகளில் தொலைபேசி பாவனைக்குத் தடை
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமது கடமை நேரத்தில் வகுப்பறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கக் கூடாதென்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், சகல வலையக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தமது கடமை நேரங்களில் வகுப்பறைகளில் வைத்து கையடக்கத் தொலைபேசிகளை பாவித்தமை மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு, கண்டிப்பான உத்தரவை கிழக்கு…
அதிகார பகிர்வுக்கு செல்வதற்கு தடையில்லை : விஜேதாச
ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி என்று வெறும் வார்த்தைகளை பற்றிப் பிடித்துக்கொண்டிருக்காமல் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும் தேசியஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலுமான அரசியலமைப்பு ஒன்றுக்கே செல்லவேண்டியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் ஒற்றையாட்சி முறைமையின் ஊடாக முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு செல்வதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை. ஆனால் எவ்வாறான முறைமைக்கு செல்லவேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒற்றையாட்சி முறைமையில் மாற்றம் ஏற்படாது என்று தேசிய அரசாங்கம் தெரிவித்துவருகின்ற நிலையில் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்வு…
அரசாங்கத்துடன் விரைவில் இணையவுள்ள கூட்டு எதிரணியின் முக்கிய குழுவினர்
கூட்டு எதிரணி என்ற நாமத்தில் நாட்டை கூட்டாக அழித்தொழிக்கும் கும்பலில் இருந்து ஒரு குழுவினர் விரைவில் அரசாங்கத்தில் இணையவுள்ளனர். புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஏற்கனவே எமது கைவசம் உள்ளது. எனினும் நாட்டின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டே எம்முடன் கூட்டு எதிரணியினர் இணையவிருப்பதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முழுமையாக எதிர்த்து வரும் கூட்டு எதிரணியினர் எமது ஆட்சி காலைவாரும்…
42 வருடங்களுக்கு பின்பு அழைப்பு விடுத்துள்ள ஜேர்மன் அரசு
ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கை தலைவரொருவருக்கு சுமார் 42 வருடங்களுக்கு பிறகு அழைப்பு கிடைக்கபெற்றுள்ளது. இதன்படி அந்த நாட்டு அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று அடுத்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் சீரான வெளிநாட்டுக் கொள்கையின் காரணமாக ஜேர்மன் நாட்டிலிருந்து இந்த அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அபிவிருத்தி அடைந்து வரும் பல்வேறு நாடுகளிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்புகள் கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளமை விசேட அம்சமாகும்….
சூதாட்ட நிலையம் முற்றுகை; 8 பேர் கைது
கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இயங்கி வந்த சூதாட்ட நிலையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலேகம பிரதேச வீடொன்றில் மிகவும் இரகசியமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட நிலையமே இவ்வாறு பொலிஸாரின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் போது அவ்வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் நீண்ட நாட்களாக இவ்வாறு இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்திருப்பதாகவும், வெளியிடங்களிலிருந்து வருபவர்களும் இங்கு சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்களிடம் மேற்கொண்ட…
