Headlines

ஞானசாரருக்கு விளக்கமறியல்




பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது.

இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நேற்று நீதவானால் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், ஹோமாகம பொலிஸில் இன்று தேரர் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *