News
3-வது தளபதியும் கைது
துருக்கியில் அதிபர் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று புரட்சி நடத்தினர். அப்போது அதிபர் எர்டோகன் ஏஜியன் சுற்றுலா தளத்தில் தங்கியிருந்தார். அவரது வேண்டுகோளின்படி களம் இறங்கிய பொதுமக்கள் ராணுவ புரட்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான் புல் நகரங்களில் சுற்றிய பீரங்கி வாகனங்களை சிறை பிடித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடந்தது. அதில் புரட்சியில்…
இஸ்லாமிய எழுச்சியின் கர்ச்சிக்கும் சிங்கமாக முஸ்லிம்களின் குரலாக முழங்கும் – அர்துகான்
-கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் – முதலாம் உலக மகாயுத்தம் முடிவுற நாம் இஸ்லாமிய கிலாபாவை இழந்தோம், இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுற பைத்துல் மக்திசையும் பாலஸ்தீனத்தையும் இழந்தோம், பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் முஸ்லிம் உலகில் மூன்றாம் உலக மகாயுத்தம் முடுக்கி விடப்பட்டுள்ள பின்புலத்தில் … அறபு வசந்தம் காவு கொள்ளப்பட்டதன் பின்னரான உலக ஒழுங்கில் மத்திய கிழக்கில் துரிதப் படுத்தப் பட்டுள்ள மேலைத்தேய சியோனிஸ சிலுவை சக்திகளின் கூட்டு மேலாதிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிற்கு நேரடியாகவும்…
சர்வதேச வர்த்தகங்களின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்!
சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் மாதம் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான முகவர் நிறுவனமொன்று அமைக்கப்பட உள்ளது. இந்த நிறுவனம் நிறுவப்படுவதுடன் சர்வதேச வர்த்தகம் குறித்த முகவர் நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் சீனாவுடனும் இந்தியாவுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்ட ஒரே நாடாக இலங்கை காணப்படும்….
துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு: 265 பேர் கொன்று குவிப்பு – 3 ஆயிரம் வீரர்கள் கைது
துருக்கி நாட்டில் மக்கள் துணையுடன் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது. ராணுவத்துடனான மோதலில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். துருக்கி, தொடர்ந்து 4 முறை ராணுவ புரட்சிகளால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடு. அங்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மீண்டும் ராணுவ புரட்சிக்கான முயற்சியாக ராணுவத்தில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரத்தில் உள்ள பாஸ்போரஸ் ஜலசந்தி மீதுள்ள 2 பாலங்களில் டாங்கிகளை நிறுத்தி,…
விலை அதிகமா?: 1977க்கு முறையிடவும்
அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்பட்டுள்ள 16 அத்தியாவசிய உணவுப் பொருட்களை, வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 1977 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 200 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
மஸ்கெலியா ஏழு கன்னி மலை பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்பு
மஸ்கெலியா ஏழு கன்னி மலை (சப்த கன்ய) பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் வெளிநாட்டவர்கள் சிலரும் அடங்கியுள்ளனர்.
முன்மாதிரியாக செயற்பட்ட அமைச்சர் கபீர் ஹாசிம்
அரச நிறுவனங்கள் துறை அமைச்சர் கபீர் ஹாசிம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வர்த்தகப்பிரிவு ஆசனத்தில் அமராது பயணிகளுடன் சாதாரண ஆசனத்தில் இருந்து பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்ற அவரை வர்த்தக பிரிவு ஆசனத்தில் அமர்ந்து செல்லுமாறுகோரப்பட்டபோதும் வரிசெலுத்துவோரின் பணத்தில் தாம் பயணம் செய்யவிரும்பவில்லை என்று கூறி அதற்கு மறுப்புத்தெரிவித்துவிட்டார். கபீர் ஹாசிமின் அமைச்சின் கீழேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூம் உள்ளடங்குகிறது. இந்தநிலையில் அவரும் மனைவியும் சாதாரண இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அமைச்சரின் இந்த நடவடிக்கை, அவரின்…
அஷ்ரப் ஹுஸைனின் மறைவு ஈடு செய்யமுடியாது. – அமைச்சர் றிஷாத் அனுதாபம்
சிறந்த சமூக சேவையாளரும், மார்க்கப் பற்றாளருமான அஷ்ரப் ஹூஸைனின் மறைவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய சமூகங்களுக்கும் பாரிய இழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமூப்பெரியார் அஷ்ரப் ஹுஸைன் தனது வாழ் நாளை மக்கள் பணிக்காகவே பயன்படுத்தியவர். ஏழைகளின் துன்பங்களையும் அனாதைகளின் கஷ்டங்களையும் தீர்ப்பதற்காக அவர் பல்வேறு சமூக நலன் அமைப்புக்களின் முக்கிய பதவிகளிலிருந்து அவர்களின் வாழ்வு சிறக்க உதவியவர். திகாரிய அங்கவீன நிலையத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான…
முஸ்லிம் சமூகம் முறையான வழிகாட்டல் இன்றி அவதி அமைச்சர் றிஷாத் வேதனை
-சுஐப் எம் காசிம் – சிறைச்சாலைகளில் முஸ்லிம் சகோதரர்கள் 28 சதவீதமானோர் தமது காலத்தை அவமே கழித்து வருகின்றனர். அதே வேளை கல்வித் துறையில் நமது சமூகத்தில் உயர் பதவி வகிப்போர் 3 சதவீதத்திலும் குறைவானவர்களாகவே காணப்படுவது கவலைக்குரிய விடயம் என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகன-ஹிஜ்ராபுர இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் தும்பர பள்ளிச் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். கல்விதான் நமது சமூகத்தின் அழியாத சொத்து….
இலங்கை முஸ்லிம்களிடையே துருக்கிக்கும், எர்துகானுக்கும் பெரும் ஆதரவு அலை
துருக்கியில இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை முஸ்லிம்களிடையே துருக்கிக்கும், அந்நாட்டு ஆட்சியாளர் எர்துகானுக்கும் பெரும் ஆதரவு அலை இருப்பதை உணரமுடிகிறது. முஸ்லிம் சகோதரர்கள் தமது பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டுள்ள விடயங்கள், துருக்கிக்காக அவர்கள் கேட்கும் பிரார்த்தனைகள், இலங்கை முஸ்லிம் சார்பு ஊடகங்கள் வெளிப்படுத்தும் உணர்வுபூர்வமான ஆதரவு, அரபுதெரிந்த சகோதரர்கள் தமிழுக்கு மொழிபெயர்த்து பதிவிட்ட குறிப்புக்கள் உள்ளிட்ட (பல காரணங்கள்) போன்றவற்றை அடிப்படையாக வைத்து நோக்குககையிலேயே இதனை அவதானிக்கமுடிகிறது.
இது அல்லாஹ் செய்த ஏற்பாடு – எர்துகானின் உணர்ச்சிமிகு உரை
துருக்கிக்காக துஆ செய்வோம் மக்களால் வீழ்த்தப்பட்ட இராணுவ புரட்சி அர்துகானின் உரை. ஆயுத படையில் உள்ள சிறிய பிரிவினர் துரதிஷ்ட வசமாக துருக்கியின் ஒற்றுமையையும் மக்களையும் குறிவைத்து விட்டார்கள். இது படையை சுத்தம் செய்வதட்கு அல்லாஹ் செய்த ஏற்பாடு. இப்பொழுது நேரம் அதிகாலை 4.30 மணி இந்நேரத்தில் மில்லியன் கணக்கான துருக்கி மக்கள் பாதையில் இருக்கிறார்கள். நான் இத்தகைய நாட்டின் குடிமகன் என்பதையிட்டு பெருமை படுகிறேன். சட்டபூர்வ ஆட்ச்சியை கவிழ்க்க ஒன்றன் பின் ஒன்றாக முயறசிக்கிறார்கள். இவர்களுக்கு…
நாட்டில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கவில்லை
-எம்.ஆர்.எம்.வஸீம் – நாடு செல்லும் வீழ்ச்சிப்பாதையை தடுப்பதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இடம்பெறாமல் நாட்டுக்கு பொருத்தமற்ற மாற்றங்களே இடம்பெறுகின்றன. என ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த தேரர் தெரிவித்தார். தாய்நாடு எங்கள் அமைப்பு கொழும்பில் இன்று (15) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 30 வருட யுத்தத்தில் நாங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டோம். தற்போது யுத்தம் முடிவடைந்து நாட்டை அபிவிருத்தி…
