Main News
கிண்ணியா மகமாறு வீட்டு திட்டம் ஆரம்பம்!
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்றூபினால் கிண்ணியா, மகமாறு கிராமத்தில் மானிய அடிப்படையில் மாதிரி கிராமத்துக்கான வேலைகள் இன்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வீடற்றவர்களுக்கான வீட்டினை பெற்றுக் கொடுக்கும் இந்தத் திட்டதில், முதற்கட்டமாக 30 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ் றூப் மற்றும் திருகோணமலை மாவட்ட வீடமைப்பு முகாமையாளர் திருக்குமரன், கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ்,…
“சமூக தொழில் முயற்சியாண்மை இலங்கையில் வேரூன்றி வருவது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் தரும்” அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!
உலக பொருளாதார அபிவிருத்தியின் பிரதான பாத்திரமாக விளங்கும் சமூக தொழில் முயற்சியாண்மை, தற்போது படிப்படியாக வேரூன்றி வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வெறுமனே இலாபத்தை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சியாண்மையை விட சமூக தொழில் முயற்சியாண்மையானது, பிரதானமாக சேவைகளையும், இலாபத்தையும் மையமாகக்கொண்டு இயங்கி வருவது, நமது நாட்டுக்கு மிகவும் அத்தியவசியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிரிட்டிஷ் கவுன்சிலும், ஐக்கிய நாடுகளின் எஸ்கேப் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ள தேசிய ரீதியிலான, சமூக தொழில்…
மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம், வரிப்பத்தான்சேனை, ஒலுவில், மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேச ஆதரவாளர்கள், பிரதேச உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தேர்தல்களில் களமிறங்கிய வேட்பாளர்கள் போன்றோர்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று (27.06.2018) சம்மாந்துறை மக்கள் பணிமனையில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இஸ்மாயிலின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்த…
திருமலை மாவட்ட மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லஹ் மஹ்ரூபின் அழைப்பின் பெயரில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி அவர்கள் நேற்று முன்தினம் (26) திருமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர், தோப்பூர், புல்மோட்டை, குச்சவெளி, புடவைக்கட்டு, நிலாவெளி, ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலின் போது,…
“நவ உதாகம்மான” வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உறுப்பினர் ஆஷிக் பங்கேற்பு!
கல்பிட்டி (ஆண்டான்கணி ) பிரதேசத்தில் “நவ உதகம்மான” வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று முன்தினம் (26)இடம்பெற்றது. இந்த விழாவில் ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார் . இந்நிகழ்வில் விசேட அதிதியாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை அமைப்பாளருமான ஆஷிக் மற்றும்…
வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள் – அமைச்சர் ரிசாத் கலந்தாலோசனை
வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கென வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்றின் அவசியம் குறித்து வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த மத குருமார்கள் கருத்து வெளியிட்டனர். வவுனியா ஸ்ரீபோதி தக்ஷினாராமய விகாரையில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் வட மாகாணத்தை சேர்ந்த பெளத்த தேரர்களை சந்தித்த போதே, தேரர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது வடமாகாண சங்கநாயக்க தேரர் கிரிஇப்பங்கவெவ…
வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் வாழ் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள்
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் கௌரவ றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் வைபவம் மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது. இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட கைத்தொழில் அதிகாரசபையின் அதிகாரி சாஹிர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
“வருடாந்த ஜீஎஸ்பி (GSP) பிளஸ் ஏற்றுமதி வருவாயை விட, இலங்கையர்களின் புகையிலை பாவனை 37 சதவீதம் உயர்வானது” புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் வருடாந்த ஜீஎஸ்பி பிளஸ் ஏற்றுமதி வருவாய் சுமார் 480 மில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருக்கும் நிலையில், இலங்கையர்களின் வருடாந்த புகையிலை பொருட்களின் பாவனை வருடத்துக்கு 660 மில்லியன் அமெரிக்க டொலரை விட அதிகமானதாக காணப்படுகின்றது எனவும், பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையே நாம் செலவிட்டு வருகின்றோம் எனவும் புகையிலைப் பாவனையின் யதார்த்த நிலை இதுவே எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புகையிலைச் செய்கைத்…
மக்கள் காங்கிரஸின் களுத்துறைக் கிளையின் மத்திய குழுக் கூட்டம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் களுத்துறை கிளையின் மத்திய குழுக் கூட்டம், களுத்துறை நகரசபை உறுப்பினரும், அமைப்பாளருமான ஹிஷாம் ஸுஹைல் தலைமையில் (23) நடைபெற்றது. இதன்போது, கட்சியினால் ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் பொதுவசதிகள், சுயதொழில் என்பவற்றிற்கான நிதி பயன்படுத்தப்பட வேண்டிய செயற்கிரமம் விரிவாக ஆராயப்பட்டு, பொறுப்புக்கள் உறுப்பினர்களுக்கு அமைப்பாளரால் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன், பொதுமக்கள் பாவனைக்காக மேலும் 06 குளாய்நீர்க் கிணறுகள் அமைப்பதற்கான் இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டன. இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஹிஷாம் கூறியதாவது, சாதாரண மக்களுக்கு சாக்கடையாகவும் திட்டுப்பட்டதாகவும்…
இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்!!
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, நியமிக்கப்பட்ட ரியாஸ் சாலி நேற்று (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால், இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரான ரியாஸ் சாலிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹுசைன் பைலா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன…
வெள்ளைப்புறா விளையாட்டுக் கழகத்திற்கு ஒலிபெருக்கி வழங்கி வைப்பு!
விருதோடை (எல்லுச்சேனை) வெள்ளைப்புறா விளையாட்டுக்கழகம் விருதோடை வட்டார இளைஞர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் மென்பந்து சுற்றுப்போட்டியை நடாத்தி வருகின்றது . அதே நோக்கில் இவ்வருடமும் நடாத்திய மென்பந்து சுற்றுப்போட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் விருதோடை வட்டார அமைப்பாளரும், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு மென்பந்து சுற்றுப்போட்டியை ஆரம்பித்து வைத்தார். அத்தோடு வெள்ளைப்புறா விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் வேண்டுககொளுக்கிணங்க ஆஷிக்கின் சொந்த நிதியில் இருந்து சுமார் 100000/= ரூபாய் பெறுமதியான…
சங்கநாயக்க தேரரைச் சந்தித்து சுகம் விசாரித்த ரிஷாட் பதியுதீன்! -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
வவுனியா ஸ்ரீபோதி தக்க்ஷினாராமய விகாரையின் விகாராதிபதியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சங்கநாயக்க தேரருமான, சியம்பலகஸ்வேவ விமலசார தேரர் சுகயீனமுற்றுள்ளார். அவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வில்பத்துக் காட்டை அழிக்கிறார். அங்கு முஸ்லிம்களைக் குடியேற்ற முயற்சிக்கிறார், வன்னியில் அரபு தேசம் ஒன்றை உருவாக்கவும் அவர் முயற்சிக்கிறார் என்று, உண்மைக்குப் புறம்பான இட்டுக்கட்டுகளைச் சுமத்தி, கொழும்பு…
