Headlines

ஆஷிக் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வெளிநாட்டு உறவுகளின் ஊடாக விருதோடை வட்டார மக்களுக்கு 30 குடிநீர் பைப்கள் கையளிப்பு …





வர்த்தக மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் பெறப்பட்ட வெளிநாட்டு உதவியின் மூலம் சேனைக்குடியிருப்பு மற்றும் ரெட்பானா ஆகிய கிராமங்களுக்கு குடி நீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் பைப் வசதிகள் நேற்றைய தினம் வழங்கப்பட்டது .

தூய குடிநீரின்றி தவிக்கும் விருதோடை , வட்டார மக்களுக்கான குடி நீர் பிரச்சினை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் விருதோடை வட்டார அமைப்பாளரும் , கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் அவர்களினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவ்வேண்டுகோளிற்கு இணங்க இவ்வேளைத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது .

சேனைக்குடியிருப்பு , ரெட்பானா மக்களுக்கான சுமார் 30 குடிநீர் பைப்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் நல்லந்தலுவை , விருதோடை ,புழுதிவயல் ,மஞ்சாடிச்சோலை, மக்களுக்கான குடிநீர் பைப்களிக்கான விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டு , விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *