Main News
அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை அனுபவிக்கும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்
Irshad Rahumathulla இந்த நாட்டில் தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களும் தமது உரிமைகளை அனுபவிக்கும் வகையில் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த உரிமைகளுக்கு தடைகள் வருகின்ற போது இதனை வெற்றிக் கொள்ள தமது கட்சியின் தொழிற்சங்கம் எல்லா நேரங்களிலும் செயற்படும் என்றும் கூறினார். தொழிலாளர் தினத்தையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில்…
புதிய கடவுச் சீட்டு, அடையாள அட்டைகள் இரு வருடங்களுக்குள் பாவனைக்கு வரும்
கைவிரல் ரேகையை மையப்படுத்திய புதிய கடவுச் சீட்டும் இலத்திரனியல் அடையாள அட்டையும் அடுத்து வரும் இரு ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க குறிப்பிட்டார். இலத்திரனியல் அடையாள அட்டைக்கன வேலைகள் ஏற்கனவே ஆட்பதிவு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கடவுச் சீட்டை அறிமுகம் செய்யும் விதமாக அனைத்து வேலைப்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தற்போதுள்ள கடவுச் சீட்டுக்கள் ஊடாக மோசடிகள் மிக சூட்சுமமாக முன்னெடுக்கப்படும் நிலையில் அதனை தடுக்கும்…
2014 ஆம் ஆண்டு மட்டும் 1469 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு
அஸ்ரப் ஏ சமத் இலங்கையில் மட்டும் 2014ஆம் ஆண்டு மட்டும் 1469 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2160 சிறுவர்கள் தாக்குதலுக்காகிசித்திரவதை செய்த சம்பவங்களும் சிறுவர் பாதுகபாப்பு அதிகாரசபையின் முறைப்பாட்டில் பதியப்பட்டுள்ளது. என இன்றுசிறுவர் பாதுகாப்பு இராஜாங்கஅமைச்சர் ரோசிசேனாநாயகக்க இன்றுஅமைச்சில் நடைபெற்றநிகழ்வில் தெரிவித்தார். 2015 ஏப்ரல் 30ஆம் திகதியை நாடு முழுவதிலும் சிறுவர்களது பாலியல் துஸ்பிரயோகத்தை ஒழிப்போம்.என்ற திட்டத்தில் சிறுவர் விவகார அமைச்சும் யுனஸ்கோ நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை இலங்கை உள்ள சகல சமுகத்திற்கும் விழிப்பூட்டும்…
சாரதி அனுமதிப்பத்திரங்கள் சர்வதேச தரத்தில்
முகம்மட் பஹாத் இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்படவுள்ளது. வெகுவிரைவில் சர்வதேச தரத்திலான சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். வியன்னா சர்வதேச பிரகடனத்திற்கு அமைவான போக்குவரத்து விதிகள் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரமும் சர்வதேச தரத்திற்கு உயர்வடைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன எனவும் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் தொழில் புரியும் சகோதரர்களது கவனத்திற்கு..!!
மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் தொழில் நிமிர்த்தம் நம் நாட்டு சகோதரர்களில் அதிகமானோர் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் வசித்து வருகின்றார்கள். இங்கு வசிக்கும் நம் நாட்டு சகோதரர்களின் நிறையப் பேர் அடிக்கடி முகம் கொடுக்கக் கூடிய ஒரு பாரிய பிரச்சினையாக இருப்பது கிட்னியில் கல் உண்டாவது, நம் சகோதரர்கள் கூட அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள் “ என்ட வயித்துல கல், கிட்னியில கல் நான் ஊருக்குப் போகனும், ஒப்ரேசன் செய்யனும்” என்று. நமது…
அரசியல் கைதிகளின் விசாரணைகளை துரிதபடுத்தி, விடுதலை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுகோள்
கடந்த போர்ச் சூழலின் பின்னர் வடக்கில் கைது செய்யப்பட்டு விசாரைணகைள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விசாரணைகளை துரிதபடுத்தி அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகியோரிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையிலும்,இம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் இந்த வேண்டுகோளை தாம் முன் வைத்துள்ளதாக…
19ம் திருத்தச் சட்டத்துக்கு பிரித்தானியா வரவேற்பு
நிறைவேற்றப்பட்டமைக்கு பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், ஜனாதிபதியை சந்தித்த போது இதற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அவர் தமது தகுதி பத்திரத்தையும் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். அதேநேரம் பிரான்ஸ், பஹ்ரெயின், க்ரோஷியா மற்றும் ஹங்கேரி ஆகிய மேலும் நான்கு நாடுகளின் தூதுவர்கள் தங்களின் தகுதி பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
மேதின கூட்டங்களின் நிமித்தம் போக்குவரத்து ஒழுங்கு மாற்றம்
நாளைய தினம் நடைபெறவுள்ள மே தினத்துக்கு இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரம் நாளையதினம் 17 மேதினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. சிறிலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டம் கொழும்பு ஹயிட் பார்க்கில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் பொரெல்லை கெம்பல் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் கொழும்பு பீ.ஆர்.சீ மைதானத்திலும், ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டம் கொட்டாஞ்சேனையிலும் நடைபெறவுள்ளன. அதேநேரம்…
பொதுமக்களின் பணத்தை சூறையாடிய திருடர்களை பிரதமர் எந்த தருணத்திலும் பாதுகாக்க மாட்டார்
எம்.எம் மின்ஹாஜ் பொது மக்களின் பணத்தை சூறை யாடிய திருடர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்த தருணத்திலும் பாதுகாக்க முனைய மாட்டார். குற்றவாளிகள் தொடர்பில் சாட்சியங்களுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. காலதாமதம் ஏற்பட்டபோதிலும் நீதிமன்றமே குறித்த நபர்களை கைது செய்யும் . எம்மால் எந்த அச்சுறுத்தல்களையும் விடுக்க முடியாது. எனினும் பிரதி நீதி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் முடியுமான அனைத்தையும நான் செய்வேன் என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். இலஞ்ச…
19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்
19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்அனைத்து இலங்கையருக்கும் அரச நிறுவனங்களில் குடியுரிமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலினூடாக தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமைஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொறுப்பு கூறுவதனூடாக மக்கள் அதிகாரத்தை உறுதிபடுத்தல்-மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் என்பனவாகும் 1.தேர்தல் ஆணைக்குழு 2. அரச சேவைகள் ஆணைக்குழு 3. தேசிய பொலிஸ் ஆணைக்குழு 4. கணக்காய்வு ஆணைக்குழு 5. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 6. லஞ்ச ஊழல் ஆணைக்குழு 7. நிதி ஆணைக்குழு 8. எல்லை நிர்ணய ஆணைக்குழு…
19ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்!
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று (30) முதல் அமுலுக்கு வருவதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அதேவேளை, இதிலுள்ள நான்கு சரத்துக்கள் அடுத்த பொதுத் தேர்தலின் பின் அமைக்கப்படும் புதிய பாராளுமன்றத்திலே அமுலுக்கு வர இருப்பதாகவும் அவர் கூறினார். நீதிச்சேவை ஆணைக்குழு தொடர்பான 4 சரத்துகளே இவ்வாறு அடுத்த பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் செயற்படுத்தப்பட இருக்கிறது. நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாலே குறித்த சரத்துகள் அமுலாவது தாமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்…
காணாமல் போனவர்கள் வெலிக்கடை சிறையில் இருப்பதாக முறைப்பாடு
கடந்த காலங்களில் காணாமல் போனதாகக் கூறப்படும் தமது பிள்ளைகள், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று பொது ஒழுங்குகள், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று புதன்கிழமை (28) முறையிட்டனர். அமைச்சர் அமரதுங்கவை நேற்று சந்தித்த, காணாமல் போனவர்களின் உறவினர், வெலிக்கடை சிறைச்சாலையில் தங்களது பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், அது குறித்த உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். சிறைச்சாலையில் அண்மையில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வின்…
