Main News
அரசியல் கட்சியொன்றை தொடங்க; தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்கும் பொதுபலசேனா
அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு பொதுபலசேனா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் பொதுபல சேனா முக்கியஸ்தர்கள், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
திஸ்ஸவை நீக்கியது சட்டவிரோதமானது: உயர்நீதிமன்றம்
ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்கவை கட்சி நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது. இந்த மாதிரியான மனுவை இரண்டு மாதகாலத்துக்குள் விசாரணைக்கு உட்படுத்தி தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பது சட்டமாகும். இந்த மனுவை திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் விசாரணை
முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி மோசடி பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபாலவை போன்ற எந்தத் தலைவர்களையும் அரசியல் வாழ்க்கையில் கண்டதில்லை : சமரசிங்க
எனது அரசியல் வாழ்க்கையில் அதிகாரங்களை கைவிட்ட எந்தத் தலைவரையும் நான் கண்டதில்லை. தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தனது அதிகாரங்களை குறைத்துக்கொண்டுள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்க செயலர் இலங்கைக்கு வந்ததன் மூலமும் அவர் கூறிய விடயங்களின் மூலமும் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் உதவி எமக்கு கிடைத்துள்ளமை உறுதியாகியுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அமைச்சர்…
பேக்கரிகளில் தராசு இல்லாவிடின் 100,000 ரூபாய் தண்டம்
பேக்கரி மற்றும் பேக்கரி உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் பாண் உள்ளிட்ட தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்து கொள்வதற்கு தராசு வைக்கப்படவேண்டும். அவ்வாறு தராசு வைக்கப்படாவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. பாண் உள்ளிட்ட பேக்கரி தின்பண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சாதாரண நிலையங்களில் தராசு…
நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது – றிஷாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் பள்ளிசாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் தேவை தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இன்று விஜயம் செய்த அமைச்சர்…
தயா குருப் கம்பனியின் வெசாக் வெளிச்ச தோரணம்
அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகாண எதிா்கட்சித் உறுப்பினரும் ஜ.தே.கட்சி அமைப்பாளருமான தயா கமகே மற்றும் அவரது பாரியார்பிரதியைமைச்சருமான திருமதி கமகே அவா்களது தயா குருப் கம்பணியினால் வெசாக் வெளிச்ச தோரணம் மற்றும் வெசாக் நிக்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் ஆரம்பித்து வைத்தனா். இவ் நிகழ்வு தெஹிவளை – நுகோ கொடையில்உள்ள பெப்லியானவில் தயா கம்பணியில் நடைபெற்றது.
தாராபுரத்தில் நீரில்மூழ்கி வபாதானகளுக்கு அமைச்சர் றிஷாதின் அனுதாபச் செய்தி
தாராபுரத்தில் ஊரில் ஏற்பட்ட மிகத்துக்கமான செய்தி கேள்வியுற்ற உடன் தனது சகல நிகழ்ச்சி நிரல்களையும் ரத்துச்செய்துவிட்டு திரும்பினேன். உண்மையில் எதிர்பாராதது இறைவன் வாக்கழித்த சுவர்க்கத்தை பெறும் கூட்டத்தில் இருவரும் உள்ளார்கள் அத்துடன் அவர்களது சுவனத்துக்காக பிராத்திப்பதுடன், துயரத்தில் வாழும் குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுகின்றனர்….
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் பள்ளிசாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் தேவை தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இன்று விஜயம்…
பிள்ளையானின் துவேசப் பேச்சு; பிரச்சினைகளை ஏற்படுத்தி விடாதீர்கள் – அமீர் அலி
– அனா – அன்மைக்காலமாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்னைப் பற்றியும் எனது பெயருக்கு களங்கம் வரக்கூடிய வகையிலுமே கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார் இது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கனவு கான்பதற்கு அல்ல வழியைக் காட்டுவதற்கு எனும் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடலாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு (02.05.2015)…
பலவசதிகள் இருந்தும் சமுகத்தின் நன்மை கருதியே மகிந்தவை விட்டு வெளியேறினோம் -றிஷாத் பதியுதீன்
A.S.M.இர்ஷாத் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நான் மக்கள் பணி செய்வதற்காக கேட்ட உதவிகளையெல்லாம் தந்தபோதும் சமூகத்தின் நன்மை கருதியே மஹிந்த ராஜபக்ஷவின் அரசிலிருந்து தமது கட்சி வெளியேறியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். எருக்கலம்பிட்டியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஐம்பெரும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாத் தனது உரையில் மேலும் கூறியதாவது: மஹிந்த அரசிலிருந்து வெளியேறுவதற்கு தாங்கள் எடுத்த…
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
தேசிய இளைஞர் சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கையின் வேண்டுதலின் படி சகல விளையாட்டுக்கழங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மடு,முசலி பிரதேசத்துக்குரிய நிகழ்வு முசலி பாடசாலை மைதானத்தில் 02/05/2015 அன்று நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன், அதிதியாக எஹியா பாய்,மாகான பணிப்பாளர் முனவ்வர்,அலிகான் சரீப், கல்விப்பணிப்பாளர் சியான்,இளைஞர் சேவை மன்ற உறுப்பினர் இம்ரான் உற்பட பலர் கலந்து கொண்டனர்
