Headlines

மின்சார வேலியில் சிக்கி 16 வயது சிறுவன் பலி

ஆர்.கோகுலன் மின்சார வேலியில் சிக்குண்டு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் வெலிமடை தம்பவின்ன பகுதியில் நேற்று வியாழக்கிமை(29) மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த ரவிந்து டி சில்வா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை, தம்பவின்ன பகுதியில் சட்டவிரோதமாக மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே இச்சிறுவன் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Read More

உதயசிறி விடுதலையானார்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன் சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு…

Read More

சுய­ந­லத்தை நோக்­காக கொண்டே சு.க.வினர் 19 ஆவது திருத்­தத்­திற்கு வாக்­க­ளித்­தனர்

தமது சுய­ந­லனை கருத்திற் கொண்டே சுதந்­திர கட்­சியில் மஹிந்­த­வுக்கு ஆத­ர­வான சிலர் ஜனா­தி­ப­தியின் பேச்­சுக்கு இணங்கி 19 ஆவது திருத்­தத்தினை நிறை­வேற்ற ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர் என நவ சம சமாஜ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்கிர­ம­பாகு கரு­ணா­ரட்ன தெரி­வித்தார். கொழும்பில் நேற்று அதி­கா­ரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்­கியப்படுத்­துவோம் என்ற அமைப் பின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், இதுவரை 19 ஆவது திருத்தம் அமு­லுக்கு வர­வேண்டும் என்ற கொள்­கை­யுடன்…

Read More

கொழும்பு மாநகரில் நாளை 17 மேதினக் கூட்டங்கள்

கொழும்பு மாநகரில் நாளை 17 கட்சிகள் மேதினக் கூட்டங்களையும் மேதின ஊர்வலங்களையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையிட்டு கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேலதிக பாதுகாப்புக் கடமையில் 5050 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்தார். 2800 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளுக்காகவும், 2250 பொலிஸார் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 பொலிஸாரும், போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு என 1200 போக்குவரத்து பொலிஸாரும் அழைக்கப்பட்டுள்ளனர். மேதினத்தன்று அத்தியாவசிய…

Read More

மே தின கூட்டத்திற்கு செல்வது குறித்து இன்னும் முடிவில்லை

மே தின கூட்டங்களில் பங்கேற்பது குறித்து இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தொழிற்சங்க சம்மேளன மே தின கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­பதி கலைக்க முடி­யாது : குறைக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்கள்

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் ஜனா­தி­ப­தியின் பல்­வேறு நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு ஏழு மக்கள் பிர­தி­நி­தி­களும் மூன்று சிவில் பிர­தி­நி­தி­களும் அங்­கத்­துவம் வகிப்­ப­தாக திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில், அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச்…

Read More

நேபாள நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 22 மணி நேரத்துக்கு பின்னர் அழுகுரல் கேட்டு காப்பாற்றப்பட்ட 4 மாத குழந்தை

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகிப்போன ஒரு வீட்டின் அடியில் சுமார் 4 மாத குழந்தை சிக்கிக் கொண்டிருந்ததை கண்ட நேபாள ராணுவத்தினர் அந்த குழந்தை பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து அருகாமையில் உயிருக்குப் போராடியபடி, வலியாலும் வேதனையாலும் முனகிக் கொண்டிருந்த மற்றவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு ராணுவ வீரரின் காதுகளில் மட்டும் சிறு குழந்தையின் மெல்லிய அழுகுரல் சத்தம் லேசாக விழுந்தது. சத்தம் வந்த இடத்துக்கு விரைந்து சென்றபோது, சற்று நேரத்துக்கு முன்னர்…

Read More

பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு 6 மாத முழு சம்பளம்: துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்பு

துபாயில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாதங்கள் வரை முழு சம்பளம் வழங்க வேண்டும் என துபாய் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் பஸ் மோதியதில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த காரின் டிரைவர் காயமடைந்தார். பஸ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்த நிறுவனம் அந்த கார் டிரைவருக்கு 90 ஆயிரம் திர்ஹம்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என…

Read More

19ஐ தோற்கடிப்பதற்கு மஹிந்த ஆதரவுக்குழு இறுதிவரை செய்த சூழ்ச்சி

அரசியல் யாப்புக்கான 19வது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு நல்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இறுதி வரையும் சூழ்ச்சிகளை மேற்கொண்டதாக வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா நேற்றுத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்நாட்டு மக்கள் பெரிதும் சந்தோஷப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் யாப்பு திருத்தம் நேற்று முன்தினம் இடம்பெற்றது….

Read More

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெட்ரோல் மற்றும் Wi-fi தன்சல்

வெசக் தினத்தன்று இலவச WiFi வசதிகள் கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படும் என ICTA தெரிவிக்கின்றது. இவ்வாறு WiFi தன்சல் வழங்கப்படுவது இலங்கை வரலாற்றிலேயே முதற் தடவை ஆகும். கொழும்பில் லேக் ஹவுஸ் வெசக் பகுதியில் இலவச WiFi தொழிற்படுத்தப்படவுள்ள அதே வேளை மாத்தறையில் பொது நூல் நிலையம் மற்றும் வைத்தியசாலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் வகையில்  இலவச WiFi செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக டயலொக் மற்றும் லங்கா பெல் ஆகிய நிறுவனங்கள்…

Read More

எமக்­கான புதிய பாதை­யினை ஆரம்­பித்­துள்ளோம், முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க தயார் – ஞான­சாரர்

இஸ்லாமிய சமய நடவ­டிக்­கை­க­ளுக்­காக நாம் முரண்­ப­ட­வில்லை. இந்த நாட்டை இஸ்­லா­மிய மயப்­ப­டுத்தும் முயற்சிகளுக்காகவே நாம் போராடினோம். இப்போதும் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையின் உண்மையான மதம் பௌத்தம் மட்டுமே. அதை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. அந்த கடமையினையே நாம் செய்து வருகின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார் . பெளத்த சிங்கள மக்களை பாது­காக்க தாம் புதிய அரசியல் பாதையினை உருவாக்கவுள்ளதாகவும்,…

Read More

நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

நேபா­ளத்தில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் அந்­நாட்டில் மக்கள் பாதிக்­கப்­பட்டு, வீடு­களை இழந்தும் உண்ண உண­வின்­றியும் துன்­பப்­ப­டு­கின்­றனர். இதன்­படி நேபாள அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான அத்­தி­யா­வ­சிய பொருட்கள் தொடர்­பி­லான பட்­டி­ய­லொன்றை இலங்கை அர­சாங்­கத்­திடம் வழங்­கி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை சிவில் அமைப்­பு­களோ அல்­லது தனி நபரோ வழங்க விரும்­பினால் மாவட்ட செய­லா­ள­ரிடம் ஒப்­ப­டைக்க முடியும். மேலும் இது தொடர்பில் மேல­திக தக­வல்­களை பெற­வேண்­டு­மாயின் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தை அணுகு­மாறு பிர­தமர் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது. இதே­வேளை உலர்…

Read More