Headlines

ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புப் பிரிவு கலைப்பு

ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். குறித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில்  கலைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். நிர்வாகத் தேவையின் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு கருதி அரச பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தனி பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 27 பேர் பிணையில் விடுதலை!

நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், பிக்குகள் உள்ளிட்ட 27 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று (08) சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது அனைவரையும் தலா ஒரு லட்சம் ரூபா தனிநபர் பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு…

Read More

17 இலங்கை மீனவர்களை விடுவித்தது மியன்மார்

மியன்மார் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மியன்மார் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, இந்த இலங்கையர்களுக்கு எதிராக அந்த நாட்டின் குற்றவிசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மீள பெறப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் பிரகாரம் அடுத்த சில தினங்களுக்குள் விடுதலையான இலங்கை மீனவர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கையின் பேரிலேயே, இந்த மீனவர்களை விடுதலை…

Read More

வில்பத்துவில் மக்களை குடிஏற்றியதாகக் கூறப்படுவது திரிபுபடுத்தப்பட்டதாகும். – வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு

மன்னார் வில்பத்து வனப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் மேற்கொள்ளும் பரப்புரைகள் உண்மை இல்லை என வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது: 1990ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமது சொந்த நிலங்களுக்குச் சென்று மீள்குடியேறும் நோக்கில் காடுகளை அழித்து வீடு வாசல் வயல் நிலங்களை துப்பரவு செய்து மீள்குடியேறி வருகின்றார்கள்….

Read More

மஹிந்தவின் பிரதமர் கனவு ஒருபோதும் பலிக்காது

மஹிந்­தவை பணயம் வைத்து மீண்டும் அர­சி­யலில் குதிக்க ஒரு­சிலர் முயற்­சிக்­கின்­ற னர். ஆனால் மக்கள் ஒரு­போதும் மஹிந்த கூட்­ட­ணியை ஆத­ரிக்க மாட்­டார்கள். மஹிந்­தவின் பிர­தமர் கனவு ஒருபோதும் பலிக்­கப் ­போ­வ­தில்லை என்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். மஹிந்­த­வுக்கு குரல்­கொ­டுக்கும் கூட்­ட­ணியே மஹிந்­தவை வீழ்த்­தி­யது என்­பதை அவர் மறந்­து­விடக் கூடாது எனவும் அவர் குறிப்­பிட்டார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான சந்­திப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறு­ம­யவின் நிலைப்­பாட்டை…

Read More

ஒபாமா இலங்கை வரவுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்துள்ள பாரிய சர்வதேச வெற்றியாகும் என்று காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை அறிவிக்கும் முகமாகவே இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அவர் அங்கு…

Read More

மஹிந்த கோடீஸ்வரர்களை காட்டிலும் ரில்லியன் சொத்துக்களை வைத்துள்ளார் – மங்கள

20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இம்மாத இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் மறுசீரமைப்பின் பிரகாரம் விகிதாசார தேர்தல் முறையுடன், தொகுதிவாரியான தேர்தல் முறையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தேர்தல் முறைமையானது சிறிய கட்சிகளுக்கும், சிறுபான்மை கட்சிகளுக்கும் பாதகமில்லாமல் அவர்களும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமையும் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய…

Read More

கோட்டாபய கடிதம் மூலம் (FCID)விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு (FCID) கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. மிக் கொடுக்கல் வாங்கல் மற்றும் லங்கா வைத்தியசாலை பங்கு விற்பனை மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவென இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Read More

கொழும்பு துறைமுக நகர் திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல்

ஜனாதிபதி மைத்ரிபாலவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்தமை கட்சிக்குக் கிடைத்த வெற்றியெனக் குறிப்பிட்டுள்ள ஸ்ரீலசுக, கட்சி பிளவுறும் அபாயம் நீங்கி விட்டதாகவும் இனியும் அவ்வாறு இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறு இல்லையெனவும் தெரிவித்துள்ளது. நேற்றைய சந்திப்பின் போது: எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை நியமித்தல், உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தல், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எனும் கூட்டணியை தொடர்ந்தும் பேணுதல், நிதிமோசடிப் பிரிவு அரசியல் மயப்படுத்துவது மற்றும் வேட்பாளர் நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இது குறித்து சுக…

Read More

எரிபொருள் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம்: நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் விலையை மேலும் குறைத்திருக்க முடியும். எனினும் எரிபொருளின் விலைகளை குறைப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. திறைசேரி பிணைப்பத்திர விநியோகம் தொடர்பில் பாராளுமன்றில் சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. எனினும் இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும் சிறந்த முகாமைத்துவம் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக நிலைமை…

Read More

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்களே, என் மீது போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்துகின்றனர் – றிஷாத் பதியுதீன்

என் மீது சுமத்தப்படுவது போலி குற்றச்சாட்டுக்கள் எனவும்,இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட அமைப்புக்களின் மற்றுமொரு சதியாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு வெளி மாவட்டத்தாரின் குடியேற்றமும் இடம் பெறவில்லையெனவும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே மீளக்குடியேறுவதாகவும் கூறினார். தற்போது தொடர்ச்சியாக சில ஊடகங்கள் வெளியிட்டுவரும் வில்பத்து காட்டுப் பகுயினை அமைச்சர் றிசாத் பதியுதீன் அழிப்பதாக கூறும் செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வியாழக்கிழமை கொழும்பில்…

Read More

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட 9பேருக்கு நோட்டீஸ்

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக காவியுடைக்கான துணிகளை விநியோகித்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட ஒன்பது பேருக்கே நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் இடம்பெற்ற பிரசாரத்தின் போது, பொதுசொத்துக்களை நாசம் செய்தமை போன்றவற்றுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, இந்த ஒன்பது பேருக்கும் எதிராக பெவ்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண…

Read More