Headlines

ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புப் பிரிவு கலைப்பு




ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.

குறித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில்  கலைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

நிர்வாகத் தேவையின் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு கருதி அரச பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தனி பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *