Main News
மஹிந்த ராஜபக்ஷவின் இரு வர்த்தமானி பிரகடனங்கள் ஜனாதிபதியால் ரத்து
திருகோணமலை மாவட்டம், சம்பூர் பிரதேசத்தில் கடந்த அரசாங்கத்தினால் சுவீக ரிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு காணிக ளில் ஒரு பகுதியை விடுவிப்பது தொடர்பான ஜனாதிபதியின் விஷேட வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பாக பிரகடனம் வெளியிடப்பட்டுள்ள விஷேட வர்த்தமானி அறிவித்தலின் படி, குறித்த காணி சுவீகரிப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் வெளியிடப்பட்டிருந்த இரு வர்த்தமானி பிரகடனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து அந்த பகுதியில் கடந்த…
அமைச்சர் றிஷாத் சட்டவிரோதமாக முஸ்லிம்களை குடியமர்த்தவில்லை…லால்காந்த
வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டு வருவதாகவும் அங்கு மீழ் குடியேற்றம் என்ற பெயரில் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் சட்டவிரோதமாக குடியமர்த்தி வருவதாக பொதுபல சேனா சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புகளும் சிங்கள ஊடகங்கள் சிலவும் அபாண்டமாக குற்றம் சுமத்திவரும் நிலையில் இன்று மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் லால் காந்த ,வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் நேரசியாக ஸ்தலத்துக்கு சென்று வன பாதுகாப்பு உயரதிகாரிகள் ,மாவட்ட செயலாளர் அங்கு வசிக்கும் மக்கள் உள்ளிட்டோரை சந்தித்தனர். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து…
துமிந்த சில்வாவின் குடு வியாபாரம் பற்றி ஹிரு டி.வீ எப்போது ஒளிபரப்பும் …????
முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர் வில்பத்து தேசியவனத்தை அமைச்சர் றிசாத்பதியுதீன் அழித்து சட்டவிரோத முஸ்லிம் கிராமத்தை அமைத்து வருகிறார் என்ற போலிப்பிரசாரம் அம்பலமானது. இச்செய்தி அண்மைக்காலமாக அதிகம் பேசுபொருளாக இருந்துவந்தது.இதற்குரிய சரியான பதிலை ஊடகங்களில் வழங்கியும் உரியவர்கள் புரிவதாக் தெரியவில்லை. இவ்வ்டயத்தை வளரவிடாமல் தடுக்க உரியவிசாரணை;க் குழுவை அனுப்பி வைக்குமாறு மேதகு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடப்பட்டதற்கு இணங்க இன்று விசாரணைக் குழு களத்திற்குச் சென்று உண்மை நிலையைக் கண்டுகொண்டது. அரச அதிபர் தேசப்பிரியவும்,முசலி;ப்பிரதேச செயலாளர் திரு.கேதீஸ்வரனும் வில்பத்துக் காணியில் எவ்வித சட்டவிரோத…
முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ய கூட்டாக இணைந்துள்ள கடும்போக்குவாதிகள்
– அபூ அஸ்ஜத் – பௌத்த மதம் சமாதானம்,இன உறவு ,விட்டுக் கொடுப்பு என்பன போன்ற ஏனைய மதத் தவர்களுக்கு பங்கம் விளைவிக்காத நல்ல கொள்கையினையே வலியுறுத்திவருகின்றது.பௌத்தர்களாக இருந்தாலும்,இஸ்லாமியர்களாக இருந்தாலும்,ஏனைய மதத் தவர்களாக இருந்தாலும் எல்லோரும் மனிதர்கள் என்ற உயர் கொள்கையினை எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொண்டுள்ள வேளையில் இந்த நாட்டில் அண்மைய காலமாக இந்த தத்துவத்தை மிஞ்சி பௌத்த மதத்தின் பெயரால் சில இனவாத சக்திகள் மேற்கொண்டுவரும் அடக்கு முறைகளும்,அட்டூழியங்களும் எல்லை கடந்து செல்வதை காணமுடிகின்றது. சமூக வலைத்தளங்களை…
வில்பத்து விவகாரம், விசாரணைக்கு ஜனாதிபதி மைத்திரி உத்தரவு
வில்பத்து சரணாலயத்தில்; காடுகள் அழிக்கப்பட்டு அங்கு நிர்மாணப்பணிகள் முன்னெடுப்பதாக வதந்திகள் பரப்பப் படும் நிலையில். இது குறித்து விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார்.
வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் இல்லை: மாவட்ட செயலாளர்
மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வில்பத்து வனப்பகுதியை அண்டிய குடியிருப்புகள் தொடர்பாக நேரில் கண்டறியச் சென்ற ஜே.வி.பி உறுப்பினர்களை சந்தித்த மாவட்ட செயலாளர் அங்கு அவ்வாறு எதுவிதமான சட்டவிரோதமான குடியேற்றமும் இல்லையென தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் ஜே.வி.பி மேல் மாகாண சபை உறுப்பினர் லால் காந்த. 24 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்களுக்கே அங்கு மீள் குடியேறும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தம்மிடம் நேரில் தெரிவித்ததாகவும் லால் காந்த மேலும் தகவல் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் அங்கு…
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தவறென வாதித்த ஊடகவியளாளர் குழுவிற்கு அதே இடத்தில் பதிலடி கொடுத்த அமைச்சர் றிஷாத் (வீடியோ இணைப்பு)
உஸாமா பாஹிம் கடந்த காலங்களில் இருந்து அமைச்சர் றிஷாத் பல்வேறுபட்ட இனவாத அமைப்புகளினால் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றார். இதில் மக்கள் விடுதலை முண்ணணி கட்சியின் உறுப்பினர் லால் காந்தன்,காணி அமைச்சின் செயலாளர்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முசலி பிரதேச செயலாளர் கலந்து கொண்டு வில்பத்து தொடர்பான உண்மை நிலையினை ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
எனது ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பல்ல: மஹிந்த ராஜபக்ஷ
எனது ஆட்சியில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர், பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தன்னைவிட்டு தூரமானதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாடு பிளவுண்டால் பேரழிவைச் சந்திக்க நேரிடும்: மைத்திரிபால சிறிசேன
எந்தக் காரணத்துக்காக மக்கள் பிளவுண்டாலும், பிளவுபடுத்தப்பட்டாலும் பேரழிவையே சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியல் நிகழ்ச்சி நிரலை விட நாட்டின் நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அதிகாரத்திற்காக பிளவுபடுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவதா என்பது பற்றி அனைவரும் தீர்மானமெடுக்கும் தருணமிது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை மாகம்புர ருஹுணு மரபுரிமை அருங்காட்சியகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு…
மாகாண நிதி ஒதுக்கீட்டில் இருந்து சிலவற்றை பெற்றுத்தர உ றுதியளிக்கின்றேன் – றிப்கான் பதியுதீன்
பாடசாலையின் கோரிக்கை தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதினின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாடசாலையின் சில தேவைப்பாடுகளை தமது மாகாண நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுத்தருவதாகவும் கூறினார். வவுனியா சூடுவேந்தபுளவு அல்-இக்பால் பாடசாலை யில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது – வவுனியா மாவட்டத்தின் கல்வி…
சிறுவர் பாதுகாப்பு குழு மற்றும் சிறுவர் கழகங்களுக்கு அலுமாரிகள் வழங்கி வைக்கப்பட்டன
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிறுவர் பாதுகாப்பு குழு (YCRMC)மற்றும் சிறுவர்கழங்கள் என்பவற்றின் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வோர் சைல்ட் நிறுவனத்தின் அனுசரனையில் எஸ்கோ நிறுவனத்தின் வழிகாட்டலில் அலுமாரிகள் வழங்கி வைக்கப்பட்டன. உதவி பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் வோர் சைல்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதி மரினா டொறிஸ் லீனஸ் பொன்னக்கோன், எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.பிரித்தியோன்,…
நீதி மன்றம் அதிரடி; ஞானசாரவை கைது செய்ய உத்தரவு!
திமன்றுக்கு சமூகமளிக்காமை அடுத்து கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பித்துள்ள கொழும்பு பிரதான நீதவான், அவரை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். (TM)
