Headlines

எனது ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பல்ல: மஹிந்த ராஜபக்ஷ




எனது ஆட்சியில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர், பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தன்னைவிட்டு தூரமானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *