Main News
பொய் சொல்கிறார் நாமல் : பொலிஸ் பேச்சாளர் கூறுகின்றார்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொய்யுரைப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். இந்தக் கூட்டத்திற்குள் இராணுவ கேப்ரல் ஒருவர் ஆயுதத்துடன் பிரவேசித்து ஜனாதிபதிக்கு அருகாமையில் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த இராணுவ கோப்ரல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் எனவும், அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின்…
தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்த 65 இலங்கையர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்
நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவியபோது, தென்னிந்தியாவிற்கு சென்று, அங்கு தங்கியிருந்த 65 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர். தமிழகத்தின் அகதி முகாம்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய தலையீட்டினால், நாடு திரும்பவுள்ளனர். இலங்கையர்கள் இரண்டு விமானங்கள் மூலம் இன்று முற்பகல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இந்த மக்கள், அவர்களின் சொந்த இடங்களில்…
1959 இல் பண்டாரநாயக்காவை படுகொலை செய்தது போன்று, மைத்திரியை படுகொலைசெய்ய முயற்சி – ராஜித சேனாரத்ன
-எம்.ஏ. எம். நிலாம்- ஜனாதிபதியின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, அன்று 1959 பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டது போன்றதொரு முயற்சி இன்றும் காணப்படுவதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடப்பாட்டை மக்கள் கொண்டிருப்பதாக தெரிவித்தார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக சில சக்திகள் ஜனாதிபதி…
வில்பத்து விவகாரம் விளக்கமளிக்கும் நிகழ்வு வெள்ளவத்தையில்
ஏ.எஸ்.எம்.ஜாவித் கடந்த 25 வருடங்களாக அகதிகளாக இருந்து தற்போது மன்னார் சிலாவத்துறைப் பகுதியில் மீள் குடியேறும் மக்கள் வில்பத்துக் காணிகளை சட்ட விரோதமாக பிடிக்கின்றார்கள் என பல ஊடகங்களில் இனவாதிகள் பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அதன் உண்மை நிலைகளை கண்டறிய “உடநடித் தீர்வுக்கான குழு” எனும் அமைப்பு சிலாவத்துறைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அதன் அறிக்கைகளை பொதுமக்கள், கல்விசார் சமுகம், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள், சட்ட அறிஞர்கள் என்போருக்கு விளக்கும் நிகழ்வு RRTஅமைப்பின் தலைவர் சட்டத்…
யார் இந்த பழனி பாபா????வாசிக்க படவேண்டிய வரலாறு!!!
சுப.கார்த்திகேயன் சமுக ஆர்வலர் யார் இந்த பழனி பாபா???? வாசிக்க படவேண்டிய வரலாறு!!!அநீதிகளுக்கெதிராகவும்,அரசு அடக்குமுறைகளுக்கெதிராகவும் போராடி ஓய்ந்த ஒரு மாவீரனின் வரலாறு!!!அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். இவரது திறமையைக் கண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது அலியை அறிமுகப்படுத்திவைக்கும்போது, அவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன் “பாபா” என்றுஅறிமுகப்படுத்துவார். அதுபோலவே அஹமது அலி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது தனது…
அதிர்ச்சிகர சம்பவம் ;மிஹின் லங்கா விமானப் பயணத்தின் போது உறக்கத்தில் ஆழ்ந்த விமானி!
இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான மிஹின் லங்காவின் விமானியான கப்டன் ஒருவர் நடுவானில் வைத்து தமது கடமையை மறந்து உறங்கிய சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த மே முதலாம் திகதியன்று சார்ஜாவில் இருந்து கொழும்பை நோக்கி வந்த எம்ஜே 408 மிஹின் லங்கா விமானத்திலேயே இந்தியரான கப்டன் வாஹ் என்பவர் சுமார் 20 நிமிடங்கள் வரை உறக்கம் கொண்டதாக முறையிடப்பட்டுள்ளது. மும்பாயை சேர்ந்த இவர், வழமையாக இடியோசையின் போதும் உறங்கக் கூடியவர் என்ற சாதனையை கொண்டுள்ளார். எனினும்…
சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் CID தொடர்ந்து விசாரணை!….
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன தற்போது குற்றப் புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். முன்னாள் ஆட்சியின் போது ஜனாதிபதி அலுவலக வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்தியதாக சஜின்வாஸ் குணவர்த்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (11) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட சஜின்வாஸ் குணவர்த்தன தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
எரிபொருள்களுக்கு தட்டுப்பாடில்லை!
எரிபொருள்களின் விலை அதிகரிக்கப் போவதாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக் காட்டியுள்ள மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு, நாட்டில் எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, எரிபொருள்களின் விலையை அதிகரிப்பதற்கு எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதற்கு ஒரு போது இடமளிக்கப்படமாட்டாது என்றும் அது அறிவித்துள்ளது. எரிபொருள் மாபியாக்கள் மூலமாக முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்களை நம்பவேண்டாம் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் பெளசியின் மகன் நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு….
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியின் மகனான நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி இனிமேல் படம் வரைய மாட்டேன் : சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் கேலி சித்திர ஓவியர் ரொனால்ட் லோஸியர் அறிவிப்பு….!!
மௌலவி செய்யது அலி ஃபைஜி நபிகள் நாயகம்ம் அவமதித்து கேலி சித்திரம் வரைந்த சார்லி ஹெப்டோவின் தலைமை ஓவியர் மனம் திருந்தினார் இனி நபிகள் நாயகத்தை அவமதிக்கும் விதத்தில் எந்த கேலி சித்திரத்தையும் வரைய மாட்டேன் என்றும் அறிவித்தார். சார்லி ஹெப்டோ என்ற பிரான்ஸ் நாட்டை சார்ந்த கேலி சித்திர பத்திகை 2006 ஆம் ஆண்டில் இருந்தே நபிகள் நாயகம் தொடர்ப்பான பல்வேறு கேலி சித்திரங்களை வரைந்து முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்தது அனைவரும் அறிந்த விசயம் இந்த…
கமரூனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து!
பிரித்தானிய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள டேவிட் கமரூனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், பிரித்தானியாவுடன் இலங்கை மிக நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
