Headlines

முஸ்லிம்களுக்கு எதிராக புதிய இனவாத நாடகம் அரங்கேற்றம் : அமைச்சர் றிஷாத் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை மூடி மறைத்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் றிஷாத் பதியூதின், பெரும்பான்மை இன ஊடகங்கள் சில முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்திற்கு தூபமிடுகிறது என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியூதீன் மேலும் தெரிவிக்கையில், பெரும்பான்மை இன ஊடகங்களும் சில இனவாத சக்திகளும் இணைந்து இன்று புதியதொரு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளனர்….

Read More

தொடர்ந்து தூங்கும் மிஹின் லங்கா விமானி.. இது மூன்றாவது முறை

மிஹின் லங்கா பயணிகள் விமானத்தில் பணிபுரியும் இந்திய விமானி மீண்டும் ஒருமுறை தமது உறுதிமொழியை தகர்த்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹின் லங்கா விமானியான கப்டன் வாஹ், ஏற்கனவே இரண்டு தடவைகள் விமான ஓட்டத்தின் போது நித்திரை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார். இதன்பின்னர் அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கப்பட்டார். இந்தநிலையில் தாம் இனிமேல் விமானப் பயணங்களின் போது நித்திரை செய்ய மாட்டேன் என்று அவர் எழுத்துமூலம் உறுதியளித்திருந்தார். எனினும் பங்களாதேஸ் – கொழும்புக்கு இடையிலான சேவையின் போது…

Read More

வில்பத்து விவகாரம் தொடர்பில் இன்று TNL ஜனஹன்ட நிகழ்வில் றிஷாத் பதியுதீன் பங்கேற்பு

வில்பத்து விவகாரம் தொடர்பில் சிங்கள சமகத்தில் மத்தியில் இருந்த ஐயப்பாட்டை ஓரளவாவது நீக்கிய அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் அது தொடர்பான விளக்கங்களை வழங்கும் பொருட்டு TNL தொலைக்காட்சியில் இடம்பெறும் ஜனஹன்ட நேரடி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இன்று திங்கள் கிழமை இரவு 9.30 மணிக்கு குறித்த ஜனஹன்ட நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. அம்பாறை மாவட்டம் தீகவாபி தொடர்பில் அன்று சிங்கள மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சைக்கு குறித்த தொலைக்காட்சி ஊடாகவே முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம்…

Read More

எங்களுடைய உரிமையைவிட்டுக் கொடுக்கின்ற கோழைகளாக நாங்கள் இருக்கத் தேவையில்லை – றிஷாத் பதியுதீன்

அண்மைக்காலமாக இந்தநாட்டில் இனவாதம் தலை தூக்கியிருக்கிறது. எந்தளவுக்கு என்றால் எங்களுடைய சொந்த பூமியான கரடிக்குழி, மறிச்சிக்கட்டி, பாலைக்குழி,பெரியமடு ஆகிய கிராமங்களில் காடுகளை அழித்து குடியேறுவதற்குக் கூட நாங்கள் பௌத்த சமயக் கோட்பாட்டுக்கு அநியாயமிழைக்கின்ற ஒரு சமூகமாக இந்தநாட்டில் இருக்கின்ற 90 விகிதமான சிங்கள மக்கள் மத்தியிலே காட்டுகின்ற வகையில் இலங்கையில் இருக்கின்ற சிங்கள ஊடகங்கள் திட்டமிட்டு சதிசெய்து கொண்டிருக்கிறது. அவை மட்டுமல்ல இந்தப் பிரதேசங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒருகாட்டுப் பிரதேசமாககெசட் பண்ணப்பட்டுள்ளது. இதில் சோந்தக்…

Read More

அதிவேக கடல் பாதுகாப்பு ரோந்து படகு ஏற்றுமதியில் இலங்கை முந்துகின்றது!

இலங்கையின் ஏற்றுமதி வருவாயினை பெற்றுத்தருவதில் படகு உற்பத்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தெற்காசியாவிலேயே மிகப் பெரிய சர்வதேச தரத்திலான படகுகளை வடிவமைத்து ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இலங்கை கருதப்படுகின்றது என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைபடுகின்றேன் அத்துடன் அதிவேக கடல் பாதுகாப்பு ரோந்து படகு ஏற்றுமதியிலும்; இலங்கை முந்துகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதிவேக கடல் பாதுகாப்பு ரோந்து படகுகளினை இந்தியா கடல் படையினருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருந்த படகுகளினை பார்வையிடுவதற்கு…

Read More

லசந்த விக்கிரமதுங்க ​கொலை: மேர்வின் சில்வாவையும் விசாரித்தது குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது. கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சகாப்தீன் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றது.முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிடமும் இதுதொடர்பில் விசாரணை செய்து, வாக்குமூலம் பதிவுசெய்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதற்கமைய, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணைகளை ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.2009 ஆம் ஆண்டு…

Read More

மங்கள சமரவீர – ஜேர்மனி அமைச்சர் சந்திப்பு

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று பேர்லினில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் பிராங்-வோல்டர் ஸ்டென்மியர், இலங்கையில் மாற்றத்துக்கான காரணவாதி என்று மங்கள சமரவீரவை புகழ்ந்தார். இலங்கையில் மேற்கொள்ளப்படும் அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்துக்கு ஜேர்மன் அரசாங்கம் உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.இதேவேளை தமது விஜயத்தின் போது மங்கள சமரவீர, ஜேர்மனின் புத்திஜீவிகள் சபையில் உரையாற்றவுள்ளார்.

Read More

வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை இனவாதத்துடன் பார்ப்போருக்கு எதிராக இன்று மருதமுனையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

– பி.எம்.எம்.காதர் – வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் சக்திகளுக்கு எதிராக நேற்று மருதமுனையில்(22-05-2015)கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டனர். இங்கு ‘பேரினவாதிகளே வடபுல முஸ்லிம்களை வாழவிடு! ,முஸ்லிம் தலைமைகளே சமூகத்திற்காக ஒன்றுபடுங்கள்! ,பொதுபல சேனாவே முஸ்லிம்களைச் சீண்டாதே உள்ளீட்ட பல சுலோகங்களை கவனயீர்ப்;பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

Read More

அமைச்சர் றிஷாதை வெளிநாட்டு சக்திகளுடாக தோற்கடிப்பதற்கு பல சதி- சுபையிர்

றியாஸ் ஆதம் வடமாகாணத்தில் பிறந்து இந்த நாட்டில் தேசிய அரசியலில் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைமைத்துவமாகப் பிரகாசிக்கும் அமைச்சர் றிசாட் பதியுத்தீனை வெளிநாட்டு சக்திகளுடாக தோற்கடிப்பதற்கு பல சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்; கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிரின் முயற்சியினால் ஏறாவூர் இரும்பு வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு வாகான உதிரிப்பாகங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்…

Read More

வில்பத்து தொடர்பில் – பிரதமர்

அஸ்ரப் ஏ சமத் இன்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஜ.தே.கட்சியின் தலைமைக் காரியலயமான ‘சிறிகொத்தவில்’ ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவரிடம் என்னால் எழுப்பட்ட கேள்வி – கௌரவ பிரதம மந்திரி அவர்களே – வடக்கு முஸ்லீம்கள் மீள் குடியர்த்தும் விடயத்தில் நீங்கள் இன்னும் அமைதியாகவே இருக்கின்றீர்கள் ? வில்பத்து விடயத்தினை ஒரு இன பிரச்சினையாக சிலர் முன்னெடுக்கின்றனரே ? பிரதமர் ரணில் பதில் – இல்லை இந்த விடயத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதனை கையாளுகின்றனர். அவரே…

Read More

ஜனாதிபதி அவர்களே! வில்பத்து காட்டை அழித்தே முஸ்லிம்கள் குடியேற முயற்சிக்கிறார்கள் என்று நீங்களுமா கூற வருகிறீர்கள்?

வில்பத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்! வில்பத்துவில் காடுகளை அழிப்பது ஒரு தவறான காரியமாகும். எங்கும் எந்தவொரு காடும் எவராலும் அழிக்கப்படக் கூடா. அதற்கு ஒரு போதும் அனுமதிக்கப் போவதுமில்லை. இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும்தான். அது உண்மையே ஆனால், அதற்காக காட்டுப் பகுதியை அதற்காகப் பயன்படுத்த இடமளிக்க முடியாது’. அதிரடிப்படையின் உத்தரவிலேயே கடந்த அரசில் வில்பத்துவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன (ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

Read More

எந்த சவாலையும் சந்திக்கும் துணிவும், தியாகமும் றிஷாத் பதியுதீனையே சாரும்..!

-அபூ அஸ்ஜத் – தற்போது எமது நாட்டில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டுவரும்,குறிப்பாக ஊடகங்கள் பிரபலம் செய்துவரும் வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம்களின் குடியேற்றஙகள் என்னும் தலைப்பிலான செய்திகளுக்கு ஹிரு தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம் பெற்ற பலய என்னும் சிங்கள மொழியிலான கலந்துரையாடல் பெரும் தெளிவினை ஏற்படுத்தியுள்ளாக ஆய்வாளர்களும், சில ஊடகவியலளார்களும் தமது கருத்துக்களை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதில் இருந்து காணமுடிகின்றது. இற்றைக்கு ஒரு மாத காலமாக குறிப்பிட்டு பேசப்பட்டுவரும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும்…

Read More