Headlines

20 ஆம் திருத்தத்தின் புதுகணக்கை ஏற்க முடியாது : மனோ கணேசன்

பிரதமரினால் நேற்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட 20ஆம் திருத்த யோசனையில் உள்ளடங்கியுள்ள தொகுதிகள் 125 + மாவட்ட விகிதாசாரம்  75+ தேசிய விகிதாசாரம் 25 என்ற புதிய கணக்கை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்காது என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, எங்கள் கூட்டணியின் கடும் எதிர்ப்பை நமது பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்து கூறியுள்ளார் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…

Read More

1875 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட இலங்கை முத்திரைகள், புத்தகங்களாக வெளியாகிறது

1875ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை வௌியிடப்பட்ட முத்திரைகள் பெயர்பட்டியலை தொகுத்து-  மூன்று பகுதிகளாக வௌியிட தபால் திணைக்களத்தின் முத்திரை வௌியீட்டு காரியாலயம் நடவடிக்ைக மேற்கொண்டுள்ளது. அதற்கமைய குறித்த காலப்பகுதியில் வௌியிடப்பட்ட அனைத்து முத்திரைகளின் புகைப்படங்களும் அவற்றுக்கான தொழில்நுட்ப தகவல்களும் இத்தொகுப்பில் வௌியிடப்படவுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச முத்திரை  ​சேகரிப்பாளர்களுக்கு இலங்கையில் வௌியிடப்பட்ட முத்திரைகள் தொடர்பான தௌிவான தகவல்களை பெற்றுக்ெகாள்ளும் நோக்கிலும் பாடசாலை நூலகங்களுக்கு பயனளிக்கும் நோக்கிலும் இந்த முத்திரை தகவல் அடங்கிய குறித்த தொகுப்புகள் …

Read More

20வது தேர்தல் திருத்தம்: பிரச்சினை என்ன?

(தொகுப்பு அஸ்ரப் ஏ சமத்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் 20வது தேர்தல் திருத்தம் சம்பந்தமாக முஸ்லீம்கள் இழக்கும் பாராளுமன்ற ஆசனங்கள் பற்றிய அவரது கருத்துக்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் சிறுபான்மைகள் குறிப்பாக முஸ்லீம்கள் 95வீதத்திற்கு மேல் வாக்களித்து ஜனாதிபதியாகத் தெரிபு செய்வதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை செய்தவர்கள். என்பதற்கு நன்றிக் கடனாக அவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கு மேல் குறைக்கின்ற ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்த முற்படக் கூடாது….

Read More

புதுக்குடியிருப்பு ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

இர்ஷாத் றஹ்மத்துல்லா யுத்தத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிறுப்பு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் டெஸ்கோ ஆடை உற்பத்தி நிலையத்தினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் ,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று பார்வையிட்டுள்ளார். கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் ஆடை உற்பத்தி நிறுவகங்கள் காணப்படுவதாலும்,இதன் மூலம் இப்ப்பிரதேசத்தில் மேலும் ஆயிரக்கணக்கான  இளைஞர்,யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில் இதனது உற்பத்தியினை மேலும்  விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் றிசாத்  முகாமைத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்….

Read More

சுகைப் எம். காசீமின் நூல் வெளியீடு; பசீர் சேகுதாவுத் ஆற்றிய முழு உரை

அஸ்ரப் ஏ சமத் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் (பா.உ) அண்மையில் கொழும்பில நடைபெற்ற சுகைப் எம். காசீமின் நூல் வெளியீட்டின்போது பசீர் சேகுதாவுத் ஆற்றிய முழு உரை ஹிட்லரின் பாணியில் முஸ்லிம்களைப் பற்றிய சுத்தப் பொய்கள் இனவாதிகளினால் அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நம்புகின்றவர்களின் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கடந்த ஜனவரி 8ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் என்பது…

Read More

1 இலட்சம் ருபாவே செலவழித்து முதன் முதலில் பாராளுமன்றம் சென்றேன் – மைத்திரி

அஸ்ரப் ஏ சமத் விசேட அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சரவை பத்திரமே இருக்கும். அது 20வது தேர்தல் அரசியலமைப்பு சம்பந்தப்பட்டவையாகும். இன்று  எனது தலைமையில் எவ்வாறேனும் அப் பத்திரத்திரத்தை அனுமதிப்பதாகும். அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் இந்த நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதியான 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து அத் சீர்சிருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை தமது கையை உயர்த்தி அனுமதித்தல் வேண்டும். என இன்று கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் நடைபெற்ற ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி கொழும்பு சம்மேளத்தில்…

Read More

“பொதுபல சேனா சூழ்ச்சி மிக்கதென மஹிந்த ராஜபக்ச, தற்போது புரிந்து கொண்டுள்ளார்”

பொதுபல சேனா அமைப்பிற்கு பாதுகாப்பு வழங்கியது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சித்தமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பு இந்நாட்டு முஸ்ஸிம் மக்களை அழுத்தத்திகுற்படுத்தினார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காமைக்கு காரணம் பொதுபல சேனா எனவும், வட மாகாணத்தினுள் கோத்தபாய ராஜபக்ச…

Read More

தவளைகளின் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் – சோபித தேரர்

பாராளுமன்ற உறுப்பினர்கள் தவளைகளின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒர் சந்தைப் பண்டமாக மாறியுள்ளதாகவும் எந்த நேரத்திலும் அதனை விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவளைகள் ஒரு பக்கத்திலிருந்து மற்றைய பக்கத்திற்கு தாவுவதனைப் போன்றே பாராளுமன்ற உறுப்பினர்களும் தாவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மிருகங்களுடன் பணியாற்றுவதற்கு வனவிலங்கு…

Read More

சிகிரியா ஓவியங்கள் அழியும் அபாயம்!

உலகப் புகழ்பெற்றதும் யுனெஸ்கோவினால் உலகின் வரலாற்று பாரம்பரியங்களுள் ஒன்றாக அடையாளம் காட்டப்பட்டதுமான இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் அழியும் அபாய நிலையில் இருக்கின்றன என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தொல்பொருளியல் திணைக்களத்தினால் இந்த ஓவியங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை. இதனாலேயே இந்த அழிவு அபாயம் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்படுகின்றது. சிகிரியாவில் பல ஓவியங்கள் அழிவடைந்து விட்ட நிலையில் தற்போது 22 ஓவியங்களே இருக்கின்றன. இவையும் சரியான பராமரிப்பு இல்லாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளன. இலங்கையின் முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கும்…

Read More

மரிச்சிகட்டி முஸ்லிம்களின் சொந்த பூர்வீகத்தை பெற்றக்கொடுக்க கையெழுத்து வேட்டைக்கு துணைபுரிய வேண்டுகோள்….!

ரஸீன் ரஸ்மின் வுன்னி முஸ்லிம்களின கௌரவமான மீள்குடியேற்றத்திற்கும், மன்னார் மரிச்சிகட்டி முஸ்லிம்களின் சொந்த பூர்வீகத்தை பெற்றக்கொடுப்பதற்கும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து வேட்டை துணையாக இருக்க வேண்டும். எனவே, இலங்கையில் வாழும் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை விரும்பும் அனைவரும் தமது ஒப்பங்களையும் இட்டு அந்த மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட சமூக அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் யுத்த…

Read More

மக்களின் நம்பிக்கையை இழந்தவர்கள் எமக்கு எதிராக பிரேரணை கொண்டு வருவது வேடிக்கை – அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க

  மக்­களின் நம்­பிக்­கையை இழந்த கூட்­ட­ணி­யினர் மக்கள் நம்­பிக்­கையை வென்ற எம்­மீது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது வேடிக்­கை­யா­னது என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தலை நடத்தும் பட்­சத்தில் மக்­க­ளுக்கு யார் மீது நம்­பிக்கை உள்­ளது. யார் மீது நம்­பிக்கை இல்லை என்­ப­தனை புரிந்­து­கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்­பிட் டார். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­ டுள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு…

Read More

விவா­தத்­திற்கு இட­ம­ளி­யோம்

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீது பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­து­வ­தற்கு நாம் இட­ம­ளிக்க போவ­தில்லை. அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஒன்று அல்ல, நூறு நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைகள் கொண்டு வந்­தாலும் எமக்கு பிரச்­சி­னை­யில்லை. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை தொடர்பில் தீர்­மானம் எடுக்கும் அதி­காரம் எம்­மி­டமே உள்­ளது என நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். பிர­தமர் மாத்­தி­ர­மின்றி முழு அர­சாங்­கத்­தையும் வீட்­டுக்கு அனுப்­பி­விட்டு புதிய பாரா­ளு­மன்­றத்தை உரு­வாக்­கு­வதே எமது நோக்­க­மாகும். இந்ந சந்­த­ர்ப்பத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை என்­பது அர்த்­த­மற்ற…

Read More