Main News
40 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்!
ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டே, இலங்கைக்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கு வரும்போது, இருதரப்பு உடன்பாடுகளில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் கையெழுத்திடவுள்ளதுடன், கொழும்பில் புதிய ரஷ்ய தூதரகத்தையும் திறந்து வைக்கவுள்ளார். ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் 1972ம் ஆண்டு தொடக்கம், 1976ம் ஆண்டு வரை கொழும்பில் உள்ள சோவியத் ஒன்றியத் தூதரகத்தில் இராஜதந்திரியாகப் பணியாற்றியவர் என்பதும், சிங்கள மொழியில்…
200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்ற 15 கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு
லங்காபுத்ர அபிவிருத்தி வங்யிலிருந்து 200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாதுள்ள 15 கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 750 லட்சம், 1000 லட்சம் ரூபா என்ற வகையில் கடன் பெற்ற வர்த்தகர்களில் சிலர் ஒரு தவணைக் காசையாவது செலுத்தாது இருப்பதாக வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடற்றொழில் நடவடிக்கைக்கென கூறி ஒருவர் பெற்ற கடனை கடற்றொழில் நடவடிக்கையில் இடாமல் வேறு…
(படங்கள்)இன்று மரிச்சுக்கட்டியில் ஆரம்பமானது கையெழுத்து வேட்டை….!
– மறிச்சுக்கட்டியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா- மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,கொண்டச்சி பூர்வீக கிராமங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் தம்மை இங்கிருந்து வெளியேற்ற எடுக்கப்படும் வேலைத்திட்டத்தை கண்டித்தும்,,தமது தாயக பூமியில் இறுதி மூச்சு வரை தாங்கள் வாழ்வதற்கு அரசாங்கம் உரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என கோறி 2 இலட்சம் மக்களின் கையொப்பத்தை பெறும் வேட்டை இன்று ஞாயிற்றுக்கிழமை இப்பிரதேச மக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மறிச்சுக்கட்டி மொஹதீன் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த கையொப்பம்…
RRT சார்பாக சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு விடுத்துள்ள அவசர வேண்டுகோள்….
வில்பத்தை அண்டிய பகுதியில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் குடியேறியவர்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (07) ஞாயிற்றுக்கிழமை கையொப்ப வேட்டை ஒன்று ஆரம்பமாகிறது. மரிசிக்கட்டியில் முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீகத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் உடைந்து, தூர்ந்து போய்க் கிடக்கும்பள்ளிவாசலுக்கு அருகில் இந்த கையொப்ப வேட்டை அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. சுமார் 2 இலட்சம் முஸ்லிம்களின் கையொப்பங்களைத் திரட்டும் இன்றைய முதல் நாள் வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விஸ்தரிக்கப்பட்டு நாட்டிலுள்ள 2,000 பள்ளிவாசல்கள் ஊடாக…
றிஷாத் பதியுதீனுக்கு கிழக்கிலும் ஆதரவு கூடுகிறது – பஷீர் ஷேகுதாவூத்
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் ஷேகுதாவூத் நீண்டதொரு உரையை நிகழ்த்தினார் . அவரது உரை ஆக்கபூர்வமானதாக இருந்தாலும் காலம், நேரம் என்ற பிரச்சினை காணரமாக விரைவாக முடியாதா என்ற ஏக்கப் பெருமூச்சு மண்டபத்தில் நிறைந்து காணப்பட்டது. சபை மரபு, பஷீர் ஷேகுதாவூதுக்கு மரியாதை என்ற இரு காரணங்களால் எவரும் மண்டபத்தை விட்டு வெளியேறவில்லை….
அமைச்சுப் பதவியை துறந்து முஸ்லிம் சமுகத்திற்கு போராடத் தயார் – றிஷாத் பதியுதீன்
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் வில்பத்து விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிக்கை ஒன்றினைக் கையளித்துள்ளது. இந்த அறிக்கை நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது என அமைச்சிர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். நேற்று (06) கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய “வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றச் சவால்கள்“ மற்றும் வில்பத்து தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் கலந்து…
பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது; சம்பிக்க ரணவக்க
நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் எரிபொருள் வளத்துறை அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்க நாடு முழுவதும் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 1186 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எவ்விதப் பிரச்சினையுமின்றி பெற்றோல் விநியோகிக்கப்படுமெனவும் தெரிவித்தார். இலங்கையில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளையடுத்து அது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். -Thinakkural-
20 ஐ நிறைவேற்றிக்கொள்ள முடியாவிட்டால், பாராளுமன்றததை உடனடியாக கலைப்பேன் – மைத்திரி
20ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிவில் சமுக பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்து ஐந்து மாதங்களாக இது குறித்து சுயாதீமான விவாதிக்கப்பட்டு வருகிறது. தமது 40 வருட அரசியல் வாழ்க்கையில், சட்ட மூலம் ஒன்று தொடர்பில் இந்த அளவு…
ஜனாதிபதி மைத்திரிக்கு ஒரு அகதி முஸ்லிமிடமிருந்து, கண்ணீருடன் கடிதம்..!
மேன்மைதகு ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோக்ஷலிசக் குடியரசு ஜனாதிபதி செயலகம் கொழும்பு 01 விடயம்: கவனிப்பாரற்று கிடக்கும் குக்கிராமங்களைத் தத்தெடுப்பது தொடர்பாக ஜனாதிபதி அவர்களுக்கு தீவிரவாத, இனவாத மற்றும் குடும்ப ஆட்சி முடிவுற்று மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் ஜனநாயக, நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது,. இந்த ஆட்சி மாற்றத்திற்கான எமது முயற்சி தோல்வியடையவில்லை என்ற சந்தோசம் எனக்கு எப்போதுமே இருக்கின்றது. நல்ல தேக ஆரோக்கியத்துடன் தொடர்ந்தும் நல்லாட்சி புரிவதற்கு கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு என் மடலைத் தொடர்கின்றேன். எனக்கு இப்போது 30…
FCID பொலிஸ் பிரிவை ரத்து செய்யவும்..! அல்லே குனவன்ச தேரர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு
பொலிஸ் மா அதிபரினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவையும், அதனால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட சகல விசாரணைகளையும் அதிகாரமில்லாததாக செய்யுமாறும் வேண்டி நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அல்லே குணவங்ச தேரர், பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகிய இருவரும் இணைந்து குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்து தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் இந்த பிரிவினால், முன்னெடுக்கப்படும் சகல விதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறும்…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வாக்குப்போட வசதி செய்யுங்கள்..!
எமது நாட்டிலிருந்து மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுச் சென்றுள்ளவர்களின் வாக்குரிமையை புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டுமென வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான ஐக்கிய உறுப்பினர்கள் அமைப்பு வலிறுத்தியுள்ளது. அத்துடன் அவர்ளின் வாக்குரிமையையும் தொழில் உரிமைகளையும் வலியுறுத்தி எதிர்வரும் 22ஆம் திகதி சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கிய பாரிய பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ள அவ்வமைப்பு பேரணியின் இறுதி தினமான 27ஆம் திகதி ஜனாதிபதியிடம் தமது கோரிக்கைகளடங்கிய மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வெளிநாட்டில் தொழில் புரியும்…
ஊடகவியலாளர்களுக்கு மிகவிரைவில் மோட்டார் சைக்கிள்
ஊடகவியலாளர்களின் நலன்கருதி மோட்டார் சைக்கிள்கள் வழங்குவது தொடர்பான விபரங்கள் இவ்வார இறுதியில் தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஊடகவியலாளர்களின் நலன் கருதி மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.தகவல்களை முழுமையாக அறிந்துகொண்ட பின்னர் விண்ணப்பங்களை ஊடக அமைச்சில் பெற்றுக்கொள்ளலாம். அதற்கமைய இலங்கை பிரஜையாக இருத்தல், 5 வருட…
