Main News
அப்துல் கலாம் வருகிறார்; இலங்கைக்குதான்!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள சக்தி மற்றும் வலு தொடர்பான மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொள்வதற்காக கலாம், இலங்கைக்கு வரவுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை விடுத்த அழைப்பை கலாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை 2 இலட்சம் கையெழுத்து வேட்டை
– வடக்கு முஸ்லீம்களுக்கான முன்னணி – வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த கோரி இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையினை தொடர்ந்து இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை பெறுகின்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது . வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இந்த கையெழுத்து வேட்டை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிளும் அந்தந்த பிரதேச மஹல்லாக்களை மையப்படுத்தியும் இடம்பெறவுள்ளது. வடமாகான உலமா சபை, அல்ஜாசீம் ஆராய்ச்சி நிறுவனம், உடனடி தீர்வுக்கான குழு, (RRT), அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள்…
வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் முன்னணி ஒன்றை அமைக்க வேண்டும் -சுபைர்
– அபூ பயாஸ் – முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது கட்சி பாகுபாடுகளை மறந்து ஒன்றிணைந்த முஸ்லிம் முன்னணியொன்றை அமைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்எஸ் சுபைர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் கொலைப்பட்டியலிலிருந்து விடுவித்து ஜனாதிபதியாக நாமம் சூடுவதற்கு முஸ்லிம்கள் பெரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். ஆனபோதிலும், தற்போது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதிகூட தட்டிக்கேட்பதில்லை என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர்-தாமரைக்கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் கல்விப்…
சிறை செல்வதற்கும் தயார் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்!!!
-SLTJ ஊடகப் பிரிவு- ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் தொடரப்பட்டுள்ள மத நிந்தனை வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியில் ஆற்றிய ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்ற குற்றச் சாட்டில் ஜமாத்தின் செயலாளர் உட்பட தலைமை நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று 11.06.2015 கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் நீதிபதி…
சனத் ஜெயசூர்யா உட்பட நான்கு பிரதியமைச்சர்கள் நியமனம்
பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பிரதியமைச்சர்கலாக நியமனம் பெற்றுள்ளனர். சனத் ஜயசூரிய, எரிக் வீரவர்தன, விஜய தஹநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களே பிரதியமைச்சர்கலாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளதனர்.
“ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, வாபஸ் பெறுமாறு மைத்திரி கேட்கவில்லை”
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கேட்கவில்லை என மறுத்த முன்னாள் அமைச்சரும் மகிந்த ஆதரவு எம்.பி.யுமான தினேஷ் குணவர்தன பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒரு போதும் வாபஸ் பெறப் போவதில்லையெனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பெரேராவால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார் தினேஸ் குணவர்தன எம்.பி.tks
தரம் ஒன்றிற்கு இனி 35 மாணவர்கள் மாத்திரமே
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு ஆகக்கூடியது 35 மாணவர்களே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2007ம் ஆண்டு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாணவர்கள் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலக தராதர அங்கீகார தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)
இலங்கை தராதர அங்கீகார சபை ஏழாவது வருடமாக “தராதர அங்கீகாரம், சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான வழங்குகைக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளில் 2015 ஆம் ஆண்டுக்கான உலக தராதர அங்கீகார தினத்தினை கொண்டாடுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கை தராதர அங்கீகார சபை சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட் நிகழ்வில்;கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொன்டபோது.
“பிரதமருக்கு எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி
“எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை செயற்பாட்டை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தைக் கோருவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதன்படி பார்க்கும்போது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனை அரசியலமைப்பின் 20 ஆவது…
“ஷரியா வங்கி முறையை தடை செய்” -பொதுபல சேனா
இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது அந்த அமைப்பின் தலைவர் திலந்த வித்தானகே இதனைத் தெரிவித்துள்ளார். இஸ்லாமியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஷரியா வங்கி இலங்கையில் வேகமாக பரவி வருகின்றதாக கூறிய வித்தானகே இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சாட்டினார். பொருளாதார நடவடிக்கைகளுக்கு…
முஸம்மில் இனவாதக் கருத்துக்களை உடன் நிறுத்த வேண்டும் – வை.எல்.எஸ். ஹமீட்
எஸ்.அஸ்ரப்கான் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு தம் எஜமானர்களின் ஊது குழலாக செயற்பட்டு முஸ்லிம் சமூகத்தை அபகீர்த்திக்குள்ளாக்குவதையும், முஸ்லிம் சமூதாயம் தொடர்பாக இனவாதிகளின் கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கின்ற அறிக்கைகளை வெளியிடுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஹம்மட் முஸம்மிலுடைய தலைவர் விமல் வீரவன்சவின் முஸ்லிம் விரோத கருத்துக்களை…
தேர்தல் ஆணையாளருடன் பொதுபலசேனா பேச்சு
பொதுபல சேனா இயக்கம்தனியான ஓர் அரசியல் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட உள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியொன்றுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளா கலகொடத்தே ஞானசார தேரர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே ஆகியோர் தேர்தல் ஆணையாளரை நேற்று சந்தித்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வடக்கு மாகாணத்தை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களுக்கும் வேட்பாளர்களை களமிறக்க பொதுபல சேனா திட்டமிட்டுள்ளது.
