Main News
பாராளுமன்ற குழுவொன்றை மறிச்சுகட்டிக்கு அழைத்துவர தயார் -கிரியல்ல
அஸ்ரப் ஏ சமத் வில்பத்து வனத்தில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்ரியிடம் சில கடும்போக்காளர்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெற இடமளிக்க முடியாது என பெருந்தோட்ட துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார். மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலியின் முன்னாள் கண்டி மாவட்ட அமைப்பாளர் மடவளை ஹனீப் அவர்களுக்கு கிரியல்ல அவர்களின் பாததும்பற ஹரிஸ்பத்துவ முஸ்லிம் விவகார இணைப்பு…
15 பில்லியன் தரகுப் பணம், அம்பலப்படுத்தும் சந்திரிக்கா
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மாத்திரம் கடந்த அரசாங்கம் 15 பில்லியன் தரகுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உத்தேச தேர்தல் சீர் திருத்தத்தை ACMC நிராகரிப்பு – YLS ஹமீட்
எஸ்.அஸ்ரப்கான் இன்று 2015.06.12 வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சிறுபான்மை கட்சிகளின் எதிர்ப்பபையும் மீறி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்காக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற உத்தேச தேர்தல் சீர் திருத்தத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமையாக நிராகரிப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் காட்டமாக சற்று முன் குறிப்பிட்டார். இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது, விகிதாசார பிரதிநிதித்துவமும், தொகுதி முறையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை இருக்கின்ற நாடுகளில் எல்லாம் இரட்டை வாக்குச் சீட்டு முறையே நடைமுறையில்…
20வது திருத்தத்தினை ஏற்க முடியாது – எம்.ஐ.எம். முகைதீன்
அஸ்ரப் ஏ சமத் கடந்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் பட்ட தேர்தல் மறுசீரமைப்புக்கான 20வது திருத்த சட்டம் தொடர்ப்பான ஐக்கிய தேசிய கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்ற அங்கிகாரத்திற்காக முன்வைக்கப்பட இருக்கின்ற யோசனையை தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு வன்மையாக நிராகரிக்கின்றது என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம். முகைதீன் தெரிவித்துள்ளார். இன்று கூட்டமைப்பின் தலைவர் வி. ஆனந்த சங்கரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை…
மருதானை ஸாஹிரா பள்ளியில் இடம் பெற்ற கையெழுத்து வேட்டை (படங்கள் இணைப்பு)
இன்று வெள்ளிக்கிழமை (12-05-2015) முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடித்து மீள் குடியேற்ற உரிமையை உறுதிப்படுத்த கையெழுத்து வேட்டை ஆரம்பமானது. இது தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் குறிப்பிட்ட பள்ளிவாசல் மஹல்லாக்களை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது
மஹிந்தவை நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டாம்: அமீர் அலி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு பொதுமக்கள் இடம்தரக்கூடாதென சமுர்தி துறை பிரதியமைச்சர் அமீர் அலி கோரிக்கை விடுத்துள்ளார். காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இந்தக்கோரிக்கையை விடுத்தார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நல்லாட்சியை பிடிக்கவில்லை என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். இவர்களே மஹிந்த ராஜபக்சவை மீண்டும் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக்க முனைந்தவர்களாவர். எனினும் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து மைத்திரிபாலவுக்கு வாக்களித்தன் மூலம் நல்லாட்சியை ஏற்படுத்தினர் என்று அலி தெரிவித்தார்.
ரமழான், தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 17ம் திகதி புதன் மாலை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெறும். உலமாக்கள், கதீப் மார்கள், ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள மற்றும் தக்கியா, ஸாவியா ஷரீஆ கவுன்சில் அன்ஜுமன் பாயிஸ் இ ரஸா மேமன் ஹனபி பள்ளி ஆகியவற்றின்…
தடைகளை தகர்த்தெறிவோம் : ஜூம்ஆவுக்குப் பின் தயாராகுவோம்
ஏ.எச்.எம் பூமுதீன் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள அத்தனை சதி முயற்சிகளையும் தகர்த்தெறிய இன்று(12) ஜூம்ஆவுக்குப் பின் முழு முஸ்லிம்களும் தயாராகி வருவதாக தெரியவருகின்றது. ஜூம்ஆ தொழுகைக்கு பின் தத்தமது கையெழுத்துக்களை பதிவு செய்து வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மீள்குடியேற்ற தடைகளை தகர்த்தெறிய புறப்படுமாறு விடுத்த வேண்டுகோளை அடுத்தே இவ்வாறு முஸ்லிம்கள் ஒன்றுபட்டு தயாராகி வருகின்றனர் ஹலால் ,ஹபாயா மற்றும் பள்ளிகளின் மீதான தாக்குதல்களின் போது முஸ்லிம் சமுகம் அடைந்த உணர்ச்சிபூர்வமான சூழ்நிலைகளை போன்று வடமாகாண…
கையெழுத்திட்டு நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள் – றிஷாத் பதியுதீன்
வட மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடுபூராக உள்ள ஜூம்மாப்பள்ளி வாயில்களில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து சீட்டில் உங்கள் கையெழுத்தை வைத்து நீங்களும் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள். எமது உரிமைக்காய் என்றும் போராடுபவர்களாகவும் தன்மானமுள்ள முஸ்லிம்களாகவும் இருக்க அல்லாஹ் என்றும் துணை இருப்பானாக! – றிஷாத் பதியுதீன்
கப்பல் கூட்டுத்தாபனத்தின் கப்பல்கள் எல்லாவற்றையும் கடந்த அரசாங்கம் விற்றுவிட்டது
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் முன்னைய காலத்தில் 20 க்கும் மேற்பட்ட கப்பல்களை தம்மகத்தே வைத்திருந்தது. ஆனால் தற்போது கப்பல் கூட்டுத்தாபனத்திடம் கப்பல்கள் எதுவும் இல்லை எனவும் அனைத்து கப்பல்களையும் கடந்த அரசாங்கம் விற்று விட்டது எனவும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். கப்பல் கூட்டுத்தாபனத்தின் 44 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு கொழும்பு துறைமுகத்தில் உள்ள island wisdom கப்பலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…
ஜனாதிபதி ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் நியமிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, இன்று (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நியமனங்களை முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க மற்றும் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதற்கமைய, இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நியமனங்களை முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க மற்றும் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
வடக்கு முஸ்லிம்களுக்கான கையெழுத்து வேட்டை ; நாளை வெள்ளிக்கிழமை நாடுபூராகவும் முன்னெடுப்பு
ஏ.எச்.எம்.பூமுதீன் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றபட்ட முஸ்லிம்;களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி 02 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் பாரிய பணி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து நாடுபூராகவும் இடம்பெறவுள்ளது. நாடுபூராகவும் உள்ள ஜூம்ஆ பள்ளவாசல்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த கையெழுத்து வேட்டையை ஐந்து அமைப்புக்கள் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் ஒன்றியம், உடனடித் தீர்வுக்கான குழு, அல்ஜாஸீம் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வடமாகாண உலமா சபை ஆகியனவே அந்த 05…
