Main News
புனித நோன்பு ஆரம்பமும்; றிஷாதின் வேண்டுகோளும்
ஏ.எச்.எம்.பூமுதீன் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலக வாழ் முஸ்லிம்கள் அனைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு, புனித நோன்பு மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த வேளையில் இந்த 30 நாட்களையும் கண்ணியமிக்கதாகவும் சகோதர இனங்களுக்கு இடையில் பரபஸ்பர நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையிலும் எமது செயற்பாடுகளையும்…
இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு
இலங்கையில் மீண்டும் ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 29 அமர்வு நேற்று ஆரம்பமாகியது. அந்த அமர்வில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதன் பாதையில் தொடர்ந்தும் பயணிக்குமாறும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தினால் ஆகஸ்டில் வெளியிடப்படவுள்ள அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. செப்டம்பரில் அறிக்கையை…
நம்பத்தகுந்த பொறிமுறை அவசியம்- செய்ட் அல் ஹுசைன்
இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்போது நம்பத்தகுந்த பொறிமுறை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன், 29வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆரம்ப நிகழ்வில் நேற்று பங்கேற்று இந்த கோரிக்கையை விடுத்தார். இலங்கை அதிகாரிகள் இந்த விடயத்தில் தெளிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய அரசியல்அமைப்பு திருத்தம், நாட்டில் புதிய ஜனநாயக ஆட்சி தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது…
வருட இறுதியில் இலங்கை வருகிறார் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்த வருட இறுதியில் இலங்கை வரவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சியாம் கொலை – வாஸ் குணவர்தனவுக்கு பிணை?
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர், சுமார் இரண்டு வருடகாலமாக சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனும் அடங்குவார். எனினும் சட்டவிரோத ஆயுதங்களை தம்மிடம்…
அமைச்சர் றிஷாதை கைது செய்ய கோரும் சிங்கள ராவயவிடம் சில கேள்விகள்?
-சித்திக் காரியப்பர் – எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய வேண்டுமென்றும் அவ்வாறு நடைபெறாவிட்டால் எதிரான போராட்டம் வெடிக்கும் என்றும் சிங்கள ராவய என்ற இனவாத அமைப்பு தெரிவித்துள்ளது. வில்பத்து தேசிய வனம் மற்றும் மடு பிரதேசம் ஆகியவற்றில் இயற்கை வளங்களை அழித்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்படாவிடின் குற்ற விசாரணைப் பிரிவின் முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்த அமைப்பின் செயலாளர் நாயகமான மாகல்கந்த…
முஸ்லிம்களின் எதிர்ப்பினை தேடிக்கொள்ள மஹிந்தவும் அவரது குடும்பமுமே காரணம்: எஸ்.பி
மஹிந்த ராஜபக் ஷ யுத்தத்தை வெற்றி கொண்டதன் மூலம் 96 வீதமான நன்மைகளை வடக்கு தமிழ் மக்களே பெற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழ் மக்களை மஹிந்த ராஜபக் ஷவினால் வெற்றி கொள்ள முடியாமற் போனது. வெறுமனே நாம் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பினைத் தேடிக் கொண்டோம். இதற்கு மஹிந்தவும் அவரது குடும்பமுமே காரணம் என கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் எஸ்.பி .திசாநாயக்க தெரிவித்தார். அமைச்சர் திசாநாயக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலே இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது….
பலசேனா தூஷணம் பாடுகிறது – டிலான் பெரேரா
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைவதற்கு காரணம் கடும்போக்கு வாத அமைப்பைச் சேர்ந்த சில மதக் குழுக்களின் இனவாத செயற்பாடுகளேயாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். “பொதுபலசேனாபோன்ற கடும்போக்கு இனவாத மதக்குழுவுடன் அவர்களது அநாகரிக செயற்பாடுகள் தொடர்பாக நேருக்கு நேர் தகுந்த பதில் கூறியவன் என்ற விதத்தில் இத்தகைய இனவாதிகளின் நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்று அன்று பல தடவைகள் முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்….
உயிர் தியாகம் செய்ய தயார் – ஜனாதிபதி மைத்திரி
“அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்காக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க செய்த தியாகத்தை எமது நாடு மீண்டும் வேண்டி நிற்கிறது. நாட்டுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர எனது உயிரையும் தியாகம் செய்யத் தயாராகவுள்ளேன்” – என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். உலகில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உழைத்த எந்தவொரு அரசியல்வாதியும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்களுடைய உயிர்களையும் கூட தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எந்த சவால்களுக்கும் அஞ்சாது எல்லா சமூக அரசியல்…
எச்சரிக்கை!
தென்கொரியாவில் துரிதமாக பரவி வரும் உயிர்கொல்லியான ‘மர்ஸ்’ வைரஸ் இலங்கைக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் விசேட முன்னெச்சரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் நோய் தடுப்பு பிரிவின் தகவல்படி, வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களை பூரண பரிசோதனை உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 24 மணித்தியால சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை பிரஜைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்…
றிஷாத் பதியுதீனை புதன் கிழமைக்குள் கைது செய்ய வேண்டும் – சிங்ஹல ராவய எச்சரிக்கை
அமைச்சர் ரிசாத் பதியுதீனை நாளை மறுதினம் புதன் கிழமைக்குள் கைது செய்ய வேண்டும் என சிங்ஹல ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வில்பத்து, மடு போன்ற பகுதிகளில் காடழிக்கப்பட்டு வருவாதகவும் அது தொடர்பிலானவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள சிங்ஹல ராவய குறித்த தினத்திற்குள் ரிசாத் பதியுதீ;ன் கைது செய்யப்படவில்லையாயின் எமது அமைப்பு பலத்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. காடழிப்பு நிறுத்தப்பட்டாலும் அது தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு…
முஸ்லிம் மீடியா போரத்தின் போட்டிக்கான இறுதித் திகதி நீடிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடாத்தும் பரிசுப் போட்டிகளுக்கான இறுதித் திகதி ஒகஸ்ட் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
