Headlines

தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள்!

தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள், எதிர்வரும் புதிய நாடாளுமன்றின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட மாட்டார்கள் என திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். தேர்தல் சட்டங்களுக்கு அமைய இம்முறை தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த காலங்களில் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாத மற்றும் நாடாளுமன்றத் தேர்தலி;ல் போட்டியிடாதவர்கள் தேசியப்…

Read More

வீதி விபத்தில் வயோதிபப் பெண் பலி

– அப்துல்லாஹ் – புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா வீதியில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளருமான அப்துல் நாஸர் ஆசிரியரின் தாயான சின்னத்தம்பி மரியங்கண்டு (வயது 70) என்பவரே விபத்தில் சிக்கி மரணித்தவராகும். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த…

Read More

வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று புதன்கிழமை (29) தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இம்முறை தேர்தலுக்காக, ஒருகோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 491 வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார். தபால் ஊழியர்கள், ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை வீடுகள் தோறும் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார். வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட தினங்களாக…

Read More

இலங்கையில் வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை

லண்டனை மையமாகக்கொண்ட வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை தமது அவசர கையடக்க தொலைபேசி பணபரிமாற்றல் சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. இஇசெட் காஷ் என்ற இந்தசேவை தற்போது டயலொக், எடிசலாட் மற்றும் ஹட்ச் பாவனையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சேவையின் ஊடாக 14 மில்லியன் மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்று நிறுவனத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் குறைந்த கட்டணங்களில் இலங்கையில் உள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நேரடியாக பணத்தை அனுப்பமுடியும் என்று வேல்ட்ரெமிட் தெரிவித்துள்ளது.

Read More

கொழும்பு முஸ்லிம்களின் பிரச்சினைகள்

-அஸ்ரப் ஏ சமத்- வெள்ளவத்தை மெரைன் ரைவ் கோட்டலில்  கொழும்பு இளைஞா் கூட்டமைப்பு என்ற அமைப்பு  முஜிபு ரஹ்மானுக்கான ஆதரவும், கொழும்பு வாழ் முஸ்லீம்களது கல்வி, வீடமைப்பு, தொழில் வாழ்வாதார பற்றிய கலந்துரையாடல் சட்டத்தரனி யு.எம். மா்சூக்  தலைமையில் நடைபெற்றது. இதில் கொழும்பு வாழ் புத்திஜீவிகள் வா்த்தகா்கள், இளைஜா்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனா். இஙகு உரையாற்றிய முஜீபு ரஹ்மான் –  உரையாற்றுகையில் கொழும்பில் க.பொ. த சாதார இம்முறை சித்தியடைந்தவாக்ள 5 விதமே. மேல் மாகாணத்தில்…

Read More

சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை, குறித்து ஹிருணிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது உறுப்புரிமையை இரத்துச் செய்துள்ளதை தொடர்ந்து அடுத்த கட்டஅரசியல் நகர்வை தான் மேற்கொள்ளலாம் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தன்னால் ஏதாவது ஒரு கட்சியிலேயே இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பு கவலையையும், நிம்மதியையும் அளித்துள்ளது. இடதுசாரி இயக்கத்தின் மூலம் அரசியலில் நுழைந்ததால் எனக்கு இந்த முடிவு கவலையளிக்கின்றது. கடந்த சில வாரங்களாக இரு தோணியில் கால்வைத்த மனோநிலையில் நான்…

Read More

றிஷாத் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார்- ஜனாதிபதி

1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதன் முறையாக வடக்கிலிலும்,கிழக்கிலும் உள்ள அதிகளவான மக்கள் வாக்களித்தது எனக்கே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத் பதியுதின் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார் என்றும் கூறினார். கிளிநொச்சியில் மொத்த விற்பனை நிலையத்தை இன்று மாலை திற்நத வைத்து உரைாயற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன தமதுரையில் கூறியதாவது, அமைச்சர் றிசாத் பதியுதீன் எனது நெருங்கிய நண்பவராவார்.அவருக்கு எந்த…

Read More

சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது

அஸ்ரப் ஏ சமத் இலங்கை பத்திரிகை ஆசிரியா் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபணமும் 16வது முறையாக சிறந்த ஊடகவியலாளா்களுக்கு வருடா வருடம் தெரிபு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று கல்கிசை பீச் ஹோடடலில் நடைபெற்றது. இலங்கையில் நாளாளாந்த வாரந்த வரும் 30 பத்திரிகைகளில் 3 மொழிகளிலும் 15 பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன இவற்றில் வாழ்நாள் சாதானையாளா்கள் விருது, லத்தீப் பாருக், முன்னாள் தினகரன் ஆசிரியா் எஸ். தில்லைநாதன் வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த வா்த்தக செய்தி…

Read More

புறக்கோட்டை பகுதியில் கடையொன்றில் தீ

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வியாபார நிலையமொன்றில் தீப்பரவியுள்ளது. நேற்றிரவு பென்சி பொருட்கள் (Fancy goods) விற்பனை செய்யும் கடைத்தொகுதி ஒன்றில் பரவிய தீயினால் 06 விற்பனை நிலையங்கள் முற்றாக அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பிலும் இதுவரை மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இந்த தீ பரவலினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

வெள்ளைவேன் கலாசாரமா புதிய இலங்கையா வேண்டும்?

ஜன­வரி 8 ஆம் திகதி ஜன­நா­யக புரட்­சியை பின்­ந­கர்த்தி மீளவும் வெள்ளை வேன் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­து­வதா? அல்­லது ஆகஸ்ட் 17 ஆம் திகதி அனை­வரும் ஒன்­றி­ணைந்து புதிய புரட்­சியை ஏற்­ப­டுத்தி அபி­வி­ருத்­தி­யு­டனும் சிறந்த பொரு­ளா­தா­ரத்­துடனும் கூடிய புதிய இலங்­கையை உரு­வாக்­கு­வதா என்­ப­தனை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஒன்­றி­ணைந்து நல்­லாட்­சியை மேலோங்க செய்து ஒழுக்க பண்­பு­க­ளுடன் கூடிய நாட்டை உரு­வாக்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். வாக்­கு­று­தி­க­ளுடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட…

Read More

இனவாதத்தினை தூண்ட வேண்டாம்!

இன­வா­தத்தைத் தூண்டி அர­சியல் செய்­வ தனை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் உடன் நிறுத்திக் கொள்­ள­வேண்டும். தேர்தல் மேடை­களில் இன­வாத கருத்­துக்­களை கூறி நாட்டை தீயிட்டு நாச­மாக்க முனையக்கூடாது. ஒன்­று­பட்ட இலங்­கைக்­குள்­ளேயே அதி­காரப் பர­வ­லாக்கம் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­ தி­லக தெரி­வித்தார். இதன்­ பி­ர­காரம் இன­வா­தத்தைத் தூண்டி நாட்டை அரா­ஜகப்போக்­கிற்கு கொண்டுசெல் லும் விமல் வீர­வன்ச­விற்கு அடி­ப­ணிந்த கட்­சி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி பின்­தள்­ளப்­பட்­டமை கவ­லை­ய­ளிக்கக் கூடி­ய­தாக இருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்….

Read More

ஒன்றிணைந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டும்!

தென்னாசியப் பிராந்தியதிற்கு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக மாலைத்தீவிற்கு சென்ற போது  அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமை சந்தித்தபோதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More