Headlines

‘வீசி’ தோற்பார் என்றால் வழக்குத் தாக்கல் எதற்கு?

சம்மாந்துறை ஆசிக் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் தோற்பார் எனக் கூறும் முகா – அவரை பாராளுன்றம் செல்ல அனுமதிக்கக் கூடாது என வழக்குத் தாக்கல் செய்துள்ளமை எதற்காக? நியாயக பூர்வமான இந்தக் கேள்வி அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மக்கள் மத்தியிலும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களில் உள்ளவர்கள் மத்தியிலும் நேற்று முதல் எழுப்பப்பட்டு வருகின்றது. உபவேந்தர் இஸ்மாயில் அவரது பதவியை இராஜிநாமா செய்யாமல் வேட்பாளராக குதித்துள்ளார்….

Read More

ரவியின் ஆதவாளர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் சித்தி நஸீமா

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாதம்பிட்டியில் வசிக்கக் கூடிய சித்தி நசீமா42 என தெரியவருகின்றது கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனையடுத்து காயமடைந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இருவர்…

Read More

வன்னி மாவட்டத்திலும் அதிகப்படியான ஆசனங்களையும் பெற்று பாரிய அபிவிருத்திகளை செய்வோம் -பிரதமர்

இலங்கையில் உள்ள எட்டு மாகாணங்களிலும் ஜக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவது உறுதியாகும் என தெரிவித்துள்ள ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இந்த வெற்றியோடு வன்னி மாவட்டத்திலும் அதிகப்படியான ஆசனங்களையும் பெற்று பாரிய அபிவிருத்திகளை செய்வோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். வவுனியா வைரவப் புளியங்குளம் யங்ஸ் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம் பெற்ற ஜக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்…

Read More

முஸ்லிம்களின் தேசியத் தலைவராக றிஷாத் பதியுதீன் வருவார் -சேகு இஸ்ஸதீன்

மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் மாவட்டங்களிலும் ஐ.தே.கவோடு இணைந்து போட்டியிடும் மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் முதலில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து தமது நன்றிக் கடனைச் செலுத்தி முடிக்க வேண்டும்’ என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸதீன் கூறியுள்ளார். மதினாபுரம், சேகுமலைச் சோலையில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பில் சேகு இஸத்தீன் மேலும் கூறியதாவது: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் முஸ்லிம் துவேஷ ஆட்சி காரணமாக,…

Read More

புத்தளம் மக்கள் இந்த சந்தர்ப்பத்தினை தவறவிட்டால் இனி பிரதிநித்துவத்தை பெற முடியாத நிலை -றிஷாத் பதியுதீன்

புத்தளத்து முஸ்லிம் சமூகம் கடந்த 26 வருடங்களாக பெற்றுக்கொள்ள முடியாமல் போன புத்தளத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தரப்பம் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் அதனை இல்லாமல் செய்து இந்த நாட்டு முஸ்லிம்களின் மத கடமைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த மஹிந்த உள்ளிட் பொதுபலசேனா ஆதரவு குழுவினருக்கு வாக்குககளை பெற்றுக் கொடுக்கும் இரகசியங்கள் தொடர்பில் புத்தளம் எனதருமை மக்கள் அவதானமாக இருக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் புத்தளம் நகரில்…

Read More

இரண்டாவது ஆசனத்தினை பெற நகர்ந்து கொண்டு செல்கின்றோம் – சிராஸ் மீராசாஹிப்

– முஹம்மட்- பொத்துவில் பிரதேசம் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை இழந்து தவிக்கின்ற நிலையையும், கடந்தகால மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண சபையில் போட்டியிட்ட எமது மாமாவை தோற்கடிக்க சதித்திட்டம் செய்த தலைமையை நாங்கள் மறக்க முடியாத நினைவுகளுடன் நான் இந்த இடத்திலே மிகவும் சோகமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளளேன். இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்திலே முதல் தடைவையாக இந்த பிராந்தியத்தில் இருக்கின்ற கட்சிகளுக்கு சவாலாக களம் இறங்கியுள்ளது அதன் முதன்மை…

Read More

நாட்டை மீளவும் கட்டியெழுப்ப போரிட தயாராம் : மஹிந்த ஆவேசம்

குறுகியகால புதிய ஆட்சியால் நாடு 25 வருடங்கள் பின்நோக்கிச் சென்றுள்ளது என்று சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நாட்டை மீளவும் கட்டியெழுப்புவதற்காக அரசியல் ரீதியாக போராடவும் போரிடவும் தயாராகவே இருக்கிறார் எனவும் சூளுரைத்துள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பிளவு எதுவும் இல்லை என்றும், ஒரே நாடு, ஒரே அணி என்பதுதான் தனது கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டார். ‘எதிர்காலத்துக்கு உத்தரவாதம்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞபானம் நேற்றுக்…

Read More

இலங்கை முழுவதும் இலவச இண்டர்நெட் ..!

நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது

Read More

உலகின் சிறந்த பொலிஸ் அதிகாரியாக, இலங்கை பெண் தெரிவு

சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and Scholarship விருது இம்முறை கிடைத்திருப்பது இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி விமதி பெரியப்பெரு என்பவருக்காகும். இவ்விருதினை இதுவரையில் இலங்கை பெண் பொலிஸாரினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை, இதுவே முதல் தடவையாகும். குறித்த விருது  ஒகஸ்ட் மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்படவுள்ளது. உலகின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பெண் அதகாரிகளின் செயற்திறன், செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐ.தே.கவை ஆதரிக்க விரும்பும் முஸ்லிம்கள் முதலில் அ.இ.ம.கா.வை ஆதரிக்கட்டும்

– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் – மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் மாவட்டங்களிலும் ஐ.தே.கவோடு இணைந்து போட்டியிடும் மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் முதலில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து தமது நன்றிக் கடனைச் செலுத்தி முடிக்க வேண்டும்’ என்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸதீன் கூறியுள்ளார். மதினாபுரம், சேகுமலைச் சோலையில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடனான சந்திப்பில் சேகு இஸத்தீன் மேலும் கூறியதாவது: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் முஸ்லிம்…

Read More

தேர்தல்கள் சட்ட மீறல்கள் தொடர்பில் 197 பேர் கைது

பாரா­ளு­மன்ற தேர்தல் அறி­விக்­கப்­பட்ட கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை தேர்­தல்கள் தொடர்­பி­லான முறைப்­பா­டுகள் மற்றும் சுற்­றி­வளைப்­புக்­களில் 197 பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்து 57 வாக­னங் களும் கைப்­பற்­றப்­பட்டு வழக்குப் பொருட்­க­ளாக பதி­யப்­பட்­டுள்­ளன. பொலிஸார் மேற்கொண்ட 89 சுற்­றி­வ­ளைப்­புக்கள் ஊடாக நாட­ளா­விய ரீதியில் 170 பேரும் கிடைக்கப் பெற்ற 64 முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் 27 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர்…

Read More

ஜனாதிபதி பங்கேற்கவில்லை

‘எதிர்காலத்துக்கு உத்தரவாதம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று  வெளியிடப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையிலான குழுவினரே இதனை கையளித்துள்ளனர். இந்த வெளியீட்டு வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More