Main News
ரவியின் மற்றுமொரு ஆதரவாளர் பலி!
கொழும்பு, கொட்டாஞ்சேனை புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், இன்று திங்கட்கிழமை(03) அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிரோஷன் சம்பத் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். புளத்சிங்ஹள நிரோஷன் சம்பத் என அழைக்கப்படும் இவர் 36 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பத்தில் காயமடைந்த மேலும் ஐந்து பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(31)…
கம்பஹா மாவட்டமும் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்
இன்று தேர்தல்களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனேகர் தாம் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவெடுத்திருப்பர். இம்முடிவுகளின் தொகுப்பே இனி வரும் ஐந்தாண்டுகளுக்கு எம்மை ஆளப்போகிறது. இவை சாதாரண முடிவுகளல்ல எம்மை ஆளப்போகும் எமது தலையெழுத்துக்களின் பிரதிகள். கம்பஹாவில் A.H.M நவ்ஷாத் மற்றும் சிலர் போட்டியிடுகின்றனர். எமது வாக்கு ஒரு அந்நியருக்குப் போவதால் தனிப்பட்ட இலாபங்கள் தவிர்ந்து சமூகத்திற்கான பிரயோசனங்கள் மிகக் குறைவே. கம்பஹாவைப் பொறுத்தவரை ஒரு முஸ்லீம்பாராளுமன்றபிரதிநிதித்துவம் இன்றைய சூழ்நிலையில் அசாத்தியமே. இருப்பினும் A.H.M நவ்ஷாதிற்கு இடும்…
வன்னி முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி முயற்சிகள் அம்பலம்
முகம்மட் அசாம் – முசலி வன்னி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் முகா வேட்பாளர்கள் 09 பேரினதும் 90 பேர்களை சிலாபத்துறையில் ஒன்று கூட்டிவிட்டு – ரிசாதின் கோட்டை சரிந்தது என்று காட்ட முயல்வது நகைப்பபுக்குரிய இடமானது என முசலிப் பிரதேச மக்கள் கருத்து வெளிப்படுத்தியுள்ளனர். வடமாகாண முஸ்லிம் புத்தி ஜீவிகள் ஒன்றியம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. வன்னி மாவட்டத்தில் ஒன்றுபட்டு ரிசாத் தலைமையில் 03 பிரதிநித்துவத்தை பெறுவோம் என்ற தலைப்பில் அந்த ஒன்றியம் விடுத்துள்ள…
தௌபீக் தனது ஆதரவாளர்களுடன் றிஷாத் பதியுதீனுடன் இணைவு (Photo)
முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திடீர் தௌபீக் சற்று முன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் றிசாத் பதியுதீனை ஆதரித்து அவருடன் இணைந்துகொண்டார்.
அரசியல் வேலைத்திட்டங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளேன் – இஸ்மாயில்
எம்.வை.அமீர் நடைபெறவுள்ள பாராளமன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ள நான், தென்கிழக்கு அலகில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முடிவுக்குக்கொண்டுவரும் எனது வேலைத்திட்டத்தின் கீழ் என்னால் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் 2015-08-01 ம் திகதி சம்மாந்துறையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த காலங்களில் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளமன்றம் சென்ற சில…
15 வருடங்களாக முஸ்லிம் சமுகம் பாழடைந்து கிடக்கின்றது -ஜெமீல்
எம்.வை.அமீர் இந்த பிராந்தியம் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ராப் அவர்களின் மறைவை அடுத்த பதினைந்து வருடங்களாக பாழடைந்து இருப்பதாகவும் அந்த நிலைமை, இன்னும் படு மோசமாகிக் கொண்டு செல்வதாகவும், குறைந்தது இந்த முறை தேர்தலிலாவது மக்கள் ஒரு பாரிய அரசியல் தலைமைக்கான மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் தேசியப்பட்டியல் ஊடாக பாராளமனறம் செல்வார் என எதிர்பார்க்கப்படுபவரும் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் கேட்டுகொண்டார். இன்றைய இளைஞர்களை நாளைய தலைவர்களக்குவோம் எனும் அகில…
அரசியல் லாபங்களை அடைந்து கொள்ள செயற்படும் நபர்கள் இந்த சமூகத்தின் காட்டிக்கொடுப்பாளர்களே
சமூகத்தினை காட்டிக்கொடுத்து அதன் மூலம் அற்ப சொற்ப அரசியல் லாபங்களை அடைந்து கொள்ள செயற்படும் நபர்கள் இந்த சமூகத்தின் காட்டிக்கொடுப்பாளர்களே என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,தலைமன்னார் மக்களின் வீடமைப்பு திட்டத்தை நடை முறைபடுத்த முற்பட்ட போது அதனை பாதுகாப்பு தரப்பாரிடம் பிழையாக தகவல் கொடுத்தவர்கள் இங்கு இருப்பதாகவும் கூறினார். தலைமன்னாருக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன்,மற்றும் வேட்பாளர் எஹியான் ஆகியோருக்கு இப்பிரதேச மக்கள் மாபெரும் வரவேற்பினை அளித்தனர்….
ரவியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்; அமைச்சர் றிஷாத் கண்டனம்
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவில் ஆதரவாளர்கள் மீது கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தனது கண்டனத்ததை தெரிவித்துள்ளார் . இச்சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்து 16 பேர் காயமடைந்தது தனக்கு அதிர்ச்சியை தந்ததுடன் பாதிக்கப்ட்ட குடுபங்களுக்கு தனது அனுதாபத்தைத்தை தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாது இருப்பதற்கு பொலிஸார் எப்போதும்…
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம்: கறுப்பு நிற கார் மீட்பு
கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமெண்டல் பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கறுப்பு நிற ஹைப்ரிட் கார் ஒன்று புளுமெண்டல் பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. புளுமெண்டல் பகுதியில் உள்ள கட்டிடமொன்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது. எனினும் காரின் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இலக்கத்தகடற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் கார் மற்றும் வெள்ளை வேன் ஆகியவற்றில் வந்த…
தவ்ஹீத் ஜமாத்திற்கு மரண அச்சுறுத்தல்
-ஊடகப் பிரிவு – SLTJ- மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களை ஜும்மா தொழுகை நடத்த விடாமல் ஜமாதே இஸ்லாமி ஆதரவாளர்கள் இன்றும் அராஜகம். மாதம்பையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் செய்து வரும் பிரச்சாரங்களுக்கு எதிராக ஜமாதே இஸ்லாமியினர் தொடர்ந்தும் அச்சுறுத்தி வருகின்றனர். கடந்த 07.02.2014 அன்று ஜமாதே இஸ்லாமி காடையர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் மர்கஸை தாக்கி, அங்கிருந்தவர்களுக்கு அடித்து, புனித குர்ஆன் பிரதிகளையும், தஃவா சாதனங்களையும் தீ வைத்து எறித்தார்கள். அதனைத் தொடந்து…
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது
கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார்.அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ACMC புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருகிறது
இந்த நாட்டு அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருவதாகவும்,சகல சமூகங்களின் உரிமைகள் எவ்வித அப்பழுக்கற்ற முறையில் அனுபவிப்பதற்கு தேவைாயன அடித்தளத்தினை இட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணயின் முதன்மை வேட்பாளரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக வரவுள்ளார் என்றும் கூறினார். வவுனியா மதவாச்சி வீதியில் அமைந்துள்ள ஜக்கிய தேசிய முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு…
