Main News
மஹிந்தவால் அவருக்கே வாக்களிக்க முடியாத நிலை!
இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்வ தனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் உடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தேர்தல் மேடைகளில் இனவாத கருத்துக்களை கூறி நாட்டை தீயிட்டு நாசமாக்க முனையக்கூடாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே அதிகாரப் பரவலாக்கம் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணா திலக தெரிவித்தார். இதன் பிரகாரம் இனவாதத்தைத் தூண்டி நாட்டை அராஜகப்போக்கிற்கு கொண்டுசெல் லும் விமல் வீரவன்சவிற்கு அடிபணிந்த கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பின்தள்ளப்பட்டமை கவலையளிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்….
அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்
மாரடைப்பால் நேற்று மரணமடைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாரத ரத்ன விருதைப்பெற்ற இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மரணச் செய்தியை கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதேவேளை, அப்துல் கலாமின் குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக அவரது அனுதாப…
கல்குடா மக்கள் சேவைகள் மன்றம் அமீர் அலிக்கு ஆதரவு
– அனா – எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்; போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியை ஆதரிப்பது என கல்குடா மக்கள் சேவைகள் மன்றம் தீர்மாணித்துள்ளதாக அவ் அமைப்பின் தலைவர் எச்.எம்.எம்.அரூஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. எமது அமைப்பின் விஷேட நிருவாக சபைக்கூட்டம் (25.07.2015) சனிக்கிழமை இடம் பெற்றது இதில் கடந்த…
கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்
மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார் அப்துல் கலாமின் மறைவு குறித்து முகப்புத்தகத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவை புதியதொரு யுகத்திற்கு அழைத்துச் சென்ற தலைசிறந்த மனிதர் மௌனித்துவிட்டார். நீங்கள் எப்போதும் எமக்கு முன்னுதாரணமாயிருப்பீர்கள். உங்களைப் போன்ற ஒரு தலைசிறந்த மேதை மறைந்தது பாரத தேசதுக்கு மட்டுமல்ல அறிவால் நிறைந்த முழு உலகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். உங்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை…
ஒருபோதும் முஸ்லிம் மக்களை தாக்கவில்லை : பொதுபல சேனா
பொதுபல சேனா அமைப்பு மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட யாரும் ஒருபோதும் முஸ்லிம் மக்களை தாக்கவில்லை என அவ் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார். கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திர் அமைச்சர் கே.கே.டீ.எஸ். குணவர்தனவினால் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் மக்களை தாக்கியதாக கூறிய கருத்திற்கு திலந்த விதானகே கண்டனம் வெளியிட்டதோடு, பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் சவால் விடுத்துள்ளார். நாட்டின் அமைச்சர் என்ற ரீதியில் போலியான கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம் இனத்தின்…
இலங்கையில் ISIS ஆபத்தில்லை – மூக்குடைந்த ஞானசார
ஐ.எஸ்.ஐ.எஸ்.களினால் இலங்கையில் ஆபத்து கிடையாது என காவல்துறையினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.இலங்கையில் குறித்த தீவிரவாத இயக்கம் இயங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். தமது உயிருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரான ஐ.எஸ்.ஐ.எஸ். வாதி தம்மை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், குறித்த இயக்கம் இலங்கையில் செயற்பட்டு வருவதற்கான எவ்வித ஆதரங்களும் கிடையாது எனவும், அவ்வாறான அச்சுறுத்தல்கள் கிடையாது எனவும்…
செல்பி எடுத்த மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர்கள் சிலருடன் செல்பி எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். கால்டன் இல்லத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட போதே மேற்படி இளைஞர்களின் வற்புறுத்தலின் பேரில் செல்பி எடுத்து கொண்டதாக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணைக்கு மஹிந்தவே வித்திட்டார் : விஜேதாஸ ராஜபக்ஷ
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே வித்திட்டார். அதனை எதிர் கொள்வது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஒருவிடயமேயல்ல என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தற்போது சர்வதேச விசாரணைக்கு முகம்கொடுக்க அஞ்சுகின்ற போதும் கடந்த காலங்களில் அவரே…
ACMCயின் அட்டாளைச்சேனைக் கூட்டத்தில் கல்வீச்சு தாக்குதல் (photo)
– ரீ.கே.றஹ்மத்துல்லா – அம்பாறை, அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் இடையில் கல்வீச்சு, கூச்சல் மற்றும் குழப்பத்தினால் பதற்றமான நிலைதோன்றியது. அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகாமையில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே கல்வீச்சு நடத்தப்பட்டது. இதனால் கூட்டம் சற்று நேரம் தடைப்பட்டு பதற்றமமானதொரு நிலை ஏற்பட்டது. பின்னர் பொலிஸார்…
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாட்சியாக இருக்கின்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை சோதனைக்கு உட்படுத்துவதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பிலான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முஸ்லிம்களின் புனித நூலான குரானை அவதூரப்படுத்தும் வகையில் கொம்பனிவீதி பொலிஸூக்கு…
ரணில் பிரதமர் ஆசனத்தில் அமர்வதற்கு முன் தனி கரையோர நிர்வாக மாவட்டத்தை பெற்றுக்கொடுப்பேன் – றிஷாத்
– எஸ்.கணேசன் – திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்காளர்கள் இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொடுத்தால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆசனத்தில் அமர்வதற்கு முன்னர் தனி கரையோர நிர்வாக மாவட்டத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் கூறினார்.அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது. கேள்வி: திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை பொதுத் தேர்தலில் போட்டியிட்டதில்லை. இந்த…
ஹக்கீமின் கீழ் வரும் பள்ளிவாசல் காணியை ஏன் அவரால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டது – றிஷாத்
எமது முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வில்பத்துக் காணியில் அவர்களை குடியமர்த்த முற்பட்டபோது நான் காட்டை அழித்து மக்களை குடியமர்த்துகின்றேன் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நாட்டு ஜனாதிபதி கூட வில்பத்தில் அழிவு நடந்திருக்கின்றதென்கின்றார். ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ பயந்து நாம் அரசியல் செய்யவில்லை. எமது சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்றபோது தைரியமாக பேசுகின்ற சக்தியை இறைவன் எமக்குத் தந்திருக்கின்றான் அதுவரை மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்…
