Headlines

முஸ்லிம்கள் குடுக் காரர்களுக்கு, அங்கீகாரம் வழங்கக்கூடாது – ஹலீம்

ரனில் இருக்கும் வரை ஐ.தே.க.யால் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியவர்களது மூற்றுக்களையும் ‘மகாரஜா’ என்றழைக்கப்பட்டவர்களது கூற்றுக்களையும், சிந்தித்தால் அரசியலின் வினோதங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்று தபால் துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார். மடவளை சந்தியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- அரசியல் அரங்கு மிக வினோதமானது. அதில் எதுவும் நிச்சயமற்றது. ஒரு காலத்தில் இனி மகிந்த ராஜபக்ஷவை…

Read More

நாமல் ராஜபக்ஸவுக்கு, டியூசன் கொடுக்க தயாராக இருக்கிறேன் – சஜித்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் தொடர்பில் எவ்வித விழிப்புணர்வு இல்லை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமையினால் அவருக்கு மேலதிக வகுப்புக்களை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். பொது மக்களின் பாதுகாப்பு அரசியல்வாதிகளின் பொறுப்பு.  நாங்கள் செய்யும் நல்ல வேலைகளினால் பொறாமையில் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தாமல் தங்கள் பாடங்களை மாத்திரம் கற்றுக்கொள்ளுமாறு அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். சாதாரண மக்களின்…

Read More

க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு றிஷாத் பதியுதீன் வாழ்த்து

க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களாகிய உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். இந்தப் பரீட்சை உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பரீட்சையென்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களின் குடும்பத்தார் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உங்களை படிப்பித்து இந்தப் பரீட்சைக்கு தயார்படுத்தி அனுப்பியுள்ளனர். அவர்களின் கனவுகளை நீங்கள் நனவாக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கின்றேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் குருவானார் றிஷாத் பதியுதீன் 

Read More

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். நாளைய தினம் ஆரம்பமாகும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு 3லட்சத்து 9ஆயிரத்து 69 மாணவர்கள் பரீட்சையில் தோற்றவுள்ளனர். 2லட்சத்து 36ஆயிரத்து 72 பேர் பாடசாலை ரீதியாகவும்,72ஆயிரத்து 997 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். நாடுபூராகவும்,2180 பரீட்சை மத்திய நிலையங்களும்,303 இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை பரீட்சை கடமைகளில் 22ஆயிரம் பேர் ஈடுபடுவார்கள் என்று…

Read More

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு இன்று அடிக்கல்!

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல் இன்று (03) காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. இதன் முதற்கட்டமாக கடவத்தை முதல் மீரிகம வரையில் 37 கிலோமீற்றர் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதன்படி கடவத்தை, மீரிகம, பொதுஹேர குருணாகல் ஊடாக தம்புள்ளை வரையிலும் கடவத்தை மீரிகம பொத்துகேபுர ரம்புக்கன, கலகெதர ஊடாக கண்டி வரையிலும் இந்த அதிவேக பாதையில் பயணிக்கலாம்.

Read More

முப்படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது : ருவன் விஜயவர்த்தன

நாட்டில் நிலைகொண்டுள்ள முப்படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அவ்வாறானதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து படைவீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும்,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தேர்தலை முன்னிட்டு ,எதிர்க்கட்சியினரால் வழமையாக முன்னெடுக்கப்படும் பொய்ப் பரப்புரைகளை கேட்டு பொதுமக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்று…

Read More

நாசகார சக்திகளுக்கு எதிராக நாம் துணிந்து பேசினோம்

பாரம்பரியமாக இருந்த எமது காணிகளை அபகரித்து கொண்டு அதனை மக்களுக்கு கொடுக்காமல் இருந்த போது அதனை பெற்றுக்கொடுக்க முடியாத அரசியல் தலைமைகள் இந்த மாவட்டத்திலும் இருந்ததை பார்க்கின்றேன் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் திருமலையில் உள்ள கருமலையூற்று பள்ளிவாசலினை பாதுகாப்பு தரப்பு ஆக்கிரமித்து வைத்திருந்த போது அதனை கூட மீட்டுக் கொடுக்க முடியாத பாராளுமன்ற பிரதி நிதித்துவம் இந்த மாவட்டத்தில் இருந்ததாகவும் கூறினார். திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய தேசிய…

Read More

தாஜுதீனின் சடலம் தோண்டி எடுப்பு!

-Al Mashoora- மகிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சி காலத்தில் (2012) திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ரக்பி விழையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் சடலம் மேலதிக விசாரணைக்காக (02.08.2015) தெகிவளை மைய்யவாடியில் தோண்டி எடுக்கப் பட்டது.

Read More

அணிவகுப்போம் அறப்போருக்கு!

A.S.M.இர்ஷாத் அணிவகுப்போம் அறப்போருக்கு… ஏற்றமிகு சமுதாயமா? ஏமாறும் சமூகமா? வெற்றிகரச் செயலா? வெற்றுப் பேச்சா? ஏற்றமிகு வன்னி மாவட்டத்தின் கண்ணியம் மிக்க முஸ்லிம் வாக்காளர்களே… உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக! உக்கிரமும், நெருக்கடிகளும் மிக்க இக்கட்டான சூழ்நிலையில் திக்குத் தெரியாது வாக்குச் சாவடி நோக்கி விரையும் உடன் பிறப்புக்களே ! கொஞ்சம் நில்லுங்கள்! பாதையைவிட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது. பட்டுப்போகும் மரத்திலிருந்து நிழலோ பழமோ கிடைக்காது. உரிமை காக்கும் துணிவை அரணாக கொண்டு முஸ்லிம் சமூதாயத்தில் மறுமலர்ச்சியை…

Read More

நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெறும் அரசியல் கலாச்சாரம் என்னிடம் இல்லை

தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி அவர்களின் நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வங்குரோத்து அரசியல் கலாசாரம் தன்னிட மில்லையென அமைச்சரும் வன்னி மாவட்ட வேட்பாளருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது, நான் என்றுமே மக்கள் பணியாளனாகவே இருந்து வருகின்றேன். அரசியலுக்காக மட்டும் மக்களிடம் வருவதில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின்…

Read More

அ.இ.ம.கா. கல்முனை அலுவலகத்துக்கு தீவைப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக் குடியில் திறந்திருந்த தமது அலுவலகத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் விஷமிகள் தீவைத்துள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பாகப் போட்டியிடும் கலீலுர்றஹ்மான் என்பவரின் அலுவலகமே தீ வைக்கப்பட்டதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. இந்தத் தீ பரவாமல் சமயோசிதமாக அணைக்கப்பட்டதாகவும் அலுவலகத்தில் இருந்த தேர்தல் விளம்பர சுவரொட்டிகள், மற்றும் பிரசுரங்கள் கட்டிடத்தின் சிறிதளவான பகுதி…

Read More

மாகாண சபைகள் கலைப்பு – 2016 ஜூனில் தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தற்போதுள்ள மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. கிழக்கு மாகாண சபை உட்பட ஏனைய அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்படவுள்து. அதன்படி 2016 மே மாதம் கலைக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏழாம் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(sm)

Read More