Main News
தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் அ.இ.ம.கா.வுக்கு ஆதரவு
அப்துல் ஜப்பார் சமீம் அறிக்கை தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் நடைறெவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரிப்பதற்கு திர்மானித்துள்ளதாகத் தெரிவித்து அதன் தலைவர் அப்துல் ஜப்பார் சமீம் ஜே.பி அறிக்கையொன்றை வெளியீட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- கல்முனையை தலைமையகமாகக் கொண்டு முழு தென்கிழக்கிலும் 200க்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு இயங்கிவரும் எமது தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் புதன் கிழமை (05-08-2015) மருதமுனையில் நடைபெற்றபோதே…
சதித்திட்டம் தொடர்பிலான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது – றிஷாத் பதியுதீன்
தேர்தல் நெருங்கும் இந்த வேளை சந்தர்ப்பம் பார்த்து எதிர்காலத்தில் என்னை முழுமையாக அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரம் கட்டுவதற்கும் எனது சமுகத்தை பாதாளத்திற்குள் தள்ளிவிடுவதற்கும் மேற்கொள்ளப்பட்டிருந்த சதித்திட்டம் அம்பலாமாகியுள்ளது. இதற்கான ஆதாரம் ஒளி,ஒலி வடிவிலான சிடியில் உள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து முறைப்பாடொன்றை கொடுத்துள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். வில்பத்து காணி விவகாரம் தொடர்பில் அமைச்சருக்கு எதிராக சுற்றுச்…
தேர்தலுக்காக இதுவரை 49லட்சம் வாக்குச்சீட்டுக்கள் விநியோகம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, இதுவரை 49இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் செய்து முடிவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எஞ்சிய வாக்குச்சீட்டுக்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் விநியோகம் செய்து முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விஷேட தினங்களாக கடந்த 2ஆம் திகதி அறிவிக்கப்பட்ட அதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதியும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விஷேட தினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தமது வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத…
ராஜபக்ச குடும்பத்தினரை சிறையில் போட்டிருக்கலாம் – ரணில்
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தைப் போல தானும் செயற்பட்டிருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்களை சிறையில் போட்டிருக்கலாம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாம் ராஜபக்சவைப் போன்று மக்களைத் தண்டிக்கமாட்டோம். இல்லாவிட்டால் இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் போட்டிருக்கலாம். நாம் சட்டத்துக்கமையவே செயற்படுகிறோம். விசாரணை செய்ய எமக்கு பொறிமுறையயான்று தேவைப்படுகிறது. ஏனெனில், இந்த மோசடிகள் மூளையைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ளன என்றும் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள இணைய தளத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் ரணில் மேற்…
ஒரு இலட்சத்து 30.000 சவூதி ரியால்களை, கடத்திச்செல்ல முயன்றவர் கைது
சட்டவிரோதமான முறையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் சவூதி ரியால்களை கடத்திச் செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க பிரிவு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். குறித்த நபர், நேற்றிரவு யூ.எல் 281 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தா நகர் நோக்கி புறப்பட இருந்ததாக லெஸ்லி காமினி தெரிவித்தார். தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 54 வயதுடைய ஒருவரே…
நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள்
நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள் என்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு ஆலோசனை கூறினார். முல்லைத்தீவு ஹிஜ்ரா புரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேற்கண்டவாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். வடமாகாண சபை உறுப்பினர் ஜனுாபர் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர்களான விஜின்தன்,எஹியான்,வீ.ஜயதிலக ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும்…
நான் கல்வி அமைச்சரானால்..! அல்ஹாபில் எம்.ஆர்.எம். முனவ்வர்.!!
இன்று (5.8.2015) இடம் பெற்ற 8ஆம் தர இரண்டாம் தவணைப் பரீட்சை தமிழ் மொழி வினாத் தாளில் கேட்கப்பட்ட வினாவுக்கு மாணவனொருவன் எழுதிய விடை என்னை வெகுவாக கவர்ந்தது. “இலவசக் கல்வி சகலருக்கும் கிடைக்க வழி செய்வேன். கல்வியின் தரத்தை உயர்த்துவேன். புதிதாக பாடசாலைகளை உருவாக்குவேன். பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக் கொடுப்பேன். ஆசிரியர், அதிபர் சம்பளங்களை கூட்டுவேன். தேவையான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்குவேன். தொழில் நுட்ப கல்வியை விஸ்தரிப்பேன். பல்கலைக் கழகங்களை உருவாக்குவேன். பல்கலைக் கழகத்துக்கு அனுமதிக்கப்படும்…
ஜெனிவாவை எதிர்கொள்ள விசேட பொறிமுறை வரும்
இலங்கை விவகாரம் தொடர்பான ஜெனிவா அறிக்கைக்கு எமது அரசாங்கம் வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்கும்.தேசிய நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் விசேட பொறிமுறையொன்றை ஆரம்பிப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான உரிய தீர்வினை முன்வைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை முன்நகர்த்தி செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார். என்னை தோற்கடிப்பதற்கு 2005 இல் பிரபாகரனுடன் மஹிந்த ராஜபக் ஷ உடன் படிக்கை செய்து கொண்டமையின்…
காதலனை தேடும் சீ.சீ.டி.
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யாழ்.வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திகா என்ற 34 வயதுடைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் அப்பெண்ணின் இரகசிய காதலனை கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் (சீ.சீ.டி) தேடி வருகின்றனர். குறித்த பெண்ணுடன் கடந்த மூன்று வருடங்களாக ஒன்றாக இருந்ததாக கூறப்படும் யாழ்.பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையே பொலிஸார் இவ்வாறு தேடுவதாகவும், அவர் குறித்த பெண்ணை கொலை செய்திருப்பதாக நம்புவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ்…
கத்தார் சகோதரர் இர்பானின் அனுபவம் இது
ஸூரத்துஜ் ஜுமர் 39 (கூட்டங்கள்) கடந்த ஞாயிறு இரவு வேலை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது. தங்குமிடத்தை அண்மிக்கும் வேளையில் வண்டியிலிருந்து இறங்கி வீதியின் ஓரமாக இருந்த கப்டேரியாவில் உழுந்து வடையும், தேனீரும் அருந்தி விட்டு வெளியேறும் வேளையில் இஷாஹ் தொழுகைக்கான அதான் ஒலித்தது பக்கத்திலிருந்த கெபின் சிறிய பள்ளிவாயலில் தொழுது விட்டுச் செல்லலாம் என எண்ணி பள்ளிவாயலுக்குள் நுழைந்தேன். ரமளானில் ஒவ்வொரு நாளும் குர் ஆனின் ஒரு சிறிய பகுதியை ஓதி…
பாராளுமன்ற உறுப்பினராவதற்கு மஹிந்த ஆசைப்படுவது ஏன் தெரியுமா..?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறார் என்று ஜே.வீ.பி தகவல் வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது, தாஜூதீன் கொலை வழக்கின் விசாரணை நடைபெறும் போது மகிந்த ராஜபக்ச நடுங்குகிறார். ஏன் எனில் அந்த இலக்கு எங்கு செல்கிறது என்று அவருக்கு புரிந்திருக்கிறது. திவிநெகும குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ச இருக்கிறார். எவன்கார்ட் பிரச்சினை மற்றும் மிக் வானுர்தி கொள்வனவு ஊழலில் கோட்டபய…
மகிந்தவை எதிர்கொள்ள சந்திரிக்காவும், சோபித தேரரும் குருநாகலில் பிரச்சாரம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்தவும் குருநாகலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும் 8ம் திகதியன்று இவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இணைந்து சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அடிப்படையில் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளனர். அத்துடன் பல கூட்டங்களையும் அவர்கள் குருநாகலில் நடத்தவுள்ளனர். எனினும் இருவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். இந்தநிலையில் சந்திரிக்கா மற்றும் சோபித தேரரின் நடவடிக்கைகளுக்கு…
