Main News
முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராட உயிர்பெற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம்
முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மு.காவுக்கு முன் (1986) மு.காவுக்குப் பின் என இரண்டாகக் கருதமுடியும். மு. கா. வுக்கு முன் (1986) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் ஊர், ஊராகப் பிளந்து வேறுபட்டுக்கிடந்தன. இப்பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும்…
உருவாகும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள 10 முஸ்லிம் அமைச்சர்கள்
தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எதிர்வரும் நான்காம் திகதியளவில் அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள்…
இந்திய முஸ்லிம்கள் 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்தனர்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011ம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை 25-08-2015 வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் மக்கள் தொகை 121.09 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றிய புள்ளி விபரமும் இதில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களின் மக்கள் தொகையானது 0.8 சதவீதம் அதிகரித்து 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்துகளின்…
உயிரைத் தந்தவளின் உயிரைக் காக்கும் வாய்ப்பு எத்தனை மகன்களுக்கு கிட்டும்?
நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா! நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப எல்லா மகன்களின் பாசத்தையும் ஒரே மகனாக தனது தாயிடம் பொழிந்துக் கொண்டுள்ளார், சீனாவைச் சேர்ந்த ஒரு அன்பு மகன். பெண் குழந்தைகளின் மனதில், தந்தை எப்போதுமே ஹீரோதான். இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே பெண் குழந்தைகள் தான் செய்யும் காரியங்களால் தந்தைக்கு அவ்வப்போது அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பர். ஆனால், ஆண் பிள்ளைகள் தங்களின் தாயின் மீது வைத்துள்ள…
ஸ்மார்ட் போன்களில் எது போலி? எது அசல்?
– செ.கார்த்திகேயன் – புதிது புதிதாய் ஸ்மார்ட்போன்கள் அப்டேட் வெர்ஸன்களுடன் தினம்தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அனைத்து விதமான ஃப்யூச்சர்களையும் பார்த்து ஸ்மார்ட்போன் வாங்குபவர்களைவிட, அதன் செயல்பாடுகளில் ஆர்வமாகி, வெளித் தோற்றம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து வாங்குபவர்களே அதிகம். இதை தெரிந்துவைத்துக்கொண்டு, ஒரு சிலர் ஸ்மார்ட்போன்களில் ஏமாற்று வேலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இன்று எல்லாவற்றிலும் கலப்படம், போலி என வந்துவிட்டநிலையில் தொழில் நுட்பச்சந்தையில் போலி ஸ்மார்ட்போன்களையும் கயவர்கள் களமிறக்கியிருக் கிறார்கள். போலி ஸ்மார்ட்போன்களை ஒரு சில ஃப்யூச்சர்க…
ரஷ்யப் பிரதமருக்கு ஜப்பான் கண்டனம்
ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ் கடந்த 22-ம் தேதி குரில் தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது ஜப்பான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்த சில தினங்களில், ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள குரில் தீவுகளை ரஷ்யா ஆக்கிரமித்தது. இத்தீவுக்கு, ஜப்பானும் உரிமை கொண்டாடுவதால், தீவு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை 70 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், டிமிட்ரியின் இப்பயணத்திற்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும்…
ஆன்லைன் விக்கிபீடியாவுக்கு விதித்த தடையை நீக்கியது ரஷ்யா
இணையதள கட்டுரை களஞ்சியமான விக்கிபீடியாவுக்கு ரஷ்யாவில் திடீரென சில மணிநேரம் தடை விதிக்கப்பட்டது. இது இண்டர்நெட் பயன்பாட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்டது. அண்மையில், ரஷ்யாவில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி, போதை பொருட்களை பயன்படுத்துதல், தற்கொலை உள்ளிட்டவை பற்றிய தகவல்களை விக்கிபீடியாவில் பதிவு செய்தல் தடை செய்யப்பட்ட ஒன்றாக அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் அரசு தகவல்தொடர்பு ஏஜென்ஸி இன்று காலை இதுபோன்ற தடை செய்யப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய ரஷ்ய வீக்கிபீடியா பக்கங்களை முடக்கியது. மேலும்,…
கொழும்பில் முச்சக்கரவண்டி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்
இலங்கையில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியினை செலுத்தி வெற்றியினை கொண்டாடியுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் கொழும்பில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நேற்று மாலையில் ஹர்பஜன் முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து அதனை ஹர்பஜன் சிங் செலுத்தி அணித்தலைவர் விராட் உள்ளிட்ட வீரர்கள் பின் இருக்கையில் அமர்ந்து…
புதிய அமைச்சரவை நாளை பதவிப்பிரமாணம்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சுப் பதவிகளை பகிர்வது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக, கடந்த நாட்களில் நடைபெறவிருந்த இந்த நிகழ்வு பிற்போடப்பட்டு, கட்டம் கட்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் நாளை முதற்கட்டமாக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக 19 அமைச்சர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 16 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் ஏனைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது. புதிய…
புதிய நாடாளுமன்றின் கன்னி அமர்வில் ஜனாதிபதி விசேட உரை
புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி எட்டாவது புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்க உள்ளார். புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளார். எட்டாம் நாடாளுமன்றின் முதல் அமர்வு 1ம் திகதி 9.30 அளவில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது. முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகர், அவைத்தலைவர், ஆளும் கட்சியின்…
அசாத்சாலி அதிரடி!
மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அசாத் சாலி மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வழங்கப்படும் எந்தவொரு பதவிகளையும் தாம் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தமது பெயர் 7ஆவது இடத்தில் காணப்பட்டதாகவும், இதற்கு கட்சியன் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம…
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும், ஊழல் ஒழிப்பிலும் இலங்கை முன்னேறியுள்ளது – அமெரிக்கா
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக, மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக இலங்கை சென்ற அவர், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சரவீர உள்ளிட்ட உயரதிகாரிகளை இன்று காலை சந்தித்து பேசினார். அதற்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசிய அவர், இலங்கை மக்களிடையே, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார். மேலும், இலங்கையில்…
