Main News
புதிய பாராளுமன்றில் அநுர குமார உருக்கமான பேச்சு
இரண்டு கோடி மக்களால் நிரப்ப முடியாத பாராளுமன்றம் அவர்கள் சார்பான 225 உறுப்பினர்களால் நிரப்பப் பட்டுள்ளது. எனினும், அப்பாராளுமன்றின் ஜனநாயகம் மற்றும் நன்னடைத்தை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய பொறுப்போடு புதிய சபாநாயகர் தெரிவாகியுள்ளார் என தெரிவித்தார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க. கடந்த பாராளுமன்றில் ஒரு சிலர் தமதுரைகளின் போது நடந்து கொண்ட விதங்களைப் பார்க்கும் போது பாராளுமன்றுக்குள் பாடசாலை மாணவர்களை இனியும் அனுமதிக்க முடியுமா எனும் கேள்வியெழுந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,…
பிரதம கொறடா கயந்த, அவைத் தலைவர் கிரியெல்ல
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்
8ஆவது பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை 8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும் பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபாலவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை சபை அமர்வுகள் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதி சபாநாயகராக திலங்க சுமத்திபால
8 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக திலங்க சுமத்திபால சற்றுமுன்னர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகரே தெரிவுசெய்வார்
எதிர்க்கட்சித் தலைவர் யாரென்பதை சபாநாயகரே தீர்மானிப்பார். சபாநாயகரின் முடிவே இறுதி முடிவாகும். தேசிய அரசாங்கத்தின் அமைச்சர வைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில் எதிர்க்கட்சித் தலைவராக எவரது பெயரையும் அரசியல் கட்சிகள் பிரேரிக்கலாம். இதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே உள்ளது. எனவே எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகரே தெரிவு செய்வார். அவரின் முடிவே இறுதி…
தாஜுதீன் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் இத்தாலியில்?
றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கொலை என சந்தேகிக்கப்படும் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் இத்தாலியில் உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இரு சந்தேக நபர்களும் கடந்த அரசின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் என குறிப்பிடும் அந்த தகவல்கள் கடந்த அரசாங்கம் அதிகாரத்தை இழந்ததும் அவர்கள் நாட்டை விட்டு இத்தாலிக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந் நிலையில் குறித்த இருவரையும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பிலான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருவதாக…
ரணில் முன்மொழிய, நிமல் சிறிபால சில்வா வழிமொழிய சபாநாயகராக கரு ஜெயசூரிய பதவியேற்பு!
இலங்கையின் 8வது நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் இன்று (o1) தமது முதல் அமர்வுக்காக கூடியுள்ளது. இதன்போது கரு ஜெயசூரியவை சபாநாயகராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார். இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்தார். இந்தநிலையில் ஏனைய யோசனைகள் அற்ற நிலையில் கரு ஜெயசூரிய சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார்
உள்ளுராட்சி தேர்தலில் ACMC தேசிய ரீதியாக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் -அப்துல் பாரி
நடை பெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புதிய வரலாற்றினை படைத்துள்ளதாகவும்,எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்,வடக்கு,கிழக்கு உள்ளிட்ட நாட்டின் தமிழ் பேசும் மக்கள் அதிமாக வாழும் மாவட்டங்களில் தமது சின்னத்திலோ அல்லது அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டோ தமது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்துக்கான அமைப்பின் தலைவரும்,வவுனியா நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான அப்துல் பாரி தெரிவித்துள்ளார். வவுனியா பட்டானிச்சூர அலுவலகத்தின் இடம் பெற்ற எதிர்கால…
கொகா கோலாவுக்கு மன்னிப்பு!
கொகாகோலா நிறுவனத்திற்கு தற்காலிக அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. களனி கங்கையில் எண்ணெய் கழிவு கலப்பதாக குற்றம் சுமத்தி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றாடல் அனுமதிப்பத்திரம் அண்மையில் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டிருந்தது. சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீளவும் அனுமதிப்பத்திரத்தை வழங்க சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. இவ்வாறான தவறுகள் மீள இழைக்கப்படாது என நிறுவனம் உறுதியளித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய காரணத்தினால் தற்காலிக அடிப்படையில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக அதிகார சபையின்…
8 ஆவது பாராளுமன்றனம்.. கரு ஜயசூர்யா சபாநாயகராக நியமிக்கப்பட்டார்
8ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
8ஆவது பாராளுமன்ற முதல் அமர்வு. ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளின் விபரம்
– எம். எஸ். பாஹிம் – எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது சம்பிரதாயபூர்வ அமர்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கோலாகலமாக இடம்பெறுகிறது. சம்பிரதாயபூர்வ அமர்விற்கு முன்ன தாக சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவுக்காக பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்குக் கூடுவதாக பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நில் இத்தகவலை தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெற இருப்பதோடு புதிய சபாநாயகராக கரு ஜயசூரியவின் பெயர் பிரதமர் ரணில்…
மைத்திரியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது தாம், தேர்தல் காலத்தில் ஜனாதிபதி தொடர்பில் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக விமல் வீரவன்ச, மைத்திரிபாலவிடம் மன்னிப்பை கோரினார். எனினும் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போனவை போனவையாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டார். அத்துடன் தாம் எதிரிடை அரசியலை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். இந்தக்கூட்டம் நேற்று…
