Main News
எக்னெலிகொட விவகாரம்: நான்கு இராணுவ அதிகாரிகள் கைது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் நான்கு இராணுவத்தினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். இரண்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள், சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நால்வரும் கைதுச் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குனசேகர தெரிவித்தார். பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்…
இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் தப்பான எண்ணத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்
முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர் இலங்கை தொடர்பாக சர்வதேசத்தில் உள்ள தப்பான எண்ணத்தை சரி செய்வதற்கு முன்னிற்பேன் என முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள டொனி பிளேயர் நேற்று மாலை ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை தொடர்பாக சர்வதேசத்தில் உள்ள…
விசாரணை நடத்த சர்வதேசத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது – ரணில்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்ற சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் அவ்வாறான விசாரணையை கேட்பது இந்நாட்டு நீதித்துறை முறைமை தொடர்பில் நம்பிக்கையை சீர்குலைப்பதற்காகவென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தான விசாரணைகளை மேற்கொள்வதற்கு கடந்த அரசாங்கத்தினால் 2009ஆம் ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித…
சங்காவுக்கு கோலி கடிதம்!
சங்ககாரா விடை பெறுவது குறித்து விராட் கோலி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘அன்பு சங்கக்காரா, அற்புதமான மனிதரான உங்களுடன் கிடைத்த அறிமுகத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் சம காலத்தில் எனக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்தது எனது அதிருஷ்டம்தான். கிரிக்கெட்டில் நீங்கள் படைத்துள்ள சாதனைகளை விளக்க வார்த்தைகளே கிடையாது.பல இளம் வீரர்களுக்கு ஊந்துகோலாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ள நீங்கள் கிரிக்கெட்டுக்காக அளித்த பங்களிப்புக்காக நன்றி. நீங்களும் உங்களது குடும்பமும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்….
இந்தியாவால் முடியாது – சீனா
இலங்கைக்கு அதிக அளவிலான முதலீடுகளையோ, நிதியுதவியையோ இந்தியாவால் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சீன ஊடகம் ஒன்று, இதனைக் கருத்தில் கொண்டு, சீனாவுடனான நல்லுறவை இலங்கை தொடர வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளது. சீனத் தொழில்நுட்பத்துடனோ, நிதிச் சூழலுடனோ இந்தியாவால் போட்டியிட முடியாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊடகம் வௌியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ விரும்பவில்லை. இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரின்…
‘நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன்’ – சங்கா
– எஸ்.ஜே.பிரசாத் – டொக்… என்ற அந்த ஒற்றைச் சத்தம் மட்டும்தான் கேட்கும். திரும்பிப் பார்க்கையில் பந்து பவுண்டரி கயிற்றைத் தொட்டிருக்கும். இனி அந்த சத்தம் கேட்காது… ஆட்டமிழந்துவிட்டோம் என்று தெரிந்துவிட்டால் நடுவரின் கை மேலெழும்பும்வரை காத்திருக்காது நேர்மையாக தானே வெளியேறும் போது ஒரு சிறு புன்னகை முகத்தில் பூக்கும். இனி அந்தப் புன்னகை இருக்காது… உலகில் எங்கு விளையாடினால் ரசிகன் எந்த நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் இவனுக்காக அந்த ரசிகனின் கைகள் தட்டப்படும்… இனி அந்தக் கைத்தட்டல்…
விஹாரை தோறும் சென்றவர்களின் பாவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது
நல்லாட்சிக்கு நிற மற்றும் சின்ன பேதங்கள் எதுவும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெள்ளை ஆடை உடுத்து மலர்க் கூடைகளை எடுத்தக் கொண்டு விஹாரை தோறும் சென்று வழிபாடு செய்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. இவர்கள் எவ்வாறான நிலையைக் கொண்டிருந்தாலும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் முனைப்பின் போது நிற, கட்சி அல்லது சின்ன பேதங்கள் கிடையாது….
பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்
அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இதற்கு முன்னரும் பிரதமரின் செயலாளராக சேவைபு ரிந்த சமன் ஏன்னநாயக்க அவர்கள் இலங்கையின் பொதுநிர்வாக சேவையிலுள்ள அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியாவார். திரு சமன் ஏக்கநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பட்டதாரி என்பதோடு தன்னுடைய பொதுநிர்வாக முதுமணி பட்டப்படிப்பினை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்திலும் நிறைவு செய்துள்ளார். அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான…
வடக்கு கிழக்கு தமிழ்மாநில அதிகார அலகு; ஆலோசனைகள் விரைவில்
வடக்கு – கிழக்கு தமிழ்மொழி மாநிலத்திற்கென ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விதந்துரைத்துள்ள ஒரு நீண்ட காலத்துக்கான தீர்வு தேவையென்ற போதிலும், அதற்கு இன்னும் ஒரு படிமேலே சென்று நீடித்து நிலைக்கத்தக்கதான ஒரு நிரந்தர தீர்வை அடைவதற்கு வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து இயங்கவேண்டுமென முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் (எம்.என்.ஏ) தலைவர் எம்.ஐ.எம்.ஸெயின் கூறினார். முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் வருடாந்தக் கூட்டம் அண்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றபோதே மேற்படி கூறினார். அவர் இங்கு தொடர்ந்து கூறுகையில்…
இலங்கையை வந்தடைந்தார் நிஷா பிஸ்வால்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
Coca-Cola வுக்கு எதிராக இலங்கை அரசு அதிரடி
பல்தேசிய நிறுவனமான Coca-Cola நிறுவனத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. கடுவலை பிரதேசத்திலுள்ள Coca-Cola நிறுவன தொழிற்சாலையின் சுரங்க எண்ணெய் விநியோகக் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அதிகார சபை Coca-Cola நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்துள்ளது. அத்துடன் சுமார் ஒரு பில்லியன் ரூபா வரையில் அபராதமும் விதித்துள்ளது. சுற்றுச்சூழல் அதிகார சபையின் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையினால் குழப்பமடைந்துள்ள…
பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராக செயற்படுமாறு சங்கக்காரவிடம் ஜனாதிபதி பரிந்துரை
பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவராக குமார் சங்கக்காரவை செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இன்று தனது இறுதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இந்தியாவுடன் இடம்பெற்று முடிந்த இப்போட்டியின் இறுதியில் பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குமார் சங்கக்காரவை பிரித்தியானியாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்படுமாறு அழைப்பு விடுத்தார். “குமார் சங்கக்கார விருப்பப்படுவாரோ தெரியாது எனினும் எனது வேண்டுகோளை முன்வைக்கிறேன். அவர் பிரித்தானியாவுக்கான…
