Main News
ஞானசாரதோற்கடிக்கப்பட்டது ஜனநாயகத்தின் சிறந்த வெளிப்பாடு – வாசுதேவ
இராணுவ ரீதியான சிந்தனைகளைக்கொண்ட சரத் பொன்சேகாவும், இனவாத சிந்தனை கொண்ட ஞானசார தேரரும் தோற்கடிக்கப்பட்டுள்ளமையானது சிறந்த ஜனநாயகத்தின் வெளிப்பாடாகும் என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், புதிய இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக்கட்சி எடுத்த முடிவு தவறானது. சுதந்திரக் கட்சிகக்கு வாக்களித்த மக்களின் மனோநிலை மற்றும்…
‘500 மில்லியன் ரூபா, நஷ்டஈடு வேண்டும்’
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிராக மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில திருமணம் முடிப்பதாக ஏமாற்றி ஒரு யுவதியை சீரழித்திருப்பதாகவும், இரும்பு விற்பனை தொடர்பான முறைகேடு ஒன்றில் தொடர்பு இருப்பதாகவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றம் சாட்டியிருந்தார். இது பொய்யான குற்றச்சாட்டு என்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்த கம்மன்பில,…
ரணில் விக்ரமசிங்க, பழிவாங்க மாட்டார் – மஹிந்த
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஈடுபடுவது சுலபமானது எனவும் அவர் துரத்தி துரத்தி பழிவாங்க மாட்டார் எனவும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து தினசரி பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் குமார் வெல்கம எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என…
அந்தத் தகவல் தவறு! மறுக்கும் இலங்கை கடற்படை
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக வௌியான தகவல் தவறு என, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்களை இலக்கு வைத்து எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என, அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டன. இதன்படி எல்லை தாண்டியதாக கூறப்படும் 12 மீனவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இவர்கள் பயணித்த படகுகளும் கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள்…
கொக்கோ-கோலாவின் அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்
இலங்கையில் தயாரிக்கப்படும் கொக்கோ – கோலா நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்துள்ளார். கொக்கோ – கோலா நிறுவனம் தனது உற்பத்திக்கான நீரை களனி கங்கையில் இருந்தே பெறுகின்றது. இந்நிலையில் களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பது அண்மைய ஆய்வுகளில் தெரியவந்ததையடுத்தே குறித்த நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளது. இதனையடுத்தே குறித்த நிறுவனத்தின் உற்பத்திக்கு இடைக்காலத்…
எனது வெற்றிக்கு பாரிய பங்களித்த முஸ்லிம்களுக்கு நன்றி – ரணில் (படங்கள்)
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். நேற்று (25) இந்த வைபவம் இடம்பெற்றிருந்தது. பிரதமரின் வெற்றியை அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கும், நாட்டின் நலனுக்காகவும் இதன்போது விசேட பிரார்த்தனை (துஆ) நடத்தப்பட்டது. இந்த பிரார்த்தனை வைபவத்தில் கலந்து கொண்ட பிரதமர், தனது வெற்றிக்கு பாரிய பங்களித்த கொழும்பு முஸ்லிம்களுக்கு தனது நன்றியறிதல்களையும் தெரிவித்துக் கொண்டார். வைபவத்தில் பிரதமருடன் கொழும்பிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார்,…
வாக்கெண்ணும் நடவடிக்கையில் முறைகேடுகள் எதுவும் இடம்பெறவில்லை : தேர்தல்கள் ஆணையாளர்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையில், எந்தவித முறைகேடுகளும் இடம்பெறவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். விருப்பு வாக்குகள் எண்ணும்போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அண்மைய நாட்களாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமுள்ளன. இது குறித்து ஊடகமொன்றிற்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேர்தல்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை சீர்குலைக்கும் நோக்கில் இக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். விருப்பு வாக்குகள் எண்ணும்போது வேட்பாளர்களின் முகவர்கள்…
இலங்கையிலிருந்து நாளை புறப்படும் முதலாவது ஹஜ் குழு
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்படும் முதலாவது யாத்திரிகர்கள் குழு நாளை புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளதுடன் இவர்களை முஸ்லிம் கலாசார பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் வழியனுப்பி வைக்கவுள்ளனர். ஸ்ரீலங்கன் ஏயார்லைன் மூலம் புறப்படவுள்ள ஹஜ் குழுவினர் அமானத் டிரவல்ஸ், ஸாஹியா டிரவல்ஸ் மற்றும் எம்.டி.எஸ். டிரவல்ஸ் ஆகிய முகவர்கள் ஊடாகவே செல்வதாக அகில இலங்கை ஹஜ் பிரயாண இயக்குநர் சங்கத் தலைவரும் சேப்வே டிரவல்ஸ் அதிபருமான எம்.ஆர்.எம். பாறூக் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவிடம் விசாரணை எது குறித்து தெரியுமா?
ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் நிதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த நிறுவனத்தின் 500 ஊழியர்கள் மற்றும் 60 இலட்சம் ரூபாய் நிதி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்டமை குறித்தே கோட்டாபயவிடம் வினவப்பட்டதாக, அந்த ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார். இன்று காலை ஜனாதிபதி விசாரணை…
புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் இன்று வெளிநாடு பயணம்
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இன்று சுவிட்சர்லாந்து பயணமாகவுள்ளனர். சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் குறித்த மூவரும் நேற்று ( ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில்இ வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ள மங்கள சமரவீர ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலும்இ மீள்குடியேற்ற அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம்.சுவாமிநாதன் அகதிகளுக்கான சர்வதேச மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் சர்வதேச தொழிலாளர்…
ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 250 புதிய முறைப்பாடுகள்
களுவாஞ்சிகுடியில் நடத்தப்பட்ட காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது 250 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுகளுக்காக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது ஆணைக்குழு முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியங்களை அளித்து வந்தனர். வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 315 பேர் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தனர்….
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது
தமிழ் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் கைகோர்க்க வேண்டும். அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவும் அவசியமானது என கோட்டே நாகவிகாரையின் விகராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார். வென்றெடுத்த ஜனநாயகத்தை குழப்பியடிக்க அதிகார மோகம் கொண்ட ஒரு அணி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்….
