Headlines

அசாத்சாலி அதிரடி!




மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அசாத் சாலி மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வழங்கப்படும் எந்தவொரு பதவிகளையும் தாம் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தமது பெயர் 7ஆவது இடத்தில் காணப்பட்டதாகவும், இதற்கு கட்சியன் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம மற்றும் ரவி கருநாணாயக ஆகியோரே பொறுப்புகூற வேண்டும் எனவும் அசாத் சாலி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *