Headlines

எக்னெலிகொட : கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம், பல்­வேறு தக­வல்கள் அம்­பலம்

கடத்­தப்­பட்டு காணாமல் போன ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட, கிரித்­தலை இரா­ணுவ முகாமில் தடுத்து வைக்­கப்­பட்டு, அங்­கி­ருந்து வெலி­க்கந்த முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தாக இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அதன் பின்னர் வெலிக்­கந்த முகாமில் அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பது குறித்து தற்­போது விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் விரைவில் வெலிக்­கந்த முகாமை சோத­னைக்கு உட்­ப­டுத்த மன்றின் அனு­ம­தியை சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னை­யுடன் பெற்­றுக்­கொள்ள உள்­ள­தாகவும் பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட சோதனை அனு­ம­தியின்…

Read More

இனி எந்தவொரு மத அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை

கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் இந்நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்துக்கு ஊறு விளைவித்ததை இந்நாடு கண்டது. அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் முதன்மை வகித்தோம். இன்று நாங்கள் பாடுபட்டு பெற்றுக் கொடுத்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இந்நாட்டு இந்து, இஸ்லாமிய, பெளத்த, கத்தோலிக்க மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது.  என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான…

Read More

விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ரோஸி தாக்கல் செய்த வழக்கு இன்று ஆராயப்பட்டது

முன்னாள் அமைச்சரான ரோஸி சேனநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது. புவனேக அலுவிஹாரே, பியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தனக்கு கிடைத்த வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு ரோஸி சேனநாயக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக ரோஸி…

Read More

175 ஆண்டுக்கு முன் உலகில் வெளியிடப்பட்ட முத்திரையை, இலங்கை மீண்டும் வெளியிடுகிறது

உலகில் வெளியிடப்பட்ட முதலாவது முத்திரை புதிய முத்திரையாக இலங்கையில் மீள வெளியிடப்படவுள்ளது. 1840ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி உலகின் முதல் முத்திரை வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டன் அரசியான விக்டோரியா மகாராணியின் மார்பளவு புகைப்படம் இந்த முத்திரையில் பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அப்போதைய மதிப்பு ஒரு பென்னி (பவுண்ட்சின் சத அலகு) ஆகும். இந்த முத்திரை வெளியிடப்பட்டு தற்போதைக்கு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உலக தபால் தினத்தை முன்னிட்டு உலகில் முதலாவதாக வெளியிடப்பட்ட முத்திரையை…

Read More

லலித் வீரதுங்கவை ஏன் கைது செய்யவில்லை – நீதிபதி கேள்வி

இலங்கை அரசின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்ப்பு மானிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷா பல்பிட ஆகியோருக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர் அவர்களைக் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தத் தவறியது ஏன் என்பது குறித்து தம்மிடம் விளக்கமளிக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் காவல்துறை நிதி மோசடிப்பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது 600 மில்லியன் ரூபா…

Read More

புத்தளம் முஸ்லிம் மகாவித்தியாலாய மாணவி ஹஸ்னா 171 புள்ளிகளைப் பெற்று முதலிடம்

– K.C.M.அஸ்ஹர் – புலமைப்பரிசில் பரீட்சையில் ஹஸ்னா ஹைதர் 171 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப்பெற்றுள்ளார். (முசலியூர்.கே.சி.எம். தரம் 5 புலமைப்பரிசில்; பரீட்சையில் ஹைதர் பாத்திமா ஹஸ்னா, என்பவர் 171 புள்ளிகளைப்பெற்று புத்தளம் தில்லையடி முஸ்லிம் ம.வி.இல் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்;.இவரின் வெற்றிக்காகப் பாடுபட்டுழைத்த ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள்,விசேடமாக தரம் 5 இல் கற்பித்த ஆசிரியருக்கும் இவர் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். இவர் முசலியைச் சேர்ந்த குலாம்காதர் ஹைதர் .சலீம் றபீன்சியா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியாவார். இவரின் தந்தை புலமைப்பரிசில் மாணவர்கட்கு கற்பிக்கும்…

Read More

சேயாவின் தந்தையிடம் இரத்தமாதிரி பரிசோதனை

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சேயாவின் தந்தையிடம் இரத்தமாதிரி பரிசோதனை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மினுவங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

கணவர் குழந்தையை 3 முறை நிலத்தில் அடித்தார்

தனது ஒரு வயதும் ஒரு மாதமுமேயான பச்சிளம் குழந்தையை தனது கணவர் 3 முறை நிலத்தில் அடித்து கொலை செய்யததாக குழந்தையின் தாய் இன்று (07) நீதிமன்றில் தெரிவித்தார். கடந்த வருடம் மார்ச்ச 26 ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, இது குறித்தான விசாரணை இன்று (07) அம்பாறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே குறித்த குழந்தையின் தாய் இவ்வாறு வாக்குமூலம் வழங்கினார். குறித்த தினத்தில் தானும், கணவரும் குழந்தையும் சந்தைக்குச் சென்றதாகவும் கணவரை குழந்தையை வைத்திருக்கச்…

Read More

கோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

லசந்த படுகொலை : சிம் அட்டைகளைப் பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான சந் தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 5 சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் லசந்த கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோரால் பயன் படுத்தப்பட்டுள்ள இந்த சிம் அட்டைகள் ஐந்தும், அக்காலப்பகுதியில் வெலிக்கடை சிறைக்கைதியாக இருந்த ஒருவரின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த சிறைக்கைதி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ள நிலையில், சிறையில்…

Read More

‘பொடி சூட்டி’ கைது

கிராண்ட்பாஸ் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் போதைப் பொருள் விநியோகம் செய்­து­வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ‘பொடி சூட்டி’ என்­பவரை கொழும்பு துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் கீழுள்ள துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவு முன்­னெ­டுத்த விசேட நட­வ­டிக்கை ஒன்றின் போதே 20500 மில்­லி­கிராம் ஹெரோயின் போதைப் பொரு­ளுடன் சந்­தேகநப­ரான குறித்த பெண் ஸ்டேட் வீதியில் வைத்து கைதுசெய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் உயர் அதி­காரி ஒருவர்…

Read More