Headlines

ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகாத பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Read More

நிபந்தனையின்றி கடன்வழங்க, சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு கடன் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதி அதிகாரிகள் ஆகியோரிடையே பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் என பெரு நாட்டிலிருந்து தெரிவித்த நிதியமைச்சர் நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்து தெரிவித்தார். இலங்கையின் அரசியலில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றத்தின் மூலம் சர்வதேச நாணய நிதியம்…

Read More

கருணாவுக்கு உதவிய அலிசாகிர் மௌலானாவின் வாக்குமூலம்!

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப்பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா. 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை காப்பாற்றி, கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்த அலி சாகிர் மௌலானா, அதுபற்றிய தகவல்களை கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். ‘கருணாவின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த போது, அதுபற்றித் தாம் பிரதமராக இருந்த…

Read More

யாழ்.முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற மிகவும் அவலுடன் காத்திருக்கிறார்கள் – அமைச்சர் றிஷாத்

யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஆம் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யபட்ட முஸ்லிம்கள், தமது தாயகமான அப்பிரதேசத்தில் மீள்குடியேற ஆவலுடன் காத்திருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- “யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற மிகவும் அவலுடன் காத்திருக்கிறார்கள். இருந்தபோதும் அங்கு காணிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. 1990 ஆம் ஆண்டு ஒரு குடும்பமாக இருந்தவர்கள் இன்று 2 குடும்பங்களாக அதிகரித்துள்ளனர். இந்த 25 வருட அகதி வாழ்க்கையானது குடும்ப அங்கத்தவர்களை அதிகரிக்கச் செய்துள்ளது. “இந்நிலையில்யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற…

Read More

பிள்ளையான் சற்று முன்னர் கைது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் குறித்த இடத்தில் குமிந்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரவித்தன. பிள்ளையானின் சட்டத்தரணி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளிவரும் போது சிவனேசதுரை சந்திரகாந்தன் விசாரணைக்காக இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

Read More

ஊடக நிறுவனங்கள் சில என்னை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்க முயற்சிக்கின்றன : ஜனாதிபதி

ஊடகவியலாளர் காணாமல் போவதை தடுத்து நிறுத்தி, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்திய போதிலும் சில ஊடக நிறுவனங்கள் என்னை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இலங்கை பத்திரிகை கலை சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டது சம்பந்தமாக ஒரு…

Read More

இலங்கையுடனான உறவை பலப்படுத்த சீனா முயற்சி

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் சீனா ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாக சீன விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு ஸென்மின் இவ்வாறு விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா மற்றும் ஜப்பானுக்கான விஜயங்களை மேற்கொண்ட நாடு திரும்பியுள்ள நிலையில், சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லியு ஏற்கனவே பல தடவைகள் இலங்கைக்கு…

Read More

யால தேசிய சரணாலயத்திற்கு கட்டுபாடு

யால தேசிய சரணாலயத்திற்குச் செல்வோருக்கும் மற்றும் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் புதிய ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சரணாலயப் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார். அதன்படி, வாகனங்களின் வேகம், ஒலி எழுப்புதல் என்பவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. அத்துடன்,  பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கொண்டுசெல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

காலத்தை தேடி மக்கள் பயணமாகின்றனர் : டில்வின் சில்வா

கடந்த காலத்தில் எமது பயணம் சேகுவாராவின்  வழியில் பயணித்தது இன்று மாற்றத்தினை தேடிய பயணமாக எமது பயணம், மக்களின் பயணம் காலத்தை தேடி பயணமாகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்  டில்வின் சில்வா தெரிவித்தார்.. மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் சோசலிச சங்கத்தின் எற்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு நேற்று யாழ். மாவட்ட றிம்பர் மண்டபத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய விமல் ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது….

Read More

இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் – சீன உதவி வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் என சீன உதவி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். சீன உதவி வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழு நேற்று   ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தது. இதன்போது, இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சீனாவுக்கு தான் மேற்கொண்ட விஜயத்தின்போது சீன ஜனாதிபதியும் அரசாங்கமும் தனக்கு வழங்கிய முழுமையான ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி திருப்தி வெளியிட்டார். ஜெனீவா மனித உரிமைகள்…

Read More

லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின்  படுகொலை தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கும் படி பொலிஸ் தலைமையகம்தெரிவித்துள்ளது. இதற்கமைய 071 859 1753, 071 859 1770 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு  தகவல்களை வழங்கும் படி பொலிஸ் தலைமையகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின்  பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

விரைவில் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை

அரசியலமைப்பு பேரவை வெகுவிரைவில் கூடவுள் ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முடிவுகளைப் பொறுத்து அடுத்த வாரமளவில் கூடி முக்கிய தீர்மானங்கள் எடுக்கவுள்ள தாகவும் குறிப்பிடுகின்றது. அரசியலமைப்புப் பேரவை கூடுவது தொடர் பில் கடந்த வாரத்தில் இருந்து அதிகளவில் எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரமளவில் பேரவை கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசாங் கம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக பிரதமர் நாட்டில் இல்லாத காரணத்தினால் அரசியலமைப்புப் பேரவை கூட முடியாது போனதாகவும் அமைச்சரவை பேச்சாளர்…

Read More