Headlines

பிரதமர் நாடு திரும்பினார்

ஜப்பானிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜப்பான் பிரதமரின் அழைப்பையேற்று கடந்த 3 ஆம் திகதி பிரதமர்  ஜப்பான் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாராளுமன்ற அமர்­வுகள் இன்­று­ முதல் நேரடி ஒளி­ப­ரப்பு

பாரா­ளு­மன்­றத்தின் அமர்­வுகள் இன்று வியா­ழக்­கி­ழமை முதல் தேசிய ரூப­வா­ஹி­னி­யூ­டாக நேரடி ஒளி­ப­ரப்புச் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பிற்­பகல் 1.00 மணி­முதல் இரவு 7.30 மணி­வ­ரை­யான செவ்­வாய்க்­கி­ழமை முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை­யான அமர்­வுகளின்போது முதல் இரண்டு மணி­நே­ரத்­துக்கே இவ்­வாறு நேரடி ஒளி­ப­ரப்பு செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று புதன்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடிய பாரா­ளு­மன்ற விவ­கார தெரி­வுக்­குழு கூட்­டத்­தி­லேயே மேற்­படி தீர்­மானம் எட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. பாரா­ளு­மன்ற அமர்­வுகள் பியோ ரீ.வி.யூடாக நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­பட்டு வந்­த­போ­திலும், பின்னர் அது இடை­நி­றுத்­தப்­பட்­டது. இடை­நி­றுத்­தப்­பட்ட மேற்­படி…

Read More

காலி கடற்பரப்பில், ஆயுதக் கப்பல் பிடிக்கப்பட்டது

கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலிக்கு அப்பால் 15 கடல்மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக்கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடற்படை தளபதி ரவீந்திர விஜேயகுணரட்ன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் இருந்து சுமார் 810 ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கப்பல் காலி துறைமுகத்தில் தரிக்கச்செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கப்பலில் தலைவரிடம் இருந்து இதுவரை முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல் யுக்ரெய்னுக்கு சொந்தமானது என்று ஆவணங்களில் கூறப்பட்டுள்ளபோதும் அதன் கெப்டன் இலங்கையர் என்று கூறப்பட்டுள்ளது.

Read More

தொடர்பாடல் அதிகாரிகள் நியமனம்

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் நேற்று அமைச்சில் வைத்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத்  பதியுதீன் இந்த நியமனக்கடிதங் களை வழங்கி வைத்தார். மன்னார் மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக வாங்காளையினை சேர்ந்த மார்க்க அண்டனும்,முல்லைத்தீவு மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக விஜின்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் முன்னாள் மன்னார்…

Read More

இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது -வாசுதேவ

நாட்டு மக்களை ஏமாற்றி பொய்யான உறுதி மொழிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்த இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பிப்பார்கள் என நேற்று சபையில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியாவில் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 1 வீதம் உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு…

Read More

தேர்தலின்போது இணைய முறிவேற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளன!

மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கையில் இணைய முறிவொன்றினை யேற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக இஸ்ரேலில் இருந்து கணனிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவை கண்டி பிரதேசத்தில் வீடொன்றில் இணைக்கப்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவியிருந்தது. குறித்த கணினி இயந்திரங்களை செயற்படுத்துவதற்காக இஸ்ரேலில் பயிற்சி பெற்ற நபர்கள் இருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவர்கள் புலனாய்வு பிரிவு உறுப்பினர்களா அல்லது வேறு நபர்களா என்பது தொடர்பில் இதுவரையில்…

Read More

ஜனக பண்டார தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இவர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொப்பி மலர் அணிந்தார் மைத்திரி

வருடாந்த பொப்பி தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் இன்று காலை (07)ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் படைவீரர்களின் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் கே.ஏ குணவீர ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் வைத்து பொப்பி மலரை ஜனாதிபதிக்கு அணிவித்ததன் மூலம் வருடாந்த பொப்பி தினத்திற்கான செயற்பாட்டை ஆரம்பித்துவைத்தார். இரண்டாவது உலகப்போரின் ஒரு இராணுவ வீரரான எச்.ஜீ.பீ ஜயசேகரவினால் எழுதப்பட்ட “How Japan Bomb Tiny Sri Lanka” என்ற நூலும் நூலாசிரியரினால் இந்நிகழ்வின் போது…

Read More

தேர்தலுக்கு முன் நுவரெலியாவில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்படும் : மனோ கணேசன்

நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கபட வேண்டும். நாட்டில் பிற பகுதிகளில் 6 ஆயிரம்  பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது நுவரேலியா மாவட்டத்தில் மாத்திரம் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மலையக தமிழருக்கு கடந்த 28 வருடங்களாக இழைக்கப்பட்டுள்ள  ஜனநாயக மறுப்பு அநீதி. இது எனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சகவாழ்வு விடயத்துக்கு முரணானது. எனவே இந்த  மிக நீண்ட கால அநீதி…

Read More

மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும் – நிமல் சிறி­பா­ல சில்வா

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பான அறிக்கை வெளி­யி­டப்­ப­டி­ருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்­சியில் இருந்­தி­ருந்தால் இன்று நாட்டின் நிலைமை என்­ன­வா­கி­யி­ருக்கும் என அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா கேள்வி எழுப்­பினார். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மை பேர­வையில் இலங்கை குறித்து கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவே மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்…

Read More

புலமைப் பரிசில் பரீட்சையில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 தகுதி

– எம்.ஏ.றமீஸ் – இம்முறை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் அதிகப்படியானனோர் சித்தியடைந்து அக்கரைப்பற்று கல்வி வலயத்தில்; முதன் நிலை பெற்று வரலாற்றுச் சாதமை படைத்துள்ளனர் என அதிபர் ஏ.எல்.அன்வர் தெரிவித்தார். இப்பரீட்சையில் தோற்றிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 பேர் புலமைப் பரிசில் பெறத் தகுதி பெற்றுள்ளனர். இதனடிப்படையில் முகம்மட் றஜாப் பாத்திமா ஹதானி 179 புள்ளிகளைப் பெற்று வலயத்தின் முதன் நிலை பெற்று பாடசாலையின் வரலாற்றுச்…

Read More

குளித்துக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமி வபாத்

ட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கேணிநகர் குளத்தில் நேற்று  மாலை குளித்துக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கியதில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றக் கிராமமான கேணிநகர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக அப்பகுதியில் கிணறுகளில் நீர் வற்றிக் காணப்படுவதால், இரு சகோதரிகளின் பிள்ளைகளான இரண்டு சிறுமிகளும் தங்களது அம்மம்மாவுடன் கேணிநகர் குளத்தில் குளிப்பதற்குச் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போதே…

Read More