Main News
சிறுபான்மை மக்களின் வாக்குகளாலே தோற்றோம்
சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அடித்தளத்தை இழந்ததன் காரணமாகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் தோல்வியைத் தழுவியது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன் செனவிரத்ன, அடுத்த பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையிலான முன்னணியை வெற்றிபெறச் செய்வதற்கான சீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இரத்தினபுரியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் ஜோன் சென விரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்ப…
கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கு ஜப்பான் நிதி
ஜப்பானின் கீழ்மட்ட மனித பாதுகாப்புத் திட்டத்திற்கான நன்கொடை உதவி வழங்கும் பொருட்டு வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசு 801,311 அமெரிக்க டொலர்களை (108 மில்லியன் ரூபா) வழங்கியுள்ளது. நன்கொடை ஒப்பந்தம் ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகநும மற்றும் HALO Trust நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டமியன் ஒபிரைன் ஆகிய இருவரும் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவராலயத்தில் நேற்று கைச்சாத்திட்டனர். இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் திட்டம் HALO Trust நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. கண்ணிவெடியால் பாதிப்படைந்த பிரதேசங்களை…
வடமாகாண சபையில், முஸ்லிம்கள் குறித்து பிரேணை – றிப்கான் பதியுதீன்
வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகும் நிலையில், அதுகுறித்து வடமாகாண சபையில் கவனயீர்ப்பு பிரேணையை கொண்டுவர இருப்பதாக வடமாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கூறினார், இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வடமாகாண முஸ்லிம்கள் பலவழிகளிலும் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள். வடமாகாண முஸ்லிம்களுக்கு பின்னர் இடம்பெயர்ந்த பல தொகுதியினர் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் வாழத் துடிக்கிறார்கள். ஆனால் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கபட்டவில்லை. மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு தமிழ் கூட்டமைப்பைச் சேந்த சிலர் தொடர்ந்தும் தடையேற்படுத்துகின்றனர். அரச அதிகாரிகள் முஸ்லிம்கள்…
சச்சின் தெண்டுல்கர் இலங்கை வருகை
உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் தெண்டுல்கர் யுனிசெப் நிறுவனத்தின் வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் சிறுபராயத்தினரின் சுகாதாரப் பழக்கவழங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த வைபவம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய அனுசரணையில் நேற்று ஆரம்பமானது. இந்த வைபவத்தில் சச்சின் தெண்டுல்கருடன், இலங்கையின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும் கலந்து கொண்டிருந்தார். யுனிசெப் அமைப்பின் சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவராக சச்சின்…
இந்த ஆண்டின் இறுதிக்குள் மருந்துகள் விலை குறையும்
இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்து வகைகளின் விலைகள் 50 சதவீதத்தால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய மருத்து வகைகள் சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் அதிகளவிலான மருந்துகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய சட்டத்துக்கு அமைய மருந்துகளை விலை கொடுத்து வாங்குவோரைப் பாதுகாப்பது தொடர்பாக அதிகாரசபை ஒன்று நிறுவப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சில மருந்துவகைகளில் 200 தொடக்கம் 300…
தென்னாபிரிக்கா பயணமாகிறது அரச உயர் குழு
இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர், அமைக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவே அரசின் உயர் மட்டக்குழு அங்கு செல்லவுள்ளது. இலங்கையில் உருவாக்கப்படவுள்ள இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில், மதத் தலைவர் களைக் கொண்ட ஒரு…
மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டெடுப்பது குறித்து, அஸ்வர் விடுத்துள்ள அறிக்கை
பலஸ்தீன மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்பதற்கு எமது பாராளுமன்றத்தில் அவசர கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்று கொண்டுவர வேண்டும். அத்துடன் அனைத்து பள்ளிவாசல்களிலும் துஆப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள உலமா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புக்கு எதிராக அஸ்வர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 60 வருடங்களுக்கும் மேலாக மேற்குலக வல்லரசுகளின் ஆதரவுடன் பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொள்ளும் காட்டு தர்பார் தற்போது…
ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் இவர் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
குழப்பத்தின் உச்சத்தில் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிடுகின்ற கருத்துக்களின் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை தகவல்கள் வெளியாகும் நிலை உருவாகியுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தன்னை காட்டிகொடுப்பதற்கு தன்னுடன் இருந்தவர்களே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிய அனைத்தும் சந்தேகத்திற்குரியவைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ச தவறு செய்யாதவர் என்றால் எதற்கு காட்டிகொடுப்பிற்கு பயப்பட வேண்டும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதுவரையில்…
துமிந்த சில்வா பெண் ஒருவரை தாக்கினார்! நீதிமன்றத்தில் விசேட அதிரடிப்படைவீரர் சாட்சியம்
தேர்தல் தினத்தன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு வந்து அங்கு வரிசையில் நின்றிருந்த பெண் ஒருவரை தாக்கினார் என்று நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் விசாரணைகள் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் ஆரம்பமாகின. இதன்போது விசேட அதிரடிப்படையை சேர்ந்த தமித் சுரங்க என்பவர் சாட்சியமளித்தார். இவரே பாரத லக்ஸ்மன் உட்பட்ட நான்குபேர், கொலை தொடர்பான வழக்கின் முதலாவது சாட்சியாவார். இந்தநிலையில் நேற்று அவர்…
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்: ஜே.வி.பி.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை மேலும் காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்த வேண்டும். மக்களின் நிறுவனங்கள் தொடர்ந்தும் ஆணையாளர்களின் நிர்வாகத்தில் நடாத்துவது பிழையானது. எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் நடாத்துவதனை காலம் தாழ்த்தக்கூடாது. எல்லை நிர்ணயம் குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையை ஜே.வி.பி நிராகரிக்கின்றது. எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கையானது குழப்பங்கள் நிறைந்தது. அரசியல் தேவைகளின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே புதிதாக…
போக்குவரத்து நெரிசல் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை!– ஞானசார தேரர்
போக்குவரத்து நெரிசல் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளா கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் நேற்று பரீட்சார்த்த அடிப்படையில் புதிய போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாவதற்கு ஐந்து நிமிடங்கள் காலதாமதமானது. நீதிமன்றில் முன்னிலையாவதனை தவிர்க்கவோ அல்லது ஒழிந்து திரியவோ எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது. இராஜகிரிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய போக்குவரத்து திட்டம் காரணமாக முன்னொரு போதும் இல்லாத…
