Main News
2017க்கு முன்னர் அனைவருக்கும் புதிய அடையாள அட்டைகள்
2017ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் உள்ள அனைவருக்கும் புதிய தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்த அடையாள அட்டைகளுக்கு புதிய இலக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இந்தநிலையில் புதிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட பின்னர் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருக்கும் செயற்பாடுகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும். புதிய அடையாள அட்டைகள் இலத்திரனியல் முறையில் தயாரிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை!
தற்போதைய அரசில் உள்ள குற்றச்செயல்கள் புரிவாராயின் கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். நேற்று ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான சந்திப்பில் வைத்தே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள்! – பிள்ளையான்
என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறிப்பிட்டார். முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த ஞாயிறன்று மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார். பிள்ளையான் நேற்று பிற்பகல் 1.00…
கெஹெலியவும் விசாரணை குழுவின் முன் ஆஜரானார்!
முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல, மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வருகை தந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சுசில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை
பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த வாக்குமூலம் வழங்குவதங்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெலே சுதா மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு!
பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் கம்பொல வித்தான சமந்தகுமார மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட வெலே சுதாவுக்கு நீதிவான் பிரித்தி பத்மன் சூரசேன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
வெளிநாடுகளில் 599 இலங்கையர்கள் உயிரிழப்பு
இலங்கையர்கள் 599 பேர் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளது. இதில் 103 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு 386 பேர் நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் 2014 ஆம் ஆண்டின் செயற்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு வெளிநாடுகளில் தொழில் செய்யும்போது உயிரிழந்த இலங்கையர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது….
ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குறித்த பிரதேசங்களில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதோடு, நிலச்சரிவு ஏற்படும் சாத்தியமும் உள்ளதாக ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த சில…
மஹிந்தவிடம் விசாரணை ஆரம்பம்
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றனர். எனினும், இன்று அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டதையடுத்தே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு…
இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் – கடந்த 12 வருடங்களாக காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல்வேறு வகையான சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இரத்தப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இவ் இரத்ததான முகாம் எதிர்வரும் 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரை காத்தான்குடி-06 பிரதான வீதியில் அமைந்துள்ள…
நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கள் இலத்திரனியல் முறையில்
நாடாளுமன்றில் நடத்தப்படும் வாக்கெடுப்புக்களை இலத்திரனியல் முறையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்கெடுக்களை இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான நிலையியற் கட்டளையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக நாடாளுமன்றின் ஒலி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. தற்போது நாடாளுமன்றில் காணப்படும் ஒலி கட்டமைப்பு 15 ஆண்டுகள் பழமையானது என தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சட்டப்…
மறந்து போனது முன்னைய பகை!
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தங்கள் முன்னைய பகையை மறந்து கூடிக்குலாவியுள்ளனர். கடந்த ஆண்டின் ஜுலை மாதம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அப்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல்மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் விவாதம் சூடுபிடித்த நிலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் கடுமையான தனிப்பட்ட…
