Headlines

அடுத்தாண்டு சுதந்திர நிகழ்வினை மாலை வேளையில் நடத்த யோசனை

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு மாலை வேளையில் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டு இலங்கையின் 68ம் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மாலை வேளையில் நடாத்தப்படும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுவாக இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் முற்பகலில் நடாத்தப்படுவதே வழமையானதாகும். எனினும் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு மாலையில் நடத்தப்பட உள்ளது. அடுத்த நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பற்றிய…

Read More

மஹிந்தவின் ஆட்சேபனை நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்தை, பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இன்றைய தினம்  பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவர் சார்ந்த தரப்பினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து…

Read More

வெலே சுதா போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளார்

அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைப் பொருள் வர்த்தகர் கம்பல விதானகே எனப்படும் வெலே சுதா கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலை மிகக் கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலே சுதாவுடன் கடந்த காலங்களில் இரகசியமாக பணம் பெற்றுக்கொண்ட 12 சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்ர்களின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வெலே சுதாவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் எதிரான பாதாள உலகக் குழுக்களைச்…

Read More

பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றதும் சொந்த ஊருக்குச் சென்று விடுவேன்

பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றதும் சொந்த ஊரான பொலன்­ன­று­வைக்கு சென்று எனது வீட்டில் வசிப்­பேனே தவிர ஜனா­தி­ப­திக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் வசிக்க மாட்டேன் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையின் நிலத்­துக்­க­டியில் உள்ள இரண்­டு­மாடிக் கட்­டட பரா­ம­ரிப்பு செலவை தவிர்க்க முடி­யா­துள்­ள­தா­கவும் தெரி­வித்­தார். இலங்கை பத்­தி­ரிகை நிறு­வனப் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பின்போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு தெரி­வித்­தார். ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, நான் ஓய்வு பெற்ற பின்­னரும் தற்­போது நான் பயன்­ப­டுத்தும் கொழும்பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ…

Read More

வெளி­நா­டு­களின் வங்­கி­களில் பல பில்­லியன் ரூபா கணக்குகள்

இலங்­கையின் முன்னாள் ஆட்­சி­யா­ளர் களின் உற­வி­னர்­களின் பெயர்­களில் வெளி­நா­டு­களின் வங்­கி­களில் பல பில்­லியன் ரூபா கணக்குகள் உள்­ளன. அவற்றை முடக்கி அந்த பணத்தை இலங்­கைக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணை நடத்தப்படு கின்றது. அதன் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்றும் அவர் கூறினார். எவன்கார்ட் நிறு­வனம் தொடர்பில் விரை­வான சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள் ளார். அதன்­படி…

Read More

அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண முதலமைச்சர்களும் பங்கேற்பர்

மாகாணசபைகளுக்கு உட்பட்ட விடயங்களை ஆராய்வதற்காக மாகாண முதலமைச்சர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்கவுள்ளனர். மத்திய அரசாங்கத்தரப்பு இதனை தெரிவித்துள்ளது. அமைச்சரவை இணைப்பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் இது தொடர்பில் சமர்ப்பித்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார் இதேவேளை நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்களும் மாதமொருமுறை அமைச்சரவைக் கூட்டத்துக்கு சமுகமளிக்கவுள்ளனர் இதற்கான யோசனையை பிரதமர் ரணில் முன்மொழிந்துள்ளதாகவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

Read More

மரம் வெட்டுதல், மணல், மண் அகழ்வு தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம்

மரம் வெட்டுதல், மணல், மண் அகழ்வு தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மரம் வெட்டுதல், மணல், மண் அகழ்வு தொடர்பில் அரசாங்கம் புதிய சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சட்ட மீறல்களில் ஈடுபடுவோருக்கு எவ்வித அரசியல் அழுத்தமும் இன்றி சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சாதாரண நபர் ஒருவர் வீடு கட்டுவதற்கு கட்டடம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு இந்த சட்டத்தில் எவ்வித தடையும்…

Read More

மஹிந்த மீண்டும் ஆணைக்குழுவுக்கு வருகை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல் , அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம் ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணைக்குழுவிடம் வாக்குமூலமளிப்பதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு வருகை தந்துள்ளார்.

Read More

நவம்பர் மாதம்; புதிய வரவு – செலவுத் திட்டம்

2016ம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். இதன் முன்னோடியாக இம்மாதம் 23ம் திகதி நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது முதலாம் வாசிப்பாகக் கருதப்படும். இதில் ஒவ்வொரு அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடு பற்றிய தரவுகள் இடம்பெற்றிருக்கும். அதன்பின்னர் நவம்பர் 20ம் திகதி நிதி அமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை இடம்பெறும். இது இரண்டாம் வாசிப்பாகக் கருதப்படும். இதன்போதே வரி அதிகரிப்பு,…

Read More

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அமைச்சர் றிஷாத் அவசர கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தை கையாலவென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முக்கியஸ்தர்களான அமைச்சர்களான திலக் மாரப்பன, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள தனித்தனிக் கடிதத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். அப்பாவிகளான இந்த கைதிகள் சந்தர்ப்பவசத்தால் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டவர்களாக இருக்கலாம். அத்துடன் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு…

Read More

முகத்தைக் கடித்ததாலேயே சேயாவைக் கொன்றேன்! கொண்டயாவின் அண்ணன் வாக்குமூலம்

துஷ்பிரயோகம் செய்யும்போது தனது முகத்தைக் கடித்த காரணத்தாலேயே கொட்டதெனிய சிறுமி சேயாவின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாக கொண்டயாவின் அண்ணன் தெரிவித்துள்ளார். கொட்டதெனியாவ சிறுமி சேயா சந்தெவ்மியின் படுகொலை தொடர்பில் தற்போது கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த, அவரது அண்ணன் சமன் ஜயலத் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் சேயாவின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் தலைமுடி என்பவற்றோடு சமன் ஜயலத்தின் டி.என்.ஏ. பொருந்துவதாக நேற்றுநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்றைய தினம் கொண்டயாவின் சகோதரர்…

Read More