Main News
ஆசியா பசுபிக் முஸ்லிம் தலைவர்களின், மாநாட்டில் றிஸ்வி முப்தி (படங்கள்)
ஆசியா பசுபிக் முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றுள்ள றிஸ்வி முப்தி வெளிநாட்டு பிரமுகர்களுடன் கலந்துரையாடுவதை படங்களில் காண்கிறீர்கள்.
பாரிய மோசடி : மஹிந்தவிடம் நாளை விசாரணை
பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை காலை 09.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.vk
கொண்டயாவின் அண்ணனே குற்றவாளி?
கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயந்தவின் மரபணு, சிறுமியின் மரபணுவுடன் ஒத்திசைவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொட நீதிமன்றில் இன்று பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். சேயா சிறுமியின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுவுடன் இந்த கொண்டயாவின் சகோதரரது மரபணு ஒத்திசைவதாகக் குறிப்பிட்டுள்ளனர். சேயாவின் தந்தையின் மரபணுவும் பரிசோதனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சேயாவின் தந்தை, கொண்டையாவின் சகோதரனின் இரத்தமாதிரி அறிக்கை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையின் இரத்தமாதிரி அறிக்கையும் கைது செய்யப்பட்டுள்ள கொண்டையாவின் சகோதரனின் இரத்தமாதிரி அறிக்கையும் இன்று மினுவன்கொடை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாங்கள் குற்றவாளிகள் அல்ல, பிணையில் செல்ல அனுமதியுங்கள் : சந்தேக நபர்கள் கோரிக்கை
நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்டே போதே அவர்கள் அவ்வாறு கோரிக்கை விடுத்து இருந்தனர்….
எம்.பி.க்களின் கொலைகைள விசாரிக்க குழு – ரணில்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது கொல்லப்பட்ட தி.மகேஸ்வரன், நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், த.மு. தஸநாயக்க, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் கொலைச்சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணை இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழேயே இந்தக் குழுவை அமைத்து, விசாரணை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் மற்றும் பொலிஸ்…
“வெலே சுதா”விற்கு மரண தண்டனை!
பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(14) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பிரபல போதைப் பொருள் கடத்தல் வர்த்தகர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள “வெலே சுதா” எனப்படும் கம்பல விதானகே சமந்த என்பவர் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று(14) அறிவிக்கப்படவுள்ளது. சட்ட மா அதிபரினால் வெலே சுதாவிற்கு எதிராக இக்குறித்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது. மிகவும் குறுகிய…
வெலே சுதா தொடர்பான ஒரு வழக்கின் தீர்ப்பு இன்று
பிரபல போதைப் பொருள் வர்த்தகர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா எனப்படும் கம்பல விதானகே சமந்த என்பவர் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. சட்ட மா அதிபரினால் வெலே சுதாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. மிகவும் குறுகிய காலத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் பத்மன் சூரசேன அறிவித்துள்ளார். 2008ம் அண்டு டிசம்பர்…
இலங்கையில் பத்திரிகை சுயதணிக்கை குறித்து ஆராய்வு
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டாளர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சுயதணிக்கையை வலுப்படுத்தல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது சிங்கள, ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்
புதிய போக்குவரத்து முறை இடைநிறுத்தம்
கொழும்பு – இராஜகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டபோது அது தோல்வியடைந்தமையே இதற்கான காரணமாகும்.
90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படும் சாத்தியம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டு படுகொலை செய்தமை, தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 90 நாள் தடுப்புக் காவல் விசாரணைகளுக்கு முகம் கொடுக்கும் சாத்தியம் உள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்ட அவரிடம் முன்னாள் எம்.பி….
மஹிந்தவை சந்தித்த சீனப் பிரதிநிதி
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீனாவின் உப வெளிவிவகார அமைச்சர் லீ சென்மின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு ஒரு வழமையான சந்திப்பு என முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக ‘தென் சீனா மோனிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரம் இழந்ததன் பின்னர் சீனத் தலைவர் ஒருவர் முதல் தடவையாக அவரை சந்தித்துள்ளமை விசேட அம்சமாகும். இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில்…
