Main News
முஸ்லிம்கள் உண்மையை உணர்வார்கள் – மஹிந்த
– A.R.A.பாரீல் – இஸ்ரேல் பலஸ்தீன் மக்கள் மீது மேற்கொள்ளும் அட்டூழியங்களையும் அல் அக்ஸா பள்ளிவாசல் முற்றுகையையும் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை இஸ்ரேல் இராஜதந்திர உறவுகள் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துமாயின் அதனை தான் விரும்பவில்லை எனவும் அவர் கூறினார். பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் இலங்கை இஸ்ரேல் உறவு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், முஸ்லிம் நாடுகள் எப்போதும் இலங்கையுடன்…
தாய்லாந்து இளவரசியை சந்தித்த மைத்திரி
தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (04) முற்பகல் அந்நாட்டின் இளவரசி (Maha Chakri Sirindhorn) அவர்களை (Sra Pathum) மாளிகையில் சந்தித்தார்.
அரசியலமைப்புச் சபை இன்று கூடுகின்றது
அரசியலமைப்புச் சபையின் மற்றுமொரு கூட்டம் சபாநாயகரின் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதில் இதுவரை உறுப்பினர்கள் நியமிக்கப்படாத சுதந்திர ஆணையங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தூண்டிவிட்டு கொலை செய்ய முயற்சிக்கின்றீர்களா? பிரதமர் கேள்வி
மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது சபைக்குள் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் எதிர்ப்பு கோஷங்களுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இச் சந்தர்ப்பத்தின்…
பௌத்தத்தை தாக்குவதே அரசின் நோக்கம்!- சிங்கள ராவய
பௌத்த மதத்தை தாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வீடுகளில் இருக்கும் யானைகளை ஏதேச்சாதிகாரத்தில் கைது செய்து வருகின்றது. பெரஹராவிற்கு கொண்டு செல்லப்படும் யானைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது கைது செய்கின்றனர். எதிர்வரும் காலங்களில் பெரஹராவிற்கு யானைகள் கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். இது தான் நல்லாட்சியாகும். இந்த அரசாங்கத்;திற்கு தேவை பௌத்தம் மீது தாக்குதல் நடத்துவதேயாகும். அரச சார்பற்ற நிறுவனங்களின்…
அதிகாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துங்கள்
நிராயுதபாணிகளாக பேரணி நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அத்தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறிய உயர் பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார். அத்துடன் சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே சட்டத்தை மீறுவதா நல்லாட்சியின் விளைவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு வோர்ட் பிளேஸில் வைத்து உயர் தேசிய…
விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு கடிதம்
தேசிய சுதந்திர முன்னியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தொடர்பாக விசேட நிபுணர்களின் ஆறு அறிக்கைகளைசர்வதேசத்திற்கு வெளிப்படுத்துமாறு கோரி அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள அறிக்கை மூலம் நாட்டின் இராணுவத்தினர் மீது கடும் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாருஸ்மன் அறிக்கை உண்மைக்கு புறம்பான, இவ்வாறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர…
சோபிததேரர் இன்று சிங்கப்பூர் பயணம்
நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் சோபித தேரர் இன்று புதன்கிழமை மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்குச் செல்கின்றார். சோபிததேரர் கடந்த மாதம் பய்பாஸ் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சத்திர சிகிச்சை வெற்றியளித்தாலும் சில உபாதைகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சோபிததேரர் இன்று சிங்கப்பூருக்குச் செல்கின்றார் என்று கூறப்படுகின்றது.
அதிகாரிகளுக்கான முறைப்பாட்டு பெட்டி வைக்கப்படும்-அமைச்சர் றிஷாத் அறிவிப்பு
– அபூ அஸ்ஜத் – ஏனைய நாட்டு அரசங்க நிறுவனங்களை போன்று எமது நாட்டில் செயன் திறன்மிக்க ஊழியர்கள் உருவாகின்ற போது இலாபம் ஈட்டு நிறுவனங்கள் நஷ்டத்தினை நோக்கி நகராது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதிகாரிகள் தமது பிரச்சினைகளையும்,ஆலோசனைகளையும் தெரிவிக்கும் வகையில் தமது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் முறைப்பாட்டு பெட்டியொன்றினை ஏற்படுத்தவுள்ளதாகவும் கூறினார். அரசாங்க வணிக கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒரு தொகுதியினரை நிரந்தர சேவையில் இனைத்து கொள்ளும்…
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அடிபணிந்த அரசாங்கம் – அமைச்சரவை பத்திரம் வருகிறது
உயர் தேசிய கணக்காய்வு டிப்ளோமா பாடநெறியை பட்டப்படிப்பாக உயர்த்துவதற்காக வழங்கப்பட்ட பழைய சுற்றுநிருபத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு, அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. உயர்கல்வியமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்க இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார். அண்மையில் உயர் தேசிய கணக்காய்வு பாடநெறியை பாதுகாக்கும் ஒன்றியம் உயர் கல்வியமைச்சின் முன்பாக அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. கணக்காய்வு உயர் கற்றை நெறியை, வணிகவியல்…
உலக நாடுகள் அனைத்தும் எங்களுடன் இணைந்துள்ளது! – ராஜித
உலக நாடுகள் அனைத்தும் இன்று எங்கள் நாட்டிற்கு நிதி உதவி வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், அன்று எங்கள் நாட்டிற்கு எதிராக செயற்பட்ட மேற்கத்திய நாடுகள் உட்பட இன்று எங்களுடன் இணைந்துள்ளது. இலங்கை தற்போது சர்வதேசத்தினுள் பெயர் ஒன்றினை பெற்றுகொண்டுள்ள நிலையில் ஜனவரி 08ஆம் திகதி ஏற்பட்டட புரட்சியுடன் உலகினை வெற்றி கொள்ள முடிந்துள்ளது….
விமானசேவை விஸ்தரிப்புக்கு தாய்லாந்து இணக்கம்
இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் விமான சேவையை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (திங்கட்கிழமை) அந்நாட்டு பிரதமர் பிரயூட் சாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது இருநாட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டதோடு, தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளில் இலங்கைக்கு உதவுமாறு ஜனாதிபதி மைத்திரி கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த தாய்லாந்து பிரதமர், இதுகுறித்து உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொள்ள…
