Headlines

வீரவன்சவின் செயற்பாடுகள் கவலைக்குரியது! ரஞ்சன் ராமநாயக்க




குற்றம் செய்துவிட்டு அதனை வார்த்தை ஜாலங்களால் மறைக்க முயலும் விமல் வீரவன்சவின் செயற்பாடுகள் கவலைக்குரியது என்று பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளார்.

அதன் மூலம் சட்டத்தை மீறிய அவர் தற்போது எதுவுமே நடைபெறாதது போன்று வீரம் காட்டிக்கொண்டு வார்த்தை ஜாலங்களால் தனது தவறுகளை மறைக்க முயற்சிக்கின்றார்.

தங்கள் தவறுகளை மறைத்துக் கொண்டு, சமூகத்தின் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புவது மோசமான முன்னுதாரணமாகும்.

அந்த வகையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் விமல் வீரவன்சவின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக அமைந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *