Headlines

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அடிபணிந்த அரசாங்கம் – அமைச்சரவை பத்திரம் வருகிறது




உயர் தேசிய கணக்காய்வு டிப்ளோமா பாடநெறியை பட்டப்படிப்பாக உயர்த்துவதற்காக வழங்கப்பட்ட பழைய சுற்றுநிருபத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு, அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

உயர்கல்வியமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்க  இந்த தகவலை வெளியிட்டார்.

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

அண்மையில் உயர் தேசிய கணக்காய்வு பாடநெறியை பாதுகாக்கும் ஒன்றியம் உயர் கல்வியமைச்சின் முன்பாக அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

கணக்காய்வு உயர் கற்றை நெறியை, வணிகவியல் பட்டப்படிப்புக்கு சமனான கற்கையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *