Main News
அனுர குமார கூறுகின்றார் என்பதற்காக பதவி விலக முடியாது
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க கூறுகின்றார் என்பதற்காக நாங்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக முடியாது. நான் அமைச்சராக இருக்கவேண்டுமா இல்லையா என்பதனை ஜனாதிபதியும் பிரதமருமே தீர்மானிக்கவேண்டும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி கூறுவதைப் போன்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை எமது அரசாங்கம் கைதுசெய்திருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால், சட்டத்துக்கு முரணாக நாங்கள் எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எவன்ட் கார்ட்…
முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக றிஷாத்: ஜனாதிபதி மைத்திரியுடன் நாளை சந்திப்பு
– ஏ.எச்.எம்.பூமுதீன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அ.இ.ம.கா தேசியத் தலைவர் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்குமிடையில் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை புதன் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. கடந்த புதன் கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மிகவும் அசமந்தமான போக்கை அரசு கடைப்பிடித்து வருவதாக கண்டித்து…
திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு
தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
ராஜினாமா செய்த காரணங்களை கூறுகிறார் திலக் மாரப்பன
ஊடகங்கள் வாயிலாக தனக்கு தொடர்ந்து சேறு பூசுவதாகவும், தன்மீது சேறு பூசிக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதனால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் முன்னாள் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். எவன் கார்ட் நிறுவனத்தின் சர்ச்சைக்குறிய ஆயுதக் கப்பலில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 தடவையாவது ஆயுதங்கள் பரிமாறப்படுவதாக அவர் தெரிவித்தார். கடற்படையினர் மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தினர், குறித்த ஆயுதக் கப்பலில் இருந்து இவ்வாறு ஆயுதங்களை கொண்டு…
மைத்திரியிடம் ஆலேசனை கேட்ட தாய்லாந்து பிரதமர்
ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம். ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும் என்னை சந்தேகிக்க முடியும்….
இஸ்லாத்தை அவமதித்த ஞானசாரக்கு எதிராக வழக்கு
பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு குற்றவியல் பிரிவினால் இன்றைய தினம் (09) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாம் மற்றும் புனித பரிசுத்த அல்குர்ஆன் குறித்து அவதூறாக பேசியதாக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2014, ஏப்ரல் 12 ஆம் திகதி கொழும் 02, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த அவதூறான அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஜகத் புஸ்பகுமார
முன்னால் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
ஒருபோதும் கருணை காட்டமாட்டேன்! ஜனாதிபதி திட்டவட்டம்
ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம். ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும் என்னை சந்தேகிக்க முடியும்….
கம்மன்பிலவின் மனைவி ஆணைக்குழு முன்னிலையில்
பிவிதுறு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பிலவின் மனைவி தில்ருக்ஷி கம்மன்பில, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று(9) பிரசன்னமாகியுள்ளார். இன்னும், அவுஸ்திரேலிய பிரஜையொருவருடன் கம்மன்பில மேற்கொண்டதாக கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சாட்சி கையொப்பமிட்டமைக்காகவே அவரிடம் இன்று விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை ராஜினாமா BREAKINGNEWS
சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பீ.ஜே வருகையை தடுத்து நிறுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவரும் பிரபல தென்னிந்திய இஸ்லாமிய பிரசாரகருமான பி.ஜே.என்றறியப்படும் பி.ஜெய்னுலாப்தீனின் இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது விடயத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தவறான தகவல்களை முன்வைத்து அவரது வருகையை தடுத்து நிறுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று மாலை நடைபெற்ற அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து…
சோபித தேரர் மறைவு: அமைச்சர் றிஷாத் இரங்கல்
இலங்கையின் அரசியலில் மாற்றமொன்று ஏற்படுவதன் மூலம் சிறுபான்மை சமூகங்கள் தமது அரசியல் அந்தஸ்த்தையும், பாதுகாப்பினையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் செயற்பட்டு வந்த சோபித தேரரின் இறப்பு, இலங்கையில் தற்போதைய சூழலில் ஈடுசெய்யப்பட முடியாததொன்று என்று அகில .இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மாதுலுவாவ சோபித்த தேரரின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது – ஜனவரி 8 ஆம்…
