Headlines

ஜி.எல் நிதி மோசடி விசாரணை பிரிவில்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வாக்கு மூலம் ஒன்றை வழங்க, காவல் துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகினார். அமைச்சு பொறுப்பில் இருந்த போது இடம் பெற்ற முறை கேடு தொடர்பாக, அவர் வாக்கு மூலம் வழங்க வந்ததாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

Read More

கசினோ மட்டுமா சூது. ‘ருஜுனோ’ சூதாட்டம் இல்லையா?

– ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்னீர்செல்வம் – கசினோவுக்கு வரியை அதிகரித்துள்ள அரசாங்கம் “ருஜுனோவு”க்கு வரியை நீக்கியுள்ளது. ஏன் கசினோ மட்டுமா சூது. ருஜுனோ சூதாட்டம் இல்லையா என ஜே.வி.பி. எம்.பி நளின்த ஜயதிஸ்ஸ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். சர்வதேச பிச்சைக் காரர்களாக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் பிச்சையெடுக்கும் பொருளாதார கொள்கை மாற்றப்பட வேண்டும் எனக் கூறியோர் இன்று வரவு செலவு திட்டம் மூலம் மீண்டும் சர்வதேச பிச்சைக்காரர்களாக மாறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள்: சமந்தாவிடம் கையளித்தார் றிஷாத்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையினை 1985ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரிடமே றிஷாத் பதியுதீன் நேற்று இந்த வேண்டுகோள் பத்திரத்தை கையளித்தார். உள்ளக விசாரணை என்பது ஐக்கிய நாடுகளின் பரிந்துரைக்கு அமைவானது. ஆனால், ஐக்கிய நாடுகளின் பரிந்துரையின் விசாரணைக்காலமானது 2001 லிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்…

Read More

வெளிநாட்டவர்களுக்கு தாராளமயமும் உள்நாட்டவர்களுக்கு நெருக்கடியும்

ஊழியர் சேம­லாப நிதியம் மற்றும் ஊழியர் நம்­பிக்கை நிதி­யத்தின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தோடு வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு தாரா­ள­ம­யமும் உள்­நாட்­ட­வர்­க­ளுக்கு நெருக்­க­டி­யையும் அரசின் வரவு செலவுத் திட்டம் தோற்­று­வித்­துள்­ள­தாக கொழும்பு மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறு ப்­பினர் தினேஷ் குணவர்த்­தன தெரி­வித்­துள்ளார். அரசின் வரவு செல­வுத்­திட்டம் தொடர்­பாக தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது. 2016ஆம் ஆண்டு நாடு மிக மோச­மான விளை­வு­களை சந்­திக்கும் விதத்­தி­லான வரவு செலவுத் திட்­டத்­தினை அரசு முன்­வைத்­துள்­ளது. இதன் மூலம் ஐ.தே.கட்­சியின்…

Read More

கேஸ் விலை குறைப்பு

பட்ஜெட்டில் அறிவித்தபடி சமையல் கேஸ் விலை குறைப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல்கட்டமாக கொழும்பில், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாயாக குறைக்கப்படவுள்ளது.

Read More

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாரளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான 2 புத்தகங்களை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக, எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டை அடுத்து சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சர் கடந்த வௌ்ளிக்கிழமை (20) வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது ஒரு புத்தகம் வெளியிடப்பட்டதுடன், இன்று (23) மீண்டும் மற்றுமொரு புத்தகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் எது சரியான புத்தகம் என பாரளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். இரண்டு புத்தகங்களின்…

Read More

இதுவரை காலமும் எந்த அரசும் ஒதுக்காத நிதி கல்விக்கு

இதுவரை காலமும் எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத அளவுக்கு அதி கூடியளவு நிதியை நாம் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்  தெரிவித்தார். கடந்த பல தசாப்தங்களாக வருடா வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் நான்கு மடங்கு நிதியை நாம் இவ்வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். மாலபே முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு…

Read More

அப்பம் சாப்பிட்டுவிட்டு வரலாற்று தீர்மானம் எடுத்தேன்

இந்த நாள் எனக்கு மறக்க முடி­யாத நினைவு நாள். கடந்த ஆண்டு இதே­தி­னத்தில் அரசை விட்டு வெளி­யேறி ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கும் செய்­தியை வெளி­யிட்டேன். அதற்கு முதல் நாள் முன்னாள் ஜனா­தி­ப­தி­யுடன் ஒன்­றாக இணைந்து அப் பம் சாப்­பிட்டு விட்டு வர­லாற்றுத் தீர்­மா­ன த்தை எடுத்தேன் என நவம்பர் மாதம் 21 ஆம் திக­தியை நினைவு கூர்ந்தார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எனக்கு சிறப்­பான பின்­புலம் கிடை­யாது. பிர­புத்­துவ குடும்­பத்தை சேர்ந்­தவன் அல்ல. சாதா­ரண விவ­சாய குடும்­பத்தைச் சேர்ந்­த…

Read More

மீண்டும் அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன் – திஸ்ஸ

மீண்டும் அரசியலில் ஈடுபட எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி விஹாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட விரும்புகின்றேன். பல்வேறு அரசியல் தீர்மானங்கள் காரணமாக அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிட்டது. எனினும், அரசியலில் ஈடுபடவே விரும்புகின்றேன் என திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Read More

கூகுள் தேடுபொறியில் போக்குவரத்து தகவல்

கூகுள் தேடுபொறி போக்குவரத்து விபரங்களை வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். கூகுள் தேடுபொறியில் traffic  என குறிப்பிட்டு தேடுவதன் மூலம் இந்த வரைபடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின் மூலம் இதனை பார்வையிட முடியும். இந்த வரைபடத்தில்அதிக வாகன நெரிசல் கொண்ட பாதைகள் சிவப்பு நிறத்தாலும், வாகன நெரிசல் குறைந்த…

Read More

தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம் (Live)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் கன்னி, வரவு-செலவுத்திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது. 04.22 PM – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும். 04.20 PM – இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும். 04.18 PM – எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு. 04.16 PM – புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம். 04.13 PM – 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி. 04.09 PM…

Read More

கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

ஊழல் மற்றும் மோசடி செயற்பாடுகளில் தொடர்புடையவர்களைத் தண்டிக்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜே.வி.பி. யின் முக்கியஸ்தர் வசந்த சமரசிங்க தலைமையிலான ஊழல், மோசடிகளுக்கு எதிரான குரல் என்ற அமைப்பு இந்த ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் 23ம் திகதி மாலை நான்கு மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More