Headlines

சந்திரிக்காவுக்கு, அமைச்சர் றிஷாத் அனுப்பிய கடிதம்

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றுவதன் மூலம், அப்பிரதேச மக்களும், வர்த்தகர்களும் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும், அதேவேளை இப்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் வந்து குடியமர முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன், தேசிய ஐக்கியம், மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அமைப்பின் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர் றிஷாத்…

Read More

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்குமாறு பிரபல அமைச்சர்கள் கோரிக்கை

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சில அமைச்சர்கள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவன்காட் பிரதானி எனக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எவரிடம் இருந்தும் தேர்தலுக்கான நிதி அல்லது இலஞ்சம் கோரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்து…

Read More

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளின் கண்காணிப்பு பணிகளுக்காக புதிய குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தினால் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 6 மாதங்களாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாராளுமன்ற பாதுகாப்பு வீதித்தடைகளை உடைத்த நடிகை..!

பிரபல நடிகை ஒருவர் நாடாளுமன்ற விதியில் அமைக்கப்பட்டள்ள பாதுகாப்பு வீதித்தடைகளை உடைத்துக்கொண்டு வாகனத்தைச் செலுத்திக் சென்றுள்ளார். தொலைக்காட்சி நாடகமொன்றின் படப்பிடிப்பு பூர்த்தியாகி நேற்று அதிகாலை நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை வழியாக குறித்த நடிகை வாகனத்தில் சென்றுள்ளார். அதிக வேகமாக சென்ற குறித்த நடிகை வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு சென்றுள்ளதுடன், சில பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கோன்களுக்கும் சேதம் விளைவித்துள்ளார். நாடாளுமன்றிற்கு பிரவேசிக்கும் ஜயந்திபுர பிரதான வாயில் பகுதி இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும். குறித்த நடிகை, மோட்டார் வாகனத்தை அதிக…

Read More

ராவணா பலயவுக்கு ஆதரவளித்தால் நல்லாட்சி கவிழும்

மஹிந்த ராஜபக்ஷ அரசு பொதுபல சேனா என்ற பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொ டுத்து அரவணைத்தது. அதன் விளைவை இன்று ராஜபக்ஷ அனுபவிக்கின்றார். இன்று ராவண பலய என்ற பாம்பு படம் எடுத்து ஆட முற்படுகின்றது. இவ் நல் லாட்சியில் ராவண பலய எனும் பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொடுத்து அரவணைக்க முற்பட் டால் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் நிச்சயம் கவிழ்க்கப்படும்…

Read More

வைத்தியசாலைக்கு தனியாகச் சென்ற ஜனாதிபதி

சிகிச்­சைக்­காக கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள காணி அமைச்சர் கே.டி.எஸ். குண­வர்­த­னவை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன பார்­வை­யிடச் சென்றபோது பிடிக்கப் பட்ட படமே இது. இதன்போது அவர் பாது­காப்பு பிரி­வி­னரை அழைத்துச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

அரசாங்கத்துடன் இணையவுள்ள நான்கு ஐ.ம.சு.மு. எம்.பி.க்கள்

தேசிய அர­சாங்­கத்தின் வரவு – செலவுத் திட்ட பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து அர­சாங்­கத்­துடன் இணைந்துகொள்­வ­தற்கு ஐக்கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தீர்­மா­னித்­துள்­ள­னர். இந்த நான்கு பாரா­­­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ரு­மான மலிக்­ ச­ம­ரவிக்கி­ர­ம­வுடன் இது­தொ­டர்­பாக இரண்டு சுற்று பேச்­சு­வார்த்தைகளை நடத்­தி­யுள்­ள­னர். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் இந்த நான்கு பாரா­­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது தீர்­மா­னம் குறித்து அமைச்சர் மலிக் சம­ர­விக்கி­ரம பிர­­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விடம் அறி­வித்­துள்­ளார்.ஜ­னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அனு­ம­தியின்…

Read More

பாடசாலை மாணவர்களே புகைப் பரிசோதனை கட்டணத்தை செலுத்த வேண்டும்

புகைப் பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்று மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. மூன்று வருடகளுக்கு பழைமையான வாகனங்களுக்காக வருடாந்த வாகன அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளும்போது புகைப் பரிசோதனை கட்டமாக வருடாந்தம் 5,000 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமான அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

Read More

இலங்கை விவகாரத்தில் ஒபாமா அக்கறை

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா இலங்கை விவ­கா­ரத்தில் அதீத அக்­கறை செலுத்­து­வ­தாக தெரி­வித்­துள்ள ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­த­ர­ வ­தி­வி­டப்­ பி­ர­தி­நிதி சமந்தா பவர், இலங்­கையில் தற்­போ­து­வ­ரையில் நல்­லி­ணக்கம் முழு­மை­யாக கட்­டி­யெ­ழுப்­­ப­ப்பட­வில்­லை­யெ­னவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஐக்­கிய நாடு­க­ளுக்­கான நிரந்­த­ர வதி­வி­டப்­பி­ர­திநிதி சமந்தா பவர் மூன்று நாள் உத்­தி­யோக பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வரு­கை­தந்­துள்ள நிலையில் அவ­ரது விஜ­யத்தின் இறுதி தின­மான நேற்று இலங்­கையின் எதிர்­கா­லத்தின் தூண்­க­ளாக காணப்­படும் இளைஞ சமு­தா­யத்­தி­ன­ருடன் கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்டார். கொழும்பில் ஒரு­மணி நேர­மாக இடம்­பெற்ற…

Read More

வரவு – செலவுத் திட்டம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்

அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டத்தில் பொது மக்களின் அபிலாஷைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனவா? இல்லாவிட்டால் மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளதா? என அறிந்து கொள்ள சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்து மாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்தை வலியுறுத்தினார். கொழும்பு பொரளை என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் சோஷலிச மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர்…

Read More

எவன்காட் நிறுவனத்தின் நடவடிக்கைகளில், தடங்கள் இல்லை

எவன்காட் நிறுவனத்தின் நடவடிக்கைகளில், கடற்படையினர் தலையிட்டமையினால் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளில் எந்தவித தடங்களும் இல்லை என்று கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது. இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது, அதன் தலைவர் பீ.ஐ. அப்டின் தெரிவித்தார்.

Read More