Headlines

நல்லாட்சி அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிப்பு

2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று பிற்பகல் 2 மணியளவில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளதோடு, வாசிப்பு மீதான விவாதம் 9 நாட்கள் நடைபெறவுள்ளது. வரவு – செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை வரவு – செலவுத்திட்டம் மீதான மூன்றாம் கட்ட வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் 3ஆம்…

Read More

பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் நாய்

பிரான்ஸ் தலைநகரம் பாரிசில் கடந்த 13–ந்தேதி இரவு ஐ.எஸ் கள் 8 பேர் பல இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 129 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நானூறு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க நடந்த போராட்டத்தின்போது, டீசல் என்ற ஏழு வயது போலீஸ் நாய் உயிரிழந்தது. டீசல் என்ற இந்த பெல்ஜியன் ஷெப்பர்டு நாய் உயிரிழந்த செய்தியை பிரென்சு போலீசார் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். பாரிஸ் தாக்குதலுக்கு தலைமை ஏற்று செயல்பட்ட…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப சந்தர்ப்பம்

நாடாளும்னற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரிடம் நேரடியாக கேள்விகளை எழுப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பிரதி வியாழக்கிழமை தோறும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆம்பமாகி முதல் அரை மணித்தியாலயம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழக்கூடிய எந்தவொரு கேள்வியையும் பிரதமரிடம் கேட்க முடியும். முன்னதாக இந்தக் கேள்விகளை பிரதமர் அலுவலகத்திற்கு…

Read More

இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்

இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்திற்கு தலைமைதாங்கவுள்ளார். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளைää இன்று பிற்பகல் நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் வரவு செலவுத் திட்டம் நிதி…

Read More

அவன்ட்கார்ட் விடயம்! மேற்கு வங்காள புருலியா ஆயுத இறக்கல் சம்பவத்தை நினைவூட்டுகிறது

இலங்கையில் இன்று சர்ச்சைக்குரியதாக விடயமாக கருதப்படும் அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் இந்தியா தமது கவனத்தை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்தியா, இந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி கேட்டுள்ளார். இந்த விசாரணைகளுக்கு இலங்கையின் அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியாவின் விசேட படை நடவடிக்கைகளுக்கான முன்னாள் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் கட்டொக் தெரிவித்துள்ளார்….

Read More

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்

– அலுவலக செய்தியாளர் – பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியின் போது விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய…

Read More

மதுகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் கண்ட இடத்தில் கைதுசெய்வதற்கான வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது களுத்துறை வெளிபென்ன பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரைக்குள் பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்தியதால் ஞானசார தேரர் தேர்தல் சட்டங்களை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது. பிரச்சாரக் கூட்டத்தை பொது இடத்தில் நடத்துவதற்கு பொதுபல சேனாவிற்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும் முன்னறிவித்தல் எதுவுமின்றி பிரச்சாரக்கூட்டத்தின் இடத்தை மாற்றியதாக வெளிபென்ன பொலிஸார் நீதிமன்றத்தில்…

Read More

திஸ்ஸமகாரம  குடிநீா்த்திட்டத்திற்கு 3930 மில்லியன் நிதி ஒதுக்கீடு

– அஷ்ரப். ஏ. சமத் – “நேற்று அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும்போது திஸ்ஸ மகராம மக்கள் பருகும்  அசுத்த நீர் குப்பிகளைக் கொண்டு சென்று  முழு அமைச்சரவைக்கும்  காட்டினேன். இப்பிரதேசத்தில் சிறுநீா் நோய்க்குள்ளாக்கப்பட்டுளள மக்கள் பற்றியும் உரையாற்றினேன்.   அதன் நிமிா்த்தம்  அமைச்சரவை உடனடியாக 3930 மில்லியன் ரூபாவை திஸ்ஸமகாரம  குடிநீா்த்திட்டத்திற்கு நிதி ஓதுக்கித் தந்தது”. என அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா். சஜித் பிரேமதாச இன்று(19) பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள அவரது  அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா்…

Read More

இலங்கையிலுள்ள தமிழ் பெயர்கள் அகற்றப்படும்: இராவணாபலய ஆவேசம் (2ம் இணைப்பு)

யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் ஊர்களின் பெயர்களையும் தாம் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்கும் வகையில் இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு இன்று சென்றிருந்தது. எனினும், ஜனாதிபதியை இன்று சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் இராவணாபலய அமைப்புக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து…

Read More

பொலநறுவை ஹோட்டல் ஒன்றில் நெதர்தலாந்து பிரஜை மரணம்

பொலநறுவையில் வெளிநாட்டவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 65 வயதான நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழுந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலநறுவை புதிய நகர் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை!

சீனா – ஜப்பான் இடையே பல தீவு கூட்டங்கள் உள்ளன. இவை ஜப்பானுக்கு சொந்தமானவை. ஆனால், அவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் சீனாவின் தெற்கு கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ், கொரியா நாடுகளுக்கு சொந்தமான இடங்களையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் அந்த நாடுகள் இடையே பதட்டமன நிலை நிலவி வருகிறது. ஜப்பான், பிலிப்பைன்ஸ், கொரியா நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இதனால் அமெரிக்கா– சீனா இடையே பனிப் போர் நிலவி வருகிறது. இந்த…

Read More

திலக் மாரப்பனவின் பதவி விலகல் மிகச்சிறந்த முன்னுதாரணம்: மங்கள சமரவீர

முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பனவின் பதவி விலகல் அரசியலில் மிகச்சிறந்த முன்னுதாரணம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, அவண்ட் கார்ட் விவகாரத்தில் அரசாங்கம் கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ள இருந்தது. அக்கட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாரப்பனவின் ராஜினாமா அரசாங்கம் மீது அழுந்திக் கொண்டிருந்த நெருக்கடியைத்தணிக்க உதவியது. அந்த வகையில் அவரது செயற்பாடு பாராட்டத்தக்க ஒரு முன்மாதிரியாகும். நாட்டுக்கு நல்லதோர் முன்மாதிரியை வழங்குவதற்கு…

Read More