Headlines

கொழும்பில் ஆர்ப்பாட்டம்!




ஊழல் மற்றும் மோசடி செயற்பாடுகளில் தொடர்புடையவர்களைத் தண்டிக்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. யின் முக்கியஸ்தர் வசந்த சமரசிங்க தலைமையிலான ஊழல், மோசடிகளுக்கு எதிரான குரல் என்ற அமைப்பு இந்த ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் 23ம் திகதி மாலை நான்கு மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *