Main News
வர்த்தகர் ஷியாம் வழக்கின் தீர்ப்பு இன்று
கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. 2013 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2013 மே மாதம் 23ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொஹமட் பவுஸ்டீன் முத்தலீப். கம்மத…
நான் இஸ்லாமியன் என்ற போதும், எனது பணி சகல சமூகத்திற்குமுரியது – அமைச்சர் றிஷாத்
– அபூ அஸ்ஜத் – “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது. மார்க்கத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும், எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன்”. என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர். அதனை பேசுவதற்கு முன்னர் புத்திசாதுாரியமாக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்…
வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக அமைச்சர் றிஷாத் மீண்டும் நியமனம்
வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக மீண்டும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஐனாதிபதியினால் மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கடந்த அரசாங்கத்திலும் வட மாகாண அபிவிருத்திக்குழு தலைவராக இருந்ததுடன் பல அபிவிருத்தித்திட்டங்களையும் வெற்றிகரமாக செய்து முடித்தார். நல்லாட்சி அரசாங்கத்திலும் 100 நாள் திட்டத்திலும் வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக செயற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மீண்டும் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால்…
மோல்டா எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இரண்டு முக்கியஸ்தர்கள்
நான்கரை லட்சத்துக்கும் குறைவான சனத்தொகையை கொண்ட அழகிய தீவே மோல்டா. இந்த மோல்டா தீவிலேயே இம்முறை பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு வெகு கோலாகலமாக நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மாத்திரமன்றி, பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற 53 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் முக்கிய இரண்டு பிரதிநிதிகளின் வருகைக்காக காத்திருக்கின்றனர். இந்த மாநாடு மோல்டா தீவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. மோல்டா தீவை எதிர்பார்த்து காத்திருக்கும் இரண்டு முக்கியஸ்தர்கள்…
கைதிகள் விடுதலையால் பாதுகாப்பிற்கு பிரச்சினையில்லை
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவது தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையல்லவென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டு விடுவிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகன புகை பரிசோதனைக்கு கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது
புகை பரிசோதனை பத்திரம் வழங்குவதற்காக அறவிடப்படும் தொகை அதிகரிக்கப்படவில்லை என லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கபட்ட தொகை புகை பரிசோதனையின் போது அறவிடப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
சிங்களவர்களை பற்றி நல்லாட்சி அரசு எதனையும் பேசுவதில்லை: ஞானசார தேரர்
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் இருக்கும் பலருக்கு சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பாரிய தேவை இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது மிகவும் துரதிஷ்டவசமானது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பிரச்சினைகள் என்பது சிறுபான்மை இனத்தவருக்கு மாத்திரம் இருப்பதில்லை சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் பற்றி நல்லாட்சி அரசாங்கம் எதனையும் பேசுவதில்லை. புத்தசாசனத்திற்கு அமைச்சர்கள் இல்லை. பொறுப்பான…
மாணவர்கள் மீதான தாக்குதல்: இன்று தீர்ப்பு!
தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்ப்பு இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது. தேசிய உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த 5ம் திகதி மாணவர்களினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை நடத்தி செய்யப்பட்ட பரிந்துரைகள் தெடர்பில் இன்றைய தினம் தேசிய…
கோத்தபாய பாரிய நிதி மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னம்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாரிய நிதி மோசடிகள் விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார். சற்று முன்னர் அவர் இவ்வாறு ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ரக்னா லங்கா மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுபல சேனாவிற்கும் ஐ.எஸ்.களுக்கும் தொடர்பு கிடையாது: புலனாய்வுப் பிரிவு
பொதுபல சேனா அமைப்பிற்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் தொடர்பு இருப்பதாக உலமா அமைப்பு அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஓவர் டேக் பண்ணும் சாரதிகளுக்கு எதிராக வழக்கு!
பாதையின் வெள்ளை நிற கோடுகளால் குறிப்பிடப்பட்டிருக்கும் வரிசையை மீறி, பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.நாளை (26) மு.ப 6.00 முதல் இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஶ்ரீ ஜயவர்தனபுர வீதியின், ஜயந்திபுரவிலிருந்து கொழும்பு வரையான வீதியில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இச்சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர, கொழும்பை நோக்கிய ஏனைய வீதிகளிலும் இது அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது…
வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு
தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் காசோலை கையளிக்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுமார் 45 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீட்டுத் தொகையினை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கையளிக்கவுள்ளார்
