Main News
அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்த்து இராவணா பலய ஆர்ப்பாட்டம்
– அலுவலக செய்தியாளர் – அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ள இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் என கூறப்படுவோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அவர்களை விடுதலை செய்வது தவறு எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலி அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதன்…
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது 116 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் மீதமுள்ளவர்களை விடுதலை செய்யமுடியாது. அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை. அவர்களை சமூகமயப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தை இன்னும் வைத்திருப்பதில் அர்த்தம் கிடையாது. குறித்த தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச பயங்கரவாதிகளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின்…
வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்
வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார். இந்த வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவளிப்பது என சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும். தேசிய ரீதியில் முக்கியமான தீர்மானங்களை…
பிரதமர் பதவிக்காகக் களமிறங்கமாட்டேன்! ஜனாதிபதி
ரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி பதவிக்காக மீண்டும் நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். ஒரு தடவை மாத்திரமே அந்தப் பதவியை வகிப்பேன். அத்துடன், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் நான் பிரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடுவேன் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவ்வாறானதொரு எண்ணம் எனக்குக் கிடையாது. மக்களுக்கு…
விசாரணையில் இன்று பங்கேற்க முடியாது! மஹிந்த
ஐடிஎன் பணநிலுவை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தமது 70வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கண்டிக்கு வழிபடுகளுக்காக செல்லவேண்டியுள்ளமையால் இந்த விசாரணையில் பங்கேற்கமுடியாது என்று அவர் அறிவித்துள்ளார். தேர்தல் காலத்தின்போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபா நிலுவை செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் மஹிந்த கடந்த நான்கு தடவைகளாக பாரிய ஊழல் எதிர் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டார். எனினும் இன்று அவரின் சார்பில்…
இலங்கையுடன் உறவு தொடரும்: அவுஸ்திரேலியா
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையும் அவுஸ்திரேலியாவும் புரிந்துணர்வுடன் கூடிய உறவைக் கொண்டிருக்கின்றன. அவுஸ்திரேலியாவில் சுமார் 130, 000 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவின் அபிவிருத்திக்கு உறுதுணையாக செயற்பட்டு வருகின்றனர் என்றும் பிஸப் குறிப்பிட்டுள்ளார்’
தமயந்தி ஜயரத்னவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பு
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை எவன்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்று கொள்வதற்காகவே அழைப்பட்டுள்ளார்.இதற்கிடையில் எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளைய தினம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக ஆணைக்குவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாக்குவாதம் செய்த தயாசிறி – வெல்கம
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ.சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் கடுமையாக வாக்குவாதப்பட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. விமல் வீரன்ச, தினஸ் குணவர்தன உள்ளிட்டவர்கள் அண்மையில் குருணாகல் மாவட்ட சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற அரசியல்வாதிகளை சந்தித்து தனித்து போட்டியிடுவது குறித்து பேசியுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்….
நல்லாட்சிக்கமைய செயற்படுகின்றேன்: நிமல் சிறிபால
நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் நல்லாட்சிக்கமைய செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று போக்குவரத்து தொழிற்சங்கங்க பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி பதுளை எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது தற்போது வரையில் நல்லாட்சியில் எதுவும் மீதமில்லை, நல்லாட்சி என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டது மட்டுமே நடந்துள்ளது. தனிக்கட்சி…
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்குவது நல்லது
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்த தீர்மானம் சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று அனுராதபுரத்தில் தனது 70 ஆவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். பிறந்த நாளுக்கென்று மக்களுக்குத் தெரிவிக்க என்னிடம் எதுவும் கிடையாது. நான் எப்போதும் மக்கள் பக்கம் இருக்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை
புது வருடத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை வர்ததக, கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறைத்துள்ளார். . இதன்படி. மைசூர் பருப்பு ஒரு கிலோ 190 ரூபாவாகவும், கிழங்கு ஒரு கிலோ 145 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபாவாகவும் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனி ஒரு கிலோ 95 ரூபாகவும், கோதுமை மாவு ஒரு கிலோ 87 ரூபாகவும், டின் மீன் 140 ரூபாகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோல் அகற்றப்பட்ட கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபாவாகவும், பொதி…
அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தகத்தில் 13% அதிகரிப்பு!
“2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தகத்தில் எமது தரப்பில் 13% அதிகரிப்பை காணக்கூடியதாக இருந்தது” என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பு, கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற அமெரிக்க வர்த்தக கண்காட்சி 2015 (US Trade Show 2015) ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், எனக்கு கீழ் உள்ள வர்த்தக திணைக்களத்தின் படி அமெரிக்காவுக்கான, இலங்கையின் இன்றைய வருடாந்த தேசிய…
