Main News
அமைச்சர் றிஷாதின் நேற்றைய பாராளுமன்ற உரை
– ஊடகப்பிரிவு – நமது நாட்டின் கூட்டுறவுத்துறை சார்ந்தவர்கள் நேர்மையாக செயற்பட்டால் மாத்திரமே இந்தத்துறையில் நாம் முன்னேற்றம் காண முடியும் என்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கூட்டுறவுத் துறையில் பணிபுரிவோர் நேர்மையைக் கடைப்பிடிப்பதனாலேயே, அந்த நாடு இன்று கூட்டுறவுத்துறையில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று (27)மாலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டுறவுத் துறை தொடர்பான கேள்வியொன்றை எட்வேட் குணவர்த்தன எம்.பி பாராளுமன்றத்தில் எழுப்பிய போது அமைச்சர் றிஷாட் அதற்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு…
மைத்திரிக்கு ஆதரவு தெரிவிக்கும் சமல்!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றியடையச் செய்ய எனது முழு ஆதரவினையும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு வழங்குவேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (26) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தக் கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக குழு ஒன்றை நியமிக்குமாறும் சமல் ராஜபக்ஸ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் நிலவும் உட்பூசல்களைத் தடுக்க ஜனாதிபதியின் தலையீட்டின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்….
மெகா பொலிஸ் திட்டத்தில் எந்தவொரு கொம்பனும் தலையிட முடியாது – சம்பிக்க
மெகா பொலிஸ் அபிவிருத்தி செயற்திட்ட முன்னெடுப்புகளின் போது எந்தவொரு கொம்பனும் தலையிட முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மெகா பொலிஸ் அபிவிருத்தித் திட்டமானது நாட்டின் எதிர்கால நலனை உத்தேசித்து முன்னெடுக்கப்படும் ஒரு முக்கிய செயற்திட்டமாகும். இதன்போது ஒருசிலருக்கு சிற்சிறு பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. எனினும் அமைச்சுப் பதவிகள், பணபலம், ஊடகப் பின்புலம் என்பவற்றைக் கொண்டு யாரேனும் இச்செயற்திட்டத்திற்கு தடை போட முயன்றால் அவர்கள் தோற்றுப் போய்விடுவார்கள்….
மகப்பேற்றின் போது சிசுவின் தந்தைக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை
மகப்பேற்றின் போது சிசுவின் தந்தைக்கு மூன்று நாள் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனைவியின் பிரசவத்தின் போது கணவருக்கும் குறைந்தபட்சம் மூன்று நாள் விடுமுறை வழங்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி நட்டாசா பாலேந்திரா தெரிவித்துள்ளார். மகப்பேற்றின் போது தந்தையாருக்கும் விடுமுறை வழங்கும் இந்த நடைமுறைக்கான சட்ட அங்கீகாரத்தை வழங்கும் வரைவுத்திட்டமொன்றை அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது. பிள்ளை பிறந்ததன் பின்னர் தாயின் பொறுப்பிற்கு நிகராக தந்தைக்கும்…
முன்னாள் ஆட்சியாளர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளர் – மங்கள
வெளிநாட்டு தூதுவராலயங்களின் பிரதானிகளாக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் ஆட்சியாளர்களது முதன்மைக் குடும்பத்து உறவினர்கள் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். தூதுவராலயங்களுக்கு சொந்தமான கட்டடங்களை விற்பனை செய்து அந்தப் பணத்தை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி. யினால் முன்வைக்கப்பட்ட வெளிநாட்டு உடன்படிக்கைகளுடன் தொடர்புபட்ட பத்து நாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…
பெளத்தன் என்ற வகையில் வெட்கமாக உள்ளது – ரணில்
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தேரர்கள் சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் வளாகத்துக்குள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் சட்டத்துக்கு முரணானது என்றும், இதனால், பௌத்தனாக தான் வெட்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் மல்வத்தை பீடாதிபதி மற்றும் கோட்டையின் பிடாதிபதி ஆகியோருக்கு அறிக்கை…
ஞானசாரருக்கு விளக்கமறியல்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ்…
காலி முகத்திடலில் அழிக்கப்பட்ட யானை தந்தங்கள்
359 ஆபிரிக்க காட்டு யானைகளின் தந்தங்கள் காலி முகத்திடலில் இன்று (26) அழிக்கப்பட்டன. காலி முகத்திடலில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இந்த யானை தந்தங்கள் அழிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. சர்வதேச சுங்கத் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டார். வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். குறித்த காட்டு யானை தந்தங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிய வருகிறது….
பணிப்பெண்களுக்கான பயிற்சிக்காலம் நீடிப்பு
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் பணிப்பெண்களின் பயிற்சிக் காலம் 40 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் ஆரோக்கியத்தன்மை மற்றும் அதன் கால அளவு தொடர்பாக ஆராய்ந்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் உபுல் தேஷப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இதுவரை காலமும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக தொழிலுக்கு செல்பவர்களுக்காக…
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியைச் சந்திக்கவில்லை : நாமல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோக பூர்வமாகவோ அல்லது உத்தியோகப்பூர்வமற்ற வகையிலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தித்திருக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் புதல்வரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாமல் ராஜபக் ஷவுக்கும் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த வாரம் இடம் பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த செய்தியில், தனது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு வகையான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் ஐந்தாறு விசாரணைகளை எதிர்கொண்டுவிட்டதாகவும் நாமல் ரரஜபக்ஷ மைத்திரிக்கு…
மைத்திரி –மஹிந்தவை இணைக்க முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அடிப்படை செயற்பாடுகளை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க முன்னெடுத்து வருகின்றார். எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறவேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பணியாற்றவேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பிளர்கள் தெரிவித்துவருவதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் தலைமையில் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்…
இன்று முதல் யோசனைகளை வழங்கலாம்..!
தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்டவுள்ள புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க எதிர்பார்க்கும் இச்செயற்றிட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கைகள் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. அரசியல் அமைப்பு சாசனத்தில் பல்வேறு மாற்றங்களை உள்வாங்கும் நோக்குடன் தேசிய அரசாங்கத்தினால்…
